Wednesday 28 January 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்.........பகுதி 3.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்களை பற்றிய பதிவு இது.  பகுதி 3.  நடிகர் திரு அமிதாப் ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது.  ஜாதகத்தில் சனிக்கு விரயாதிபதி, லக்னாதிபதி என்ற இரு பதவிகள் ஏற்படுகின்றன.  இதில் சனி லக்னாதிபதியாக செயல்படுவதில் முக்கியத்துவம் ஏற்படுகிறது.  மகரமும், கும்பமும் ஆட்சி வீடு என்றாலும், கும்பம் சனிக்கு மூலத்திரிகோணம் என்ற சிறப்பை பெற்று மகரத்தை விட அதிக பலம் பெறுகிறது.  லக்னாதிபதி கேந்திரத்தில் நட்பாக இருப்பது சிறப்பு.  இதுவே சனி கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் சசயோகத்தால் பெரும் யோகம் தந்திருப்பார்.  எனவே சனி ஜாதகத்தில் நட்பாக இருந்தாலும், வேறுவகையில், சூட்சுமமாக வலு ஏற்றி, உச்ச பலத்திற்கு கொண்டுவர வேண்டும்.  சனியின் பார்வை லக்னம், களத்திரம், தொழில் ஆகிய நல்ல ஸ்தானங்களில் பதிகிறது.  சனிக்கு வேறு பாப கிரக தொடர்பு இல்லை.  எனவே திரு அமிதாப்பின் ஜோதிடர், அவரை நீலக்கல் அணியசெய்து, சனிக்கு மறைமுகமாக பலம் சேர்த்துவிட்டார்.  ஆகையால் சனி நல்ல யோகம் தந்து, ஜாதகரை வாழ்க்கையில் உயர்த்தியிருக்கிறது.  இப்படி கணித்து, ஜாதகருக்கு நல்ல யோகம் பெறசெய்வதே, அனுகூலசக்தி முறையாகும்.  அதாவது, ஒரு ஜாதகத்தில் நல்ல யோகம் தரக்கூடிய கிரகத்தின் பலத்தை ரத்தினக்கல்லால் பெருகசெய்து, ஜாதரின் வாழ்க்கையை வளப்படுத்தலாம்.

ஒரு ஜாதகத்தில் ராசியை வைத்து, அதற்குரிய ரத்தினத்தை அணிய வேண்டும் என்று பல ஜோதிடர்கள் மேலோட்டமாக சொல்லிவிடுகிறனர்.  அது கருத்து புழக்கத்துக்கு வந்து, பல ஜாதகர்கள் தாமாகவே ராசிக்கல்லை தேற்வு செய்துகொண்டு, அணிந்து அவதிக்குள்ளாகிறனர்.  திரு. அமிதாப்பின் ராசி துலாம்.  ராசிக்கல் என்ற வகையில் இவர் வைரத்தை அணிந்தார் என்று வைத்துகொள்வோம்.  அவரது வாழ்க்கை அதலபாதாளத்திற்கே சென்றிருக்கும்.  சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரன், அஷ்டமத்தில் நீசபங்கம்.  வைரத்தை அணிவதன் மூலம், சுக்கிரனின் வலுவை கூட்ட முடியும். சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரன் சூட்சுமமாக உச்ச பலம் பெறுவார். ஆனால் சுக்கிரனின் இருப்பிடமான அஷ்டமத்தை  மாற்றிவிடமுடியாது.  ஆகவே சுக்கிரன் தீய பலனை வைரத்தின் மூலம் அதிகரித்துவிடுவார்.  எனவே கண்மூடித்தனமாக ராசிக்கல் அணிவது பெரும் தவறாகும். இனி பிரதிகூல சக்திமுறையை பார்ப்பதற்கு முன் வைரக்கற்களை பற்றி ஒரு சில முக்கியமான செய்திகளை பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. 

ஜாதகர் அணீய வேண்டிய வைரத்தை தேர்வு செய்தபின், அவர் எந்த வர்ணத்தை சேர்ந்தவர் என்று தீர்மானிக்க வேண்டும்.  வர்ணத்தை பொறுத்து வைரக்கற்கள் வித்தியாசப்படுகின்றன.  ஆகவே வர்ணத்துக்குரிய வைரத்தை தேர்வு செய்தல் வேண்டும்.  வர்ணங்கள் நான்கு வகை.  ஜாதகரின் வர்ணம், ஜாதகப்படி அவர் மேற்கொள்ளும் கர்மாவை [ தொழில், நடத்தை, செயல் ] பொறுத்து அமைகிறது.  எனவே  வர்ணத்தை தசமஸ்தானமாகிய, கர்மஸ்தானத்தை வைத்து தீர்மானிக்க வேண்டும்.  நான்கு வகை வர்ணங்களும், அவைகளுக்குரிய கர்மாக்களும் பின்வருவன.........................

1.  பிராமணர்................வேதம் ஓதுதல், ஓதுவித்தல்,  அதாவது வேதம் தொடர்பான கர்மாக்களை மேற்கொள்ளுதல்.  2.  க்ஷத்திரியர்.  வீரத்தை அடிப்படையாக கொண்டு தேசபரிபாலனம் செய்தல்.  அதாவது நாட்டை ஆண்டு, நிர்வாகம் செய்தல்.  3.  வைசியர்.  வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபடுதல்.  அதாவது, அனைத்து வர்ணத்தாருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை வாணிகத்தின் மூலம் நிறைவேற்றித்தருதல்.  4.  சூத்திரர்.  மேற்கண்ட மூவர்ணத்தாரும், தங்கள் உரிமை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உறுதுணையாக இருத்தல்.  ஒவ்வொருவருக்கும் தான் பிறக்கும் குலத்தை ஒட்ட்டித்தானே வர்ணம் அமையும்! என்ற சந்தேகம் இப்போது எழலாம்.  இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments:

Post a Comment