Friday 30 May 2014

பெயர் சூட்டும் பெற்றோர்கான பதிவு இது. பகுதி. 1.



  ஓம் நமசிவாய.  அனையருக்கும் வணக்கம்.  பெயர் சூட்டும் பெற்றோர்கான பதிவு இது.  பகுதி. 1.    [ பாரம்பரிய முறை. ]  "ஓம்" என்று உச்சரிக்கும்போது எழும் ஒலியை ஓங்கார நாதம் என்பர்.  இந்த ஓங்கார நாத அடிப்படையில், பிரம்மா சிருஷ்டி செய்கிறார் என்று, வேதங்களும், இதிகாச புராணங்களும், அருளாளர்களின் வாக்குகளும் சொல்கின்றன.   ஒலி என்பது அவ்வளவு முக்கியத்துவமானது.    எனவே நமது முன்னோர்கள், ஒலிகளை வரையறுத்து, மந்திரங்களாக உருவாக்கி தந்தனர்.  அம்மந்திரங்களை உச்சரிக்கும்போது ஒலிகள் மாறினால் அம்மந்திரங்கள் பயனற்றுப்போகின்றன.  வரையறைக்கு உட்பட்ட ஒலிகளை உச்சரிக்கும்போது நல்ல விளைவுகள் உண்டாகின்றன.  இப்படிப்பட்ட நல்ல ஒலிகளை சீர்படுத்தி வரையறுத்து அஅவற்றை தெய்வங்களுக்கு நம் முன்னோர்கள் பெயர்களாக சூட்டியுள்ளனர்.  அவைகளை உச்சரிக்கும்போது, நாம் நல்ல விளைவுகளை உண்டாக்கக்கூடிய மந்திர ஒலிகளை ஒலிக்கச் செய்தவர்களாகிறோம். 

     இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான், நக்ஷத்திரங்களுக்கு உண்டான ஒலிகளை, ஞானத்தால் உணர்ந்து,  நம் முன்னோர்கள் எழுத்து வடிவத்தில் உருவாக்கியுள்ளனர்.  ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் என்ற வகையில், பாதம் ஒன்றுக்கு ஒரு ஒலி வீதம் 4 ஒலிகளை ஒரு நக்ஷத்திரத்திற்கு தந்துள்ளனர்.  அந்தந்த நக்ஷத்திர பாதங்களில் பிறந்தவர்களுக்கு அந்தந்த பாதத்திற்குரிய ஒலிகளின் அடிப்படையில்  பெயர் வைத்து அழைக்கும்போது அவ்வொலிகள் நல்ல விளைவுகளை உண்டாக்கும்.  அதிலும் தெய்வங்க்களின் பெயரை சூட்டும் போது மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்குகிறது.   எனவே ஜனன ஜாதகத்தை கணிக்கும்போது, பாதபேதம், பாத சந்தி வராமல் கணிப்பது மிகமிக அவசியமாகிறது. 

     தற்காலத்தில் ந்யுமெராலஜி படி பெயர் சூட்டுகின்றனர்.  எனவே ந்யுமெராலஜி சம்பந்தமான ஒரு சிறிய விளக்கம் காண்போம்........................................ஒலிகளின் அமைப்பை தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு சக்தி உண்டென்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு, எண்களுக்கும் சக்தி உண்டென்பது ஒப்புக்கொள்ளப்படவேண்டிய விஷயம்.  ஆனால் அதை நாம் முறையாக பயன்படுத்துவதில்லை.  உதாரணத்திற்கு ஒரு குழந்தை, 21.08.2013 அன்று பிறந்ததாக வைத்துக்கொள்வோம்.  அந்த தேதியின்படி பிறந்த எண். 3.  [ பிறந்த தேதியை தனித்தனியே கூட்டினால், அதாவது 2 + 1 = 3. என்று வரும். ]  இந்த தேதியின் கூட்டு எண். 8.  [  பிறந்த தேதியின், தேதி, மாதம், வருஷம் ஆகியவற்றின் எண்களை தனித்தனியே கூட்டினால் 17 வரும்.  அதையும் தனித்தனியே கூட்டினால் 8 வரும். ]  இந்த 3, 8 அடிப்படையில் பெயரை வைத்துவிடுகிறார்கள்.  இதே ந்யுமெராலஜி ஜோதிடம் 3 க்கும், 8 க்கும், கிரகங்களை வகுத்து சொல்லியுள்ளது.  அந்த கிரகங்கள் நம் ஜாதகப்படி துஸ்தானங்களில் இல்லாத பூரண யோகதிபதிகளாக இருந்தால் சரி.  ஒரு வேளை பாதகாதிபயாகிவிட்டால் என்ன செய்வது?.............விளைவுகள் ஏறுக்குமாறாகிவிடும்.    எனவே நீங்கள் மேற்கத்திய முறைபடி பெயர்சூட்டும்போதும், நம் இந்திய முறையை அனுசரித்தே ஆகவேண்டும். 

     ஆகையால் பெயர் சூட்டும்முன் ஒரு நல்ல ஜோதிடரை அணுகி, குழந்தையின் நக்ஷத்திர பாதத்தை அறிந்து, அதற்கேற்ற ஒலியுள்ள எழுத்தை தேர்வு செய்யுங்கள்.  கூடியமட்டும் அந்த எழுத்தின் ஒலி பெயரின் முதலில் வருமாறு அமைத்துக்கொள்ளுங்கள்.  அதன் பின் ஜாதகப்படி யோக கிரகத்தை தேர்வுசெய்து, பின் மேற்கத்திய முறைபடி அந்த கிரகத்தின் எண் கூட்டுத்தொகையாக வருமாறு அமையுங்கள்.  அந்த பெயர் அவசியம் தெய்வத்தின் பெயராக இருக்கவேண்டும்.  இதுவே சரியான வழி முறையாகும். அல்லது அறவே மேற்கத்திய முறையை மறந்துவிடுங்கள். அடுத்த வாரம் பகுதி 2 என்ற பதிவில் தொடர்ந்து ப்ரொனாலஜி பற்றிய சிறு விளக்கத்துடன், ந்யுமெராலஜி இணைந்த, நம் இந்திய ஜோதிட முறைபடி பெயர் சூட்டுவதை பற்றி, ஒரு உதாரண ஜாதகம் வாயிலாக பார்க்கலாம். .............தொடரும்.......................... 

Friday 9 May 2014

சூரியன் இயற்கை பாபரா? [ சுபாவ அசுப கிரகமா? ]



 ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  சூரியன் ஏன் இயற்கை பாபக்கிரகம்?  [ சுபாவ அசுபர் ] என்பதை சிந்திக்கும் பதிவு இது.  ஒரு ஜாதகத்தில் சூரியன் சுபர் என்றால் நன்மை செய்வார் என்றும், அசுபர் என்றால் தீமை செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.  இது ஸ்தானாதிபத்தியத்தை அடிப்படையயாக கொண்டு சொல்லப்படுவது.  சூரியன் சுப ஸ்தானத்திற்கு அதிபதியானால் அவர் சுபர்.  சுப ஸ்தானம் என்பது கேந்திர, திரிகோனங்கள்.  அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியானால் அவர் அசுபர்.  3. 6. 8. 12  என்பவை அசுப ஸ்தானகள்.   இப்படி சுபர், அசுபர் என்பதை ஜாதகம் தீர்மானிக்கிறது.

  ஆனால் உலகில் எத்தனை கோடி ஜாதகங்கள் இருந்தாலும் அத்தனையிலும் சூரியன் இயற்கை பாபராகவே கருதப்படுகிறார்.  இந்த இயற்கை பாபதன்மையை, வான்வெளியில் நடக்கும் நிகழ்வுகள் தீர்மானிக்கின்றன.  இது ஜாதக கட்டத்தை அடிப்படையாக கொணதல்ல.  நம் முன்னோர்கள் கிரகங்களிலிருந்து வரும் கதிர் வீச்சுகளால் ஏற்படும் நன்மை தீமைகளை கணக்கிட்டு, கிரகங்களை சுபர் என்றும் பாபர் என்றும் பிரித்தனர்.  ஒரு செயல் என்றால் அதன் விளைவில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கும்.  கிரகங்களின் கதிர்வீச்சுகளால் நன்மையை விட தீமை அதிகம் விளைந்தால், அக்கதிர்வீச்சை தரும் கிரகம் இயற்கை பாபர் என்றும்,  தீமையை விட நன்மை அதிகம் விளைந்தால், அக்கதிர்வீச்சை தரும் கிரகம் இயற்கை சுபர் என்றும் பெயரிடப்பட்டன.  பாபக்கிரகத்திலிருந்து கிடைக்கும் கொஞ்சனஞ்சம் நன்மை கூட தடுக்கப்படும் போது அந்த செயலை என்னென்பது?  அந்த செயலை சூரியன் செவதால் சூரியனை இயற்கை பாபக்கிரகம் என்று நம் முன்னோர்கள் முடிவு செய்தனர்.  சூரியனை மற்ற கிரகங்கள் நெருங்குபோது ஏற்படும் அஸ்தங்கத நேரத்தில் இந்த செயலை சூரியன் செய்துவிடுகிறார்.

  1.  சூரியனுடன் சந்திரன் இணைந்து அஸ்தங்கதம் ஆகும் போது, சந்திரனால் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள், சூரியனால் பாதிப்படைகின்றன.  அந்த நாள் அமாவாசையாகும்.  அன்றைய தினம் சூரியனுடைய ஆற்றலுக்கு முன் சந்திரன் ஆற்றல் எடுபடாமல் போகிறது.  இதனால் அன்று பிறக்கும் அத்தனை லட்சோப லட்சம் குழந்தைக்ளுக்கும் சந்திரனால் கிடைக்க வேண்டிய நன்மைகள் தடுக்கப்படுகிறன.  இதனால் அன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளும் மனோபலம், நலம் இழந்தவர்களாகவே பிறக்கிறார்கள்.  நமக்கு ஒருனாள் அமாவாசை.  ஆனால் அந்த குழந்திகளுக்கு வாழ்க்கை முழுதும் அமாவாசை ஆகிவிடுகிறது.  இந்த பாபம் முழுதும் சூரியனையே சேரும். 

 2.  செவ்வாய் தீமை செய்யக்கூடிய இயற்கை பாப கிரகம்.  இந்த கிரகத்தால் விளையக்கூடிய ஒரு நன்மை உண்டு.  செவ்வாய் நல்ல வலுவுடன் இருந்தால் இரத்தம் நல்ல ஆரோக்கியமுடன் இருக்கும்.  ஆனால் அஸ்தங்கதம் என்ற பெயரில் செவ்வாயின் இந்த நன்மையை மறைத்து, கிடைக்கவிடாமல் செய்து, அப்போது பிற்ப்பவர்களுக்கு ரத்த பலக்குறைவுடன் பிறக்கஸ் செய்து அவதிப்பட வைப்ப்து சூரியன் என்றால் அது பாபச்செயல்லவா?

 3.  புதன்.  இந்த கிரகம் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கதம் ஆனால் புத்திக்கூர்மை இருக்காது.  சுருக்கமாக அறிவிலி என்று சொல்லலாம்.  சூரியனால் ஏற்படுத்தப்படும்  இத்தீய நிலையை அனுபவிக்கும் மனிதன் பாவமல்லவா?  இப்பொழுது சூரியனுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

 4.  குரு.  இந்த கிரகம் அஸ்தங்கதம் அடைந்த காலத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் மலட்டுத்தன்மை இருக்கும்.  அதுவும் பெண்ணக பிறப்பவர்களை எண்ணிப்பார்த்தாலே கவலையளிக்கிறது.  இதற்கு காரணமாகும் சூரியன் பாப கிரகம்தானே.  

 

 5.  சுக்கிரன்.  இவ்வுலகில் அன்பு, பாசம், காதல், கவர்ச்சி ஆகியவற்றை தரும் சுபக்கிரகம்.  இக்கிரகம் இல்லையென்றால் உலக லௌகீக இயக்கங்களே இல்லை.  உலகமே பாலைவனமாகிவிடும்.  அஸ்தங்கதம் என்ற பெயரால் இதன் நன்மை தரும் கதிர்வீச்சுகளை பறித்து அப்போது பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை பாலைவனமாக்கும் சூரியன் எப்படி சுபராவார்?

 அடுத்து சனி.  சனி என்றாலே எல்லோரும் நடுனடுங்கிப்போகும் இயற்கை பாப கிரகம்.  இதன் கதிர் வீச்சிலும் ஒரு நன்மை உண்டு.  சனி கதிர்வீச்சு முழுமையாக கிடைத்து, அது வலுவுடன் இருக்குமானால், மனிதனுக்கு தீர்காயுள்.  இந்த சனி அஸ்தங்கதம் அடைந்து, அதன் கதிர்வீச்சுகள் தடைபடுமானால், அப்போது பிறக்கும் அனைவரும் குறை ஆயுளுடன் பிறப்பார்கள்.  உலகில் அதிக தற்கொலைகள் நடப்பது, அற்பாயுளில் அவரவர்கள் மரணம் அடைவதும் அஸ்தங்கதம் என்ற நிகழ்வின் போது பிறந்தவர்களால்தானே.  இம்மாதிரியான துக்க நிகழ்வுகளுக்கு காரணமாகும் முக்கிய கிரக காரணங்களில், சனியின் அஸ்தங்கதமும் ஒரு காரணம்  என்பதையும் மறுக்க முடியாதல்லவா. 

  ஒரேஒரு கிரகம் அஸ்தங்கதம் அடையும் போது பிறக்கும் குழந்தைகளின் கதி இப்படியானால், சேர்ந்தற்போல் இரண்டு, மூன்று கிரகங்கள் அஸ்தங்கதம் அடையும் போது பிறப்பவர்களின்  வாழ்க்கையே அஸ்தங்கதம் என்றால் அது மிகையாகாது.  ஒரு பாபகிரகம் அஸ்தங்கதம் அடையும் போது அதன் பாபத்தன்மையும் தடுக்கப்படுவது நன்மை தானே என்ற எண்ணம் வரலாம்.  ஆனால் கிடைக்க இருந்த ஒரு நன்மையும் பறிபோகிறதே, என்பதையும் சிந்திக்க வேண்டும்.  எனவே இப்படி நன்மை, தீமை இரண்டும் கலந்த செயல் அஸ்தங்கத காலத்தில் விளைகிறது.  எனவே சூரியனை நம் முன்னோர்கள் அரை பாபர் என்றனர்.  மேலும் சனி, செவ்வாய் எனும் முழுபாபர்கள் மூன்று பார்வைகளால் நமக்கு கெடுதல் செய்கிறனர்.  ஆனால் சூரியன் ஒரேஒரு பார்வையால் மட்டுமே கெடுதல் செய்கிறார்.  இதனாலும் சூரியனை அரை பாபர் என்றனர்.  எவ்வளவுதான் ஒருவர் நன்மைகளை செய்தாலும், அவர் செய்யும் ஒரு சில தீமைகள் இந்த உலகத்தின் பார்வையில் முதலில் படுகிறது.  இந்த உலக பார்வைலிருந்தும் சூரியன் தப்பவில்லை.  நன்றி.. 
 

Tuesday 6 May 2014

சந்திராஷ்டமம் பற்றிய தகவல்களை கொண்ட பதிவு

     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  சந்திராஷ்டமம் பற்றிய தகவல்களை கொண்ட பதிவு இது.  சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்களை கொண்டது.  இந்த நாட்களில் புதிய முயற்சிகள், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடலாகாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.  நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் என்றைய தினம் சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாகும்.  அஷ்டமம் என்றால் எட்டு.  சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டில் இருப்பதாகும்.  இது அடிப்படை ஜோதிட இலக்கண விதியாகும்.  நமது முன்னோர்கள் ராசியை கருத்தில் கொண்டு சந்திராஷ்டமம் [ எட்டாவது ராசி ] என்று பெயரிட்டனர்.  எனவே சந்திராஷ்டமத்தை ராசி ரீதியாக பார்ப்பதே சிறந்ததாகும்.  தற்காலத்தில் பெரும்பாலான நாள்காட்டிகளில் நக்ஷத்திர ரீதியாக சந்திராஷ்டமத்தை கணக்கிட்டு கொடுத்துள்ளனர். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது.  அதில் பிழைகள் உள்ளன.  சந்திராஷ்டமம் பற்றிய விதி முறைகளை நாட்காட்டிகள் முழுமையாக ஆராயவில்லை.  அவைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

     1.  சந்திரன் இருக்கும் ராசியை குரு பார்த்தால் சந்திராஷ்டமம் கிடையாது.  இதில் குருவின் நேரடியான ஏழாம் பார்வை ஆகாது.  மற்ற ஐந்து, ஒன்பது ஆகிய பார்வைகள் தோஷத்தை நீக்கும்.  இந்த குரு பார்வை கணிதம் கோசரத்திற்கு மட்டும் பொருந்துவதாகும்.

     2.  சந்திராஷ்டம தினத்தன்று அமாவாசையாக இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.

     3.  தான் பிறந்த நக்ஷத்திரத்திலிருந்து 16, 18 வதாக வரும் நக்ஷத்திரத்தில் சந்திரன் இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.  16 வதாக வருவதை மைத்திர தாரை, அதாவது நட்பு நக்ஷத்திரம் என்றும் 18 வதாக வருவதை பரமமைத்திரம், அதாவது நெருங்கிய நட்பு என்றும் மேலும் சாதகமானது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.  17 வது நக்ஷத்திரத்திற்கு சந்திராஷ்டம தோஷம் உண்டு, என்பதால் நாள்காட்டிகள் அந்த 17 வது நக்ஷத்திரத்தை மட்டும் சந்திராஷ்டமமாக கூறியுள்ளன.  15, 19 வது நக்ஷத்திரங்களில் சந்திரன் இருக்குபோது அது அஷ்டம ராசியாக அமைந்தால் சந்திராஷ்டமமாகிவிடும்.  இதை கணக்கிட்டு சொல்லவேண்டுமானால் பாதசாரப்படி கணக்கிட்டு சொல்லவேண்டும். அவைகளை நாட்காட்டிகள் விட்டுவிட்டன.  இது பிழையாகும்.  மேற்கண்ட இரு விதி முறைபடியும் ஆராய்ந்து சொல்லப்பட வேண்டும்.  அதுவும் சொல்லப்படவில்லை.

     முடிவாக சந்திராஷ்டம நாட்களான இரண்டே கால் நாட்களிலும் எந்த விதமான சுபகாரியங்களையும், புதிய முயற்சிகளையும் செய்யாமல் ஒதுக்கிவிடுவது நல்லது.  அதே நேரம், வேறு வழியில்லாமல் செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்னிலை ஏற்படுகிறபோது, மேற்கண்ட விதி விலக்குகளை ஆராய்ந்து கொள்ளலாம்.   நன்றி.

Sunday 4 May 2014

கிரகங்களின் இரட்டை வேஷம்



      ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ",  பற்றிய பதிவு இது.  [ பாரம்பரிய முறை ].  சூரிய சந்திரர்களை தவிர மற்ற எல்லா கிரகங்களுக்கும் தலா இரண்டு வீடுகள் உள்ளன. ராகு கேதுவை விட்டு விடுங்கள்.  கிரகங்களுக்கு, இவ்விரண்டு வீடுகளில் ஒரே நேரத்தில்  ஒன்று சுப ஸ்தானமாகவும், இன்னொன்று அசுப ஸ்தானமாகவும் அமைந்து விடுவதுண்டு.   உதாரணத்திற்கு,, கடக லக்னத்துக்கு குருவுக்கு இரண்டு வீடுகளில் ஒன்றான தனுசு சத்ரு ஸ்தானம் என்ற அசுபமும், இன்னொரு வீடான மீனம் பாக்ய ஸ்தானம் என்ற சுபகாவும் அமையும்.  இதேபோல் சிம்ம லக்னத்துக்கு தனுசு, பூர்வபுண்ணிய ஸ்தானம் என்ற சுபமாகவும், மீனம் அஷ்டமம் என்ற அசுபமாகவும் அமைந்து விடுகிறது.  இப்படிப்பட்ட நிலையில் குரு அந்தந்த லக்னங்களுக்கு என்னவாக செயல்படுவார்?  இதே போன்ற நிலை இரண்டு வீடுகள் கொண்ட மற்ற கிரகங்களுக்கும் ஏற்படுவதுண்டு.  அப்போது அவைகள் என்ன ஸ்தானாதிபதியாக செயல்படும்?

     குருவுக்கு மீனத்தை விட தனுசில் பலம் அதிகம்.  மீனம் ஆட்சி வீடு.  அது போல் தனுசு ஆட்சி வீடு என்றாலும், மூலத்திரிகோண வீடு என்ற இன்னொரு சிறப்பும் சேர்ந்துவிடுகிறது.  எனவே அவர் கடக லக்னத்துக்கு சத்ருஸ்தானாதிபத்தியத்துக்கு முதலிடமும், சிம்ம லக்னத்துக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபத்தியத்துக்கு முதலிடமும் தந்து செயல்படுவார்.  அது போல் தசா புக்தி காலங்களில் குரு அசுப ஸ்தானாதிபளோடு இணையும் போது அசுப ஸ்தானாதிபதியாகவும், சுப ஸ்தானாதிபதிகளோடு இணையும் போது சுப ல்தானாதிபதியாகவும் செயல் படுவார்.  


அது போல்,  ஒரு கிரகம் நல்லவராகவும், கெட்டவராகவும் வரும் போது அந்த கிரகம் எந்த மாதிரி குணாதிசயத்துடன் செயல்படும்?  உதாரண்த்திற்கு, ரிஷபலக்னத்திற்கு சனி பாக்யாதிபதியாகவும்ம், பாதகாதிபதியாகவும் செயல்பட வேண்டும் என்பது ஜோதிட விதி.  சனி தசை நடக்கும்போது புதன் புக்தியில் சனி பாக்யாதிபதியாக செயல்படுவார்.  காரணம் புதன் பூர்வ புண்ணியம், துவிதியம் என்ற இரண்டு சுப ஸ்தானங்களுக்கு அதிபதி.  இப்படி சுப ஸ்தானாதிபதிகளுடன் இணையும் போது சனி பாதகாதிபதி.  இக்காலத்தில் குடும்பம் தழைத்து செழித்தோங்கும்.  அத்துடன் நெடுனாட்களாக எதிர்பார்த்து காத்து இருக்கும் புத்திர பாக்கியமும் நிச்சயமாக கிடைக்கும். 

     இதுவே. சனி தன்னுடைய தசைக்காலத்தில். புக்தினாதனாகிய சந்திரனுடன் இணையும் போது பாதகாதிபதியாக செயல்படுவார்.  காரணம் சந்திரன் திரிதிய ஸ்தானம் எனப்படும் அசுப ஸ்தானத்துக்கு அதிபதி.  இப்படி அசுபஸ்தான அதிபதியுடன் சேரும் சனி கெடுதலை செய்வார்.  இக்காலகட்டத்தில் ஜாதகர், மனோ தைரியம் மிகமிக பலஹீனமடைந்து புலம்பும் நிலைக்கு ஆளாஅகிவிடுவார்.  கிட்டத்தட்ட சித்தபிரமை பிடிக்கும் நிலை எனலாம்.  ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கும். 

    இப்படி இரட்டை வேஷம் போல்டும் கிரகாங்கள் எல்லா ஸ்திர லக்னங்களுக்கும் இவ்வாறாகவே செயல் படுகிறன.  சிம்ம லக்னத்துக்கு செவ்வாயும், விருச்சிக லக்னத்துக்கு சந்திரனும், கும்ப லக்னத்துக்கு சுக்கிரனும் இப்படி இரட்டை வேஷம் போட தவறுவதில்ல.  நன்றி.