Tuesday 6 January 2015

லக்னசந்தி, ஜனன நேரம் சரி செய்யும் வழிமுறை கொண்ட பதிவு. [ பாரம்பரிய முறை ] பகுதி 2.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  இது எனது முன்னோட்ட பதிவின் தொடர்ச்சி.  லக்னசந்தி, ஜனன நேரம் சரி செய்தல் தொடர்பான விளக்கங்களை கொண்ட பதிவு.  [ பாரம்பரிய முறை ].  முதலில், கொடுக்கப்பட்ட ஜனன நேரத்தை அடிப்படையாக கொண்டு நமக்கு தேவையான விபரங்களை சேகரிப்போம். 

  ஜனன நாளான 12.11.1984 அன்று சூரிய உதயம்.  காலை மணி 06.11.    கொடுக்கப்பட்ட ஜனன நேரம் இரவு மணி 02.26.  பிறந்த ஊர். முசிறி.  ஜாதகர் ஆண்.  சூரிய உதயத்திலிருந்து ஜனன நேரம் வரையிலான இடைப்பட்ட நேரம்.  20.15 மணி.நேரம்.  இதை நாழிகயாக்கினால் ஜனன உதயாதி நாழிகை கிடைக்கும்.  நாழிகை. = 50.38.  இந்த நேரத்தில் அமைகின்ற லக்ன கணிதம்.  சிம்ம லக்னம் முடியும் நாழிகை.  50.41.  கன்னி லக்னம் தொடங்கும் நாழிகை.  50.42.  ஜனன நேரத்தில் ஸ்திரி கால, புருஷ கால கணிதம்.  ஜாதகர் பிறந்த கிழமை.  தமிழ்படி.  ஞாயிறன்று புருஷ காலம் 50.00 நாழிகையில் தொடங்கி 51.25 ல் முடிகிறது.  [ இந்த புருஷகாலம், ஸ்திரிகாலம் பற்றி சிலர் மாறுபட்ட கருத்துக்க்ளை கொண்டிருக்கிறனர்.  அதை பற்றி கடைசியில் பார்க்கலாம். ]  இந்த புருஷ காலம் சிம்ம லக்னத்தில் தொடங்கி, கன்னி லக்னத்தில் முடிகிறது. 

திரட்டப்பட்ட தகவல்கலை வைத்துக்கொண்டு பார்க்கும்போது, ஜாதகர் ஆண் என்பதால், அவர் ஜனன நேரம் புருஷ காலத்தில் அடங்கிவிடுவதால், அதில் எந்த சந்தேகமுமில்லை.  ஆனால் லக்ன சந்தியால், சிம்மமா? அல்லது கன்னியா? என தீர்மானிக்க வேண்டியுள்ளது.  லக்ன சந்தியின், சந்தி தொடங்கும், காலம் முடியும் காலம் என்று காலத்தின் அளவு 20 வினாழிகையாகும்.  அதாவது லக்னம் முடியும் கடைசி 20 வினாழிகையும், அடுத்த லக்னம் தொடங்கும் முதல் 20 வினாழிகையுமாகும்.

எனவே அமைந்த லக்ன சந்தியில் எது சரியான லக்னம்? என்று அறிய, ஜாதக அலங்காரம் சொல்லும் சூத்திரம் ஒன்றை பார்க்கலாம்.  இது அந்த நூலில் 65 வது பாடலாக இடம் பெற்றுள்ளது.  சூத்திர விபரம்................................"  ஜனன உதயாதி நாழிகையை பன்னிரண்டால் வகுத்து ஈவை தள்ளிவிட்டு, மீதியை மேஷம் முதல் எண்ணிவர அதுவே லக்னமாக அமையும்.  அல்லது அதற்கு திரிகோண ராசிகளில் ஒன்று லக்னமாக அமையும்.  அல்லது எண்ணி வருகின்ற ராசிக்கு ஏழாம் ராசி லக்னமாக அமையும்.  அல்லது அதன் திரிகோண ராசிகள் லக்னமாக அமையும்.  "...............................இதன்படி ஜாதகரின் லக்னம் எது என்று காண்போம். 

சூரிய உதயம் காளை மணி. 06.11.  ஜாதகர் பிறந்தது. இரவு மணி. 02.26.  இடைப்பட்ட நேரம் 20.15 மணிநேரம்.  இதை நாழிகையாக்கினால் 50.38 என ஆகும்.  இதுவே ஜனன உதயாதி நாழிகையாகும். ஜனன உதயாதி நாழிகை 50.38 ஐ 12 ஆல் வகுத்தால் ஈவு 4 போக மீதி 2.38.  இதை முழுமையாக்கினால் 3.  இப்போது மேஷத்திலிருந்து எண்ண 3 ஆவதாக  மிதுனம் வரும்.  மிதுனத்தின் திரிகோணமாக சிம்மம் அமையவில்லை.  எனவே மிதுனத்தின் ஏழாம் ராசியான தனுசை எடுத்துக்கொள்வோம்.  தனுசின் திரிகோணமாக சிம்மம் அமைகிறது.  எனவே சிம்மலக்னம் சரியானது.  இனி ஒரு சோதனைக்காக கன்னி லக்னம் அமைகிறதா? என பார்க்கலாம்.  கன்னி லக்னம் இரவு மணி 02.27 க்கு தொடங்குகிறது.  லக்னசந்தி அதிகபட்சம் 02. 35 க்கு முடிகிறது.  எனவே ஜாதகர் பிறந்த நேரம் இரவு 02. 35 என்பதையே பிறந்த நேரமாக கொள்வோம்.  சூரிய உதயத்திலிருந்து, ஜாதகர் பிறந்த நேரம் வரையிலான இடைப்பட்ட நேரம்.  20.24 மணி நேரம்.   இதை நாழிகையாக்கினால்  51.00 என வரும்.  இதை 12 ஆல் வகுக்க ஈவு 4.  மீதி 3.    மீதி 3 ஆக வந்தால் பழையபடி சிம்மமே லக்னமாக அமையும்.  ஆகவே லக்ன சந்தி முடியும் வரை கன்னி லக்னம் அமைய வாய்ப்பே இல்லை.  எனவே உறுதியாக லக்னம் சிம்மமே என முடிவு செய்யலாம்.  ஜாதகர் பிறந்த நேரமும் இரவு. மணி 02.26 எனவும் முடிவு செய்யலாம்.  ஆகையால் கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் மிக சரியானதே.  ஜாதகர் இரவு மணி 02.35 க்கு மேல் பிறந்திருந்தால் அவருக்கு நிச்சயமாக கன்னி லக்னம் அமையும்.  எனவே ஜாதகர் இரவு மணி 02.27 முதல் 02.35 க்குள் பிறந்ததாக நேரம் கொடுத்தால், லகன சந்தி கன்னியில் அமைந்து, சிம்மம் என உறுதிப்படுத்தப் படுவதால், லக்னம் சிம்மத்தில் அமையுமாறு நேரத்தை இரவு மணி 02.26 அல்லது அதற்கு முன்பு வருமாறு மாற்றியமைத்து ஜாதகம் கணிக்க வேண்டும்.  இதுவே பிறந்த நேரத்தை சரி செய்யும் வழி முறையாகும்.  அது மட்டுமல்லாமல் இதுவே ஜாதகரின் சரியான பிறந்த நேரமுமாகும்.

இந்த தொடர் பதிவு இதோடு முடியவில்லை.  இந்த பதிவு சம்பந்தமாக மிச்சம்  மீதி இருக்கும் சந்தேகங்களும் நீங்க வேண்டுமல்லவா!.  எனவே மீண்டும் தொடர்கிறது.  ....................................நன்றி.

No comments:

Post a Comment