Tuesday 29 July 2014

இருதார தோஷம் ? யோகம் மற்றும் பரிகாரம் பற்றிய பதிவு இது. [ பாகம் 1. ].



 ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  இருதார தோஷம் ? யோகம் மற்றும் பரிகாரம் பற்றிய பதிவு இது.  [ பாகம் 1. ]. இந்த தலைப்பு எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் இப்படி சொன்னால்தான் புரிகிறது.  என்னை பொறுத்தவரை களத்திர தோஷம் என்றுசொல்ல வேன்டூம்.  ஆனால் ராகு, கேது களத்திர ஸ்தானத்தில் இருந்தால் களத்திர தோஷம் என்றுசொல்கிறார்கள்.  உண்மையில் அது நாக தோஷமாகும்.  இந்த குழப்பத்தை கடைசியில் தீர்த்துக்கொள்ளலாம்.  இப்போதைக்கு இப்படியே தலைப்பு இருக்கட்டும்.  களத்திர ஸ்தனாதிபதி விரயத்தில் இருந்தால், களத்திரம் விரயமாகும்.  அதாவது விவாக ரத்து, மரணம் ஆகிய காரணங்களால் களத்திரத்தை இழத்தல் என்று பொருளாகும். ஏன்? எவ்வகையில்? என்று அறிய கிரக பாத சாரம், கிரக பார்வை, கிரம நின்ற ஸ்தான பலம், போன்றவற்றை வைத்து அறியலாம்.   இதற்குபின் அடுத்த களத்திரத்தை தேடவேண்டி வரும்.  களத்திரம் என்றால் வாழ்க்கைதுணை.  இப்படிப்பட்ட அமைப்பு உள்ள ஜாதத்தை இருதார தோஷ ஜாதகம் என்று கூறிவிடுகிறனர்.  ஆண்களுக்கு மட்டும் இந்த அமைப்பு அமைந்தால் சரி.  பெண்களுக்கு அமையும் போது இருதார தோஷம் என்றால் பொருத்தப்படுமா??  எனவே இதை களத்திர தோஷம் என்பதே சரியாகும்.  இதற்கு பரிகாரமாக ஆணை ஒரு வாழைமரத்துக்கு தாலி கட்ட சொல்லி வெட்டி விடுகிறனர்.  இதில் எனக்கு உடன்பாடில்லை.  இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.  ஒரு தாரத்தை இழக்க வேண்டும் என்பது விதி.  எனவே வாழைமரத்தை தாரமாக பாவித்து தாலி கட்டி விடுகிறனர்.  பின் தாரத்தை இழக்கும் சடங்காக அதை வெட்டி விடுகிறனர்.  அதற்கு தேர்வு செய்யப்படுவது கன்னி வாழை.  அதாவது கன்று விடாத வாழை.  ஒரு மரத்தை மனிதன் நினைத்தால் அதன் விதையை ஊன்றி உருவாக்கலாம்.  அவ்வாறு மனிதனால் ஒரு வாழையை உருவாக்க முடியுமா?  ஒரு வாழை நினைத்தால்தான் ஒரு வாழைக்கன்றை உருவாக்கமுடியும்.  வம்ச விருத்தி என்பதை வாழை மற்றவர் முயற்சி இல்லாமல் தானே உருவாக்குகிறது.  இதனால் திருமணத்தின்போது வாழையை வாசலில் அடையாளமாக கட்டுகிறார்கள்.  இப்படி அநியாயமாக ஒரு கன்னி வழையை வீழ்த்திவிட்டு, பின் திருமணத்தில் மீண்டும் தன் நன்மைக்காக வாழையை தேடுவதென்றால் இது எவ்வள்வு சுயனலம்.  ஆகவே இதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. .இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.  ஆணுக்கு இந்த பரிகாரம் சரியென்று வைத்துக்கொள்வோம்.  பெண்ணுக்கு என்ன செய்வது?...............யோசிக்க வேண்டிய விஷயம். 

     முதலில் ஆணுக்குரிய தோஷ பரிகாரம் பார்க்கலாம்.  திருப்பைஞ்ஞீலி என்று ஒரு சிவஸ்தலம் உள்ளது.  வடமொழியில் ' ஞீலி ' என்றால் வாழை என்று பொருள்.  இங்கு வாழை மரங்கள் ஸ்தல விருக்ஷமாக விளங்குகின்றன.  நான் முன்பு சொன்ன வாழைமர பரிகாரம் இங்கு நடக்கிறது.  ஆனால் வாழை மரங்கள் வெட்டப்படுவதில்லை.  அதுபோல் திருவேள்விக்குடி என்று ஒரு சிவஸ்தலம் உள்ளது.  இங்கு கன்னிப்பதுமை ஒன்றுக்கு தோஷமுள்ள ஆணை வைத்து திருமண சடங்கை நிறைவேற்றுகின்றனர்.  பின் பதுமையை மூல ஸ்தானத்துக்குள் விட்டு விடுகிறனர்.  அவள் இறைவனோடு கலந்துவிடுகிராள் என்று பொருள். இவ்வகையில் முதல்க்ளத்திரத்தை ஆண் இழந்து விடுகிறான் என்று ஆகி விடுகிறது. இவையிரண்டும் ஏற்புடையதாக உள்ளது.  இப்பரிகாரங்கள் முடித்த ஆண் அதன்பின் ஒரு பெண்ணை தேடி திருமணம் செய்து கொள்ளலாம்.  ஜாதகப்படி இரு தார தோஷம் செயல்படுத்தப்பட்டு விடுகிறது. 

     இனி பெண்ணுகு எப்படி தோஷ நிவர்த்தி செய்வது என்று பார்க்கலாம். ஆண்களுக்கு அமைந்ததைப்போல பரிகார வழிபாடு செய்யும் திருக்கோவில் ஸ்தலங்கள் எதுவும் பெண்களுக்கு இல்லை.  தோஷம் தரும் கிரகத்துக்கு உண்டான பரிகார வழிபாடு செய்து அதன்பின் கிரக அதிதேவதா வழிபாடு மேற்கொள்வது நலம்.  தோஷம் தரும் கிரக புக்தி நடப்லிருந்தாலோ, அல்லது குறுகிய எதிர்காலத்தில் வருவதாக இருந்தாலோ அது முடியும் வரை காத்திருப்பது நல்லது.  தோஷம் தரும் கிரக தசை நடப்பிலிருந்தாலோ, அல்லது குறுகிய எதிர்காலத்தில் வருவதாக இருந்தாலோ, அதன் நடைமுறை காலத்தில், முன்பு சொல்லப்பட்ட வழிபாடுகளை செய்ய வேண்டும். .  இத்தகைய அமைப்பு உள்ள பெண்களுக்கு,, மனைவியை விட்டு பிரிந்து தொலைதூரத்தில் தொழில் செய்து வாழக்கூடிய கணவர்களே அமைகிறார்கள்.  இது என் அனுபவம்.  எனவே இத்தகைய ஆண் ஜாதகங்களை நான் இணைப்பது வழக்கம். சில ஜோதிடர்கள் முதல் தாலியை இறக்கிவிட்டுவிட்டு ' மறுதாலி ' கட்டுதல் என்ற சடங்கை செய்கிறார்கள்.  இது சாஸ்த்திரத்தில் சொல்ல்ப்படவில்லை.  இதை அவர்களாகவே செய்கிறார்கள்.  திருமணம் முடிந்த பின் இந்த அமைப்பு உள்ள பெண் என்று தெரிய வந்தால் இதை தவிர வேறு வழியில்லை என்பது அவர்கள் வாதம். பெண்ணுக்கு மறுமணம் செய்யலாம் என்ற ஆதரவு பெருகி வரும் காலத்திற்கு ஏற்ப இந்த வாதம் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும்.  இதை பற்றி மேலும் விவாதிக்க வேண்டுமென்றால் அதற்கு தனி கட்டுரையே எழுத வேண்டி வரும்.

     திருமண பொருத்தம் பார்க்கும் போது ' தோஷ சாம்யம் ' பார்க்க வேண்டும் என்று ஒரு அடிப்படை விதி உண்டு.  அதாவது ஒரு தோஷ ஜாதகத்தை அதே தோஷ ஜாதகத்தோடி இணைப்பட வேண்டும் என்பதாகும்.  இது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி இரு ஜாதகங்களை இணக்கும்போது இருவருக்கும் களத்திரம் விரயாமாகிவிடும்.  களத்திர ஸ்தானாதிபதிக்கு சுப சம்பந்தம் இருப்பின் பிரிவு என்பது இணக்கமாக, வருத்தம் தராததாக அமையும்.  இல்லையெனில் கருத்துவேறுபாடுடன், மனவருத்தமும் கூடும்.  ஆக இருவருக்கும் மறுமணம் என்பது உறுதியாகிவிடும்.  ஆனால் நான் முன்பு சொன்னபடி மறுமணம் என்பது ஒரு பொருட்டாகவே எதிர்காலத்தில் இருக்கப்போவதில்லை. 

     இவ்வகை களத்திர தோஷ கிரக அமைப்பானது, ஜாதகங்களில் ஆண், பெண் வித்தியாசமின்றி அமைவதால் இதை ஒரு தலையாக இரு தார தோஷம் என்பதை விட களத்திர தோஷம் என்பதே பொருத்தமானதாகும்.  இதுவன்றி இருதார யோகம் என்று ஒன்று உள்ளது அதை பற்றி இந்த கட்டுரையின் பாகம் 2 ல் பார்ப்போம்.  நன்றி. வணக்கம்.     

   

Monday 7 July 2014

சந்தியில் பிறந்தவர்களைப் பற்றிய பதிவு

சந்தியில் பிறந்தவர்களைப் பற்றிய பதிவு இது. அதாவது லக்ன சந்தி. ஒரு லக்னம் முடிந்து அடுத்த லக்னம் தொடங்கும். இந்த இரண்டு லக்னங்களும் சந்திக்கும் குறிப்பிட்ட நேரத்தை லக்ன சந்தி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. வாக்கிய கணிதம், லக்னம் முடியும் கடைசீ 20 வினாழிகையையும், லக்னம் தொடங்கும் முதல் 20 வினாழிகையையும் லக்னசந்தியாக குறிப்பிடுகிறது. திருக்கணிதம், லக்னம் முடியும் கடைசீ 4 நிமிஷங்களையும், லக்னம் தொடங்கும் முதல் 4 நிமிஷங்களையும் லக்ன சந்தியாக குறிப்பிடுகிறது. இது போன்ற சந்திகள் ராசிக்கும், நக்ஷத்திரங்களுக்கும் உண்டு. இப்படி லக்ன சந்தியில் பிறக்கும் ஜாதகர்களின் ஜாதகங்களை கணிப்பது சற்று கவனத்திற்குறியனவாகும். தவறினால் ஜோதிட பலன்கள் ஜாதகரின் வாழ்க்கையோடு பொருந்தாமல் போகலாம்.

( உதாரணம் )............... இப்படி லக்ன சந்தியில் பிறந்த ஒருவர் என்னை பார்க்கவந்தார். "இது தாங்க கடைசீ முறை. சரியில்லைன்னா. ஜாதகத்தை தூக்கி போட்டுடுவேன். எழுதுரவங்களும் சரியில்ல. சொல்றவங்களும் சரியில்ல." என்று அலுத்துக்கொண்டார். ஜாதகம் மேஷ லக்னம். நான் அவர் நடை, உடை, பாவனை, கடந்த கால நிகழ்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிஷப லக்னத்தோடு பொருத்தி பார்த்த போது சரியாக இருந்தது. எனவே, ரிஷப லக்னத்தை முதலாக கொண்டு எதிர் கால பலனை சொன்னேன். மேலும் ஜாதகத்தையும் ரிஷப லக்னமாக, சந்தி நேரம் வராத படி கணித்து தந்தேன்.
இன்று அவர் ஜோதிட விசுவாசி. கணிக்கும் போது அவர் ஆஸ்பத்திரியில் பிறந்த நேரத்திற்கு, லக்ன நேரம் நெருக்கமாகவும், அதே நேரம், அது புருஷ, ஸ்திரீ காலத்திற்குள் அடங்குமாறும் பார்த்துக்கொண்டேன்.

இதே போல் ராசி, நக்ஷத்திர சந்தியாலும் சிக்கல்கள் எழுவதுண்டு. இவ்விரண்டை கொண்டுதான் விவாஹ தச வித பொருத்தம் பார்க்கப்படுகிறது. சந்தி சரிபார்க்கப்படாமல் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போது, அது ஏறுக்குமாறாக அமைந்து ஜாதகரின் வாழ்க்கையே தடம் புரண்டு போவதுண்டு.

எனவே இவ்வகை ஜாதகம் அமையப் பெற்றவர்கள், ஜாதகத்தையோ, ஜோதிடரையோ வெறுத்து ஒதுக்காமல், நல்ல திறமையான, அனுபவமுள்ள ஜோதிடரை அணுகி, சந்தியை சரி செய்துகொண்டால், அதன் அடிப்படையில் ஜோதிடம் பார்த்து எதிர் கால வாழ்க்கையை நிம்மதியாகவும், ஒளிமயமாகவும் அமைத்துக்கொள்ளலாம். அவ்வகை ஜாதகர்களுக்கு நல்ல ஜாதகம் அமைத்து தருவதும் நமது கடமையாகும் என்பது எனது கருத்தாகும்.