Friday 21 August 2015

" செய்வினை தோஷம் ", முதல் பதிவு



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம்.  " செய்வினை தோஷம் ", பற்றிய பாரம்பரிய முறையிலான முதல் பதிவு இது.  இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகர்கள், தன்னுடைய கவலை தோய்ந்த முகத்தோடு, சில நேரம் கண்ணீரோடும், நடந்ததை விவரிக்கும் போது, மனசாட்சியுள்ள எந்த ஜோதிடராலும் கலங்காமல் இருக்க முடியாது.  அவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் தோஷம் இது.  இதில் எப்படி அகப்படுகிறோம்?  விடுபட என்ன வழி என்பதை பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் பதிவுகளாக இது அமைந்திருக்கும். 

..........  [[  செய்வினை தோஷம் உருவாகும் விதம்  ]] ..................  ஜாதகத்தில் பாதகாதிபதியும், சத்ருஸ்தானாதிபதியும் இணைந்து திசைபுக்தி நடத்தும் போது இந்த தோஷம் உருவாகிறது.  சில சமயங்களில், இந்த திசைபுக்தி நடப்பிற்கு வருமுன்னரே, கோசரப்படி, அஷ்டமத்தில் சனி, ராகு, கேது இருந்தால் அந்த கிரகங்களின் கால கட்டத்திலேயே இந்த தோஷம் பாதிக்கத் தொடங்கிவிடும்.  அதுபோல் மேற்கண்ட திசைபுக்தி தொடங்குமுன்னர், ஜனன ஜாதகத்தில் அஷ்டமத்தோடு தொடர்புடைய சனி, ராகு, கேது கிரகங்களின் புக்தி நடப்புக்கு வந்தாலும் அப்போதே இந்த தோஷம் பாதிக்கத்தொடங்கிவிடும்.  இது முடியும் காலமும் இப்படியே அமைகிறது.  பாதகாதிபதி, சத்ருஸ்தானாதிபதி இணைந்த திசைபுக்தி முடிந்த பின்னரும், கோசரப்படி, அஷ்டமத்தில், சனி, ராகு, கேது கிரகங்களின் ஆதிக்கம் தொடர்ந்தால், அவை அஷ்டமத்திலிருந்து விடுபடும் வரை தோஷம் தொடரும்.  அதுபோல் ஜனன ஜாதகத்தில் செய்வினை தோஷத்திற்கான திசைபுக்தி முடிந்தும், அதற்கடுத்து, அஷ்டமத்தோடு தொடர்புடைய சனி, ராகு, கேதுக்களின் புக்தி நடந்தாலும், அவை முடிந்தபின்பே தோஷமும் முடிகிறது.  மேற்கண்ட கிரக அமைப்புகள் தவிர மற்ற வகை அமைப்புகளால் செய்வினை தோஷம் உருவாவதில்லை.  சிலர் கோசரப்படியும், ஜனன ஜாதகப்படியும் அஷ்டமத்தில் ராகு, கேது வந்தாலே செய்வினை தோஷம் பாதித்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.  இந்த அச்சம் தேவையில்லாது.  செய்வினை தோஷமானது, நமக்கு வேண்டாத எதிரிகளால் உருவாக்கப்படுவதால், எதிரி ஸ்தானமாகிய சத்ருஸ்தானம் நடப்புக்கு வராமல் இந்த தோஷம் வந்து விடாது.  இந்த தோஷத்திற்கும், பில்லி, சூனியம் ஆகியவற்றுக்கும் வித்தியாசம் உள்ளது.  இவைகளை பற்றியும் பின்னர் விரிவாக பார்க்கலாம்.

..................  [[ செய்வினை தோஷத்தை உருவாக்குபவர்கள்  ]] ........................  ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது வைக்கும், விரோதம், பொறாமை, வஞ்சம், ஆகியனவையே இந்த தோஷத்தை அவன் உருவாக்க காரணமாக அமைகின்றன.  சத்ருஸ்தானாதிபதி இருக்கும் ஸ்தான அடிப்படையில் இந்த தோஷத்தை உருவாக்கிய அந்த நபர் யார்? என்று ஒரு ஜோதிடரால் சொல்லிவிட முடியும்.  ஆனால் நான் உட்பட பலர் இதை வெளியிடுவதில்லை.  வெளியிட்டால், இது அவ்விருவரிடையே அடிதடி, தகராறு, எனப்போய் முடிகிறது.  இதில் அகப்படும் ஜோதிட்ர பாடு திண்டாட்டமாகிவிடுகிறது.  எனவே ஜோதிடர்கள், யாரால்? என்ற கேள்விக்கு பதில் சொல்வதைவிட, எதற்காக என்பதற்கு தயங்காமல் பதில் சொல்லிவிடுவர்.   பாதகாதிபதி அமரும் இடத்தை பொறுத்து, எதற்காக என்று சொல்லமுடியும்.  இன்னும் பாத சாரப்படி பார்த்தால் துல்லியமகாவும் சொல்லலாம்.

......................  [[  செய்வினையும் மாந்திரீகமும்  ]]  ....................  ஜோதிடம் என்னும் புனிதமான கலை வேதத்திலிருந்து தோன்றியது.  அது, பரம்பரை வேதம், வாஸ்து, மருத்துவம், மாந்திரீகம் என பல பிரிவுகளாக உள்ளது.  இந்த பிரிவுகள் எல்லாமே மனிதனை வாழவைக்க தோன்றியவை.  தீயசக்திகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள தோன்றியதே மாந்திரீக ஜோதிடம்.  ஆனால் மனிதன், எல்லாவற்றையும் தீமைக்கும் பயன்படுத்துவதுபோல், இதையும் தீய செயல்கள் செய்வதற்காக பயன்படுத்த தொடங்கினான்.  அரக்கர் குலத்தை சேர்ந்த ராவணன், மனித குலத்தை வேரறுக்க, உருவாக்கியதே ராவண சம்ஹிதை.  வேதம் முழுதும் நன்றாக கற்றறிந்த ராவணன், அதர்வண வேதத்திலிருந்து, மாந்திரீக ஜோதிடத்தை மட்டும் தனியாக பிரித்து ராவண சம்ஹிதையை உருவாக்கினான்.  இதை அரக்கர் குலத்திற்கு மட்டும் போதித்ததாக வரலாறு உண்டு.  இப்போது இந்த மாந்திரீக ஜோதிட கலையை, மனிதன் மனிதனை வேரறுக்க பயன்படுத்துகிறான்.  முற்காலத்தில் ஒருவருக்கொருவர் விரோதம் கொண்டால் பேசி தீர்த்துக்கொண்டனர்.  பஞ்சாயத்தில் நியாயம் கேட்டனர்.  மன்னிப்பு பெரும் தண்டனையாக கருதப்பட்டது.  காலம் செல்ல செல்ல, தண்டித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறையையும், நீதிமன்றங்களையும் நாடினான்.  தற்போது இவைகளையெல்லாம் விட்டுவிட்டு, உணவில் உடனடி உணவு வந்ததை போல, தன்னுடைய விவகாரங்களுக்கும், தான் விரும்பும் வகையில், உடனடி தீர்வை கண் முன்னேயே கண்டுவிட வேண்டும் என்ற துடிப்பு, அவனை தவறான வழியில், மாந்திரீக ஜோதிடத்தையும், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் ஆகியனவற்றை நாட வைத்திருக்கிறது.  இத்தகைய நாசகர எதிரிகள் பிற்காலத்தில் நன்றாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது...........................  [[  தொடரும்  ]]  ..................     

           

No comments:

Post a Comment