Monday 21 December 2015

விவாஹ தசவித பொருத்த விளக்கம். ........................ வாசகர்களுக்கான பதிவு...



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  .....................  விவாஹ தசவித பொருத்த விளக்கம்.  ........................  வாசகர்களுக்கான பதிவு.............  பாரம்பரிய முறை.  ...................  ஜாதக அலங்காரத்தில் உள்ள 12 ஆவது பாடலை அடிப்படையாக கொண்ட பதிவு இது.  இது வாசகர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டாலும், ஆங்காங்கே ஜோதிடர்களுக்கான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது.  முதலில் வாசகர்களின் சிந்தனைக்கு ஒரு கருத்து.  மொத்தம் 27 நக்ஷத்திரங்கள்.  ஒரு நக்ஷத்திரம் இன்னொரு நக்ஷத்திரத்தோடு பொருந்துகிறதா? என அறிய, விவாஹதசவித பொருத்த விதிகளான 10 ஐயும் ஒப்பிட வேண்டும்.  ஒரு நக்ஷத்திரத்திற்கு பொருத்தம் பார்க்க மட்டும், 10 விதிகளுடன் ஒப்பிட வேண்டும்.  10 ஒப்பீடுகள் கொண்ட அந்த ஒரு நக்ஷத்திரம் 23 நக்ஷத்திரங்களுடனும் பொருந்துகிறதா? என அறிய 230 ஒப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.  மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகிய 4 நக்ஷத்திரங்களுக்கு விவாஹதசவித பொருத்தம் மட்டும் பார்க்க வேண்டியதில்லை என்பதால் அவை தள்ளுபடி செய்யப்பட்டு மீதம் உள்ள 23 நக்ஷத்திரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.  ஒரு நக்ஷத்திரத்திற்கு 230 ஒப்பீடுகள் என்றால் 23 நக்ஷத்திரங்களுக்கும் 5,290 ஒப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வளவும் செய்தால்தான் ஒரு முழுமையான, சாஸ்த்திரரீதியான பிழையில்லாத ஒரு திருமண அட்டவணையை பெற முடியும்.  வெளியடப்ப்டும் அட்டவணைகளில் இத்தனை ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகிறதா? என்றால் அது சந்தேகத்திற்கிடமாகவே இருக்கிறது.  என் அனுபவத்தில் பார்த்த அட்டவணைகளில் இத்தனை ஒப்பீடுகளையும் முறையாக மேற்கொண்ட அட்டவணையை பார்த்ததில்லை.  பொருத்தம் பார்ப்பதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா! என்று வாசகர்கள் ஆச்சரியப்படக்கூடும்.  அதனை விளக்குமுகமாக இந்த பதிவு அமைகிறது.  இது தொடர் பதிவாக அமையும்.

மேலும் இம்மாதிரியான அட்டவணைகளின் தாராளமான விற்பனைக்கு காரணமென்ன? ...................  இதை கட்டுப்படுத்த ஜோதிடர்கள் என்ன செய்யலாம்?.  ;;;;;;  யோசிக்க வேண்டியுள்ளது.  ஒரு வாடிக்கையாளர் பொருத்தம் பார்க்க, தன் மகன் / மகள் ஜாதகத்தோடு கிட்டத்தட்ட 10 ஜாதகம் தருகிறார் என்றால், அந்த 10ம் பொருந்தாமல் போகும்போது, சில ஜோதிடர்கள் 10 ஜாதகத்திற்கான தொகையையும் வாடிக்கையாளரிடமிருந்து பெற்று [ கறந்து ] விடுகிறார்கள்.  ஒவ்வொரு முறையும் இவ்வாறு செலவு செய்து அதிக தொகை இழக்க அவரால் முடியாமல் போகிறது.  எனவே சுருக்கமான செலவில் கிடைக்ககூடிய அட்டவணையை அவர் நாடுகிறார்.  பொருந்தக்கூடிய ஜாதகத்திற்கு மட்டும் ஜோதிடர் தொகை பெற்றால், வரும் வாடிக்கையாளர் திருப்தி அடைவதோடு, அவர் கவனம் அட்டவணை பக்கம் போகாது.  எந்த ஜாதகமும் பொருந்தவில்லை என்றால் ஒரு குறைந்தபட்ச தொகையை தட்சிணையாக பெறலாம்.  அத்துடன் பொருத்தம் பார்ப்பதிலும், தான் நேர்மையான திறமைசாலி என்று வாடிக்கையாளரை நம்பவைக்கும் ஒரு சிரமமான கடமை ஜோதிடருக்கு ஏற்படுகிறது.  இவைகள் நடந்தேறினால் அட்டவணைகளின் விற்பனை கட்டுப்படுத்தப்படுவதோடு, ஜாதகர்கள் அதை நம்பி ஏமாந்து, வாழ்க்கை இழக்கும் நிலையும் குறையும்.  ஜோதிடரகள் பரிசீலிக்க வேண்டுகிறேன்.  இனி விவாஹதசவித பொருத்த விதிகளின் பெயர்களையும்,, அதன் காரணப்பொருளையும் பார்க்கலாம்.

01.  தினப்பொருதம்:  ...............  இருவரின் ஜாதகங்களை தினப்பொருத்தப்படி பொருத்தினால, அந்த இருவரின் ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியம் திருப்தியாக உள்லது என்று பொருள்.  இது பொருந்தவில்லை என்றால், அந்த ஜாதகங்களை இணைக்க்கூடாது என்றும், மற்ற பொருத்தங்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் சாஸ்த்திரம் சொல்கிறது.  எந்தவொரு காரியத்திற்காகவும், பொதுவாக ஜாதகம் பார்க்கத்தொடங்கினால், முதலில் ஜாதகரின் ஆயுளை கணிக்க வேண்டும் என்று ஜாதக அலங்கார பாடல் சொல்கிறது.  ஒரு ஜாதகத்தில் பல யோகங்கள் இருக்கலாம்.  அந்த யோகங்கள் அந்தந்த தசாபுக்தி வரும்போது செயல்படும்.  அதுவரை ஜாதகர் ஆயுள் இருக்க வேண்டும்.  யோகங்கள் இருந்தென்ன பயன்.  அதை அனுபவிக்க ஆயுள் வேண்டுமே!  ஆகவே முதலில் ஆயுளை பார்க்கச்சொல்கிறது சாஸ்த்திரம்.  ஆகவே விவாஹதசவித பொருத்தத்திலும் இணையும் தமபதியரின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும்  தெரிவிக்கும் " தினப்பொருத்தம் ", முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது.  : ............................ :  தொடரும்.  ..................

   
v

No comments:

Post a Comment