Wednesday 30 December 2015

விவாஹதசவித பொருத்த விளக்க பதிவு . பகுதி 3.



ம் படைவீட்டம்மா துணை.  வாசகர்களுக்கு வணக்கம்.  ...................  விவாஹதசவித பொருத்த விளக்க பதிவு  ......................  பகுதி 3.  ...................  பாரம்பரிய முறை.  ........................  கணப்பொருத்தம் பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

பொதுவாகவே ராக்ஷஸர்கள், மனிதர்களோடும், தேவர்களோடும் ஒத்துப்போனதில்ல.  இதை அடிப்படையாக கொண்டே விவாஹதசவித பொருத்த சாஸ்த்திரமும் வகுக்கப்பட்டிருக்கிறது போலும்.  மேலுலகில் கூட தேவகணங்கள் உண்டு.  மனுஷகனங்களோ, ராக்ஷஸ்கணங்களோ கிடையாது.  பூதகனங்களை சேர்த்துக்கொண்டவர்கள், மனுஷ, ராக்ஷஸகணங்களை தள்ளுபடி செய்துவிட்டார்கள்.  இந்த இருவரைவிட பூதங்கள் பரவாயில்லை போலிருக்கிறது.  கைலாயத்தை காவல் காப்பவை பூதகணங்கள்.  இவர்களுக்கு தலைவர் ஸ்ரீவினாயகப்பெருமான்.  தேவகணங்களுக்கு தலைவர் இந்திரன்.  மனிதர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் தலைவர்.............................  ????.  அடித்துக்கொள்ளுங்கள் என்று பூமியில் தள்ளப்பட்டுவிட்டார்கள்.  இரு ராக்ஷஸர்களிடையே மிக எளிதாக விவகாரத்தை கிளப்பிவிட்டுவிடலாம்.  ஒருவருக்கொருவர் ஒத்து போகமாட்டார்கள்.  இந்த பலஹீனத்தை பயன்படுத்தி, சும்பன், நிசும்பன் என்ற இரு ராக்ஷஸர்களிடையே வெகு எளிதாக பகைமை மூட்டி, அவர்களை அழித்தாள் ஸ்ரீபராசக்தி.  விவாகதசவித பொருத்தமும் இதையே அடிப்படையாக கொண்டது.  இரு ராக்ஷஸகணங்களை விதிவிலக்குகள் பாராமல் இணைத்தால், அவர்களுக்குள் தானாகவே காரணமின்றி பகைமை வளர்ந்து அழிந்து போவார்கள்.  தேவகணமும், ராக்ஷஸகணமும் இணைந்தால் என்னாகும் என்பதற்கு சிறந்த உதாரணம் ராவணன்.  ராவணின் தந்தை விஸ்ரவசு எனும் முனிவர் [ தேவகணம் ]  தாய் கைகசி எனும் அரக்கி. [ ராக்ஷஸகணம் [.  இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்தவே இல்லை.  இணைந்தார்கள்.  அவ்வளவுதான்.  விளைவு  ............   ராவணன் என்ற ராக்ஷஸகண புத்ரபாக்கியம்.  இவனால்தான் இந்த பூமிக்கு செய்வினை தோஷமும், ஏவல், பில்லி, சூனியங்கள் வந்தன.  தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் எதிராக இவை உருவாக்கப்பட்டன.  இவற்றை பயன்படுத்துபவர்களும், பார்வைக்கு மனிதனாக இருந்தாலும், ராக்ஷஸகணத்தவராகவே இருப்பார்கள்.  எனவே ரக்ஷஸகணத்தோடு மனுஷகணமும், தேவகணமும் சேராது என்கிறது சாஸ்த்திரம்.

கணப்பொருத்தம் பார்த்து இணைப்பதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன.  அவற்றை ஜோதிடர்கள் அறிவார்கள்.  மேலும் இதிலுள்ள சில சுவாரஸ்யங்களையும் ஜோதிடர்கள் ரசிப்பதுண்டு.  இரு ஜாதகர்களுக்கும், ராசியதிபதிகள் ஒரே கிரகமாகவோ, அல்லது இரு ஜாதகங்களின் ராசியதிபதிகள் நட்பாகவோ இருந்தால் கணப்பொருத்தம் உண்டு.  பேதம் பார்க்க வேண்டியதில்லை.  ராசியதிபதிகள் ஒருவரே என்றால், அவர்கள் பெரும்பாலும், இரு ஜாதகங்களுக்கிடையே ராசிகள் ஒரே ராசியாக இருக்கும்.  சில் நேரங்களில் இருவரின் ஸ்தானங்கள் ஒன்றுகொன்று அசுபமாகவும் அமைந்துவிடுவதுண்டு..  ஒரு சுபத்தை அசுபங்கள் தருகிறன என்றால் அது விசித்திரம்தான்.  மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் அதிபதி ஒருவரே.  செவ்வாயாகும்.  இவை ஒன்றுக்கொண்டு சஷ்டாஷ்டகம்.  இருப்பினும் கணப்பொருத்தம் உண்டு.  அது போல் மகரதிற்கும், கும்பத்திற்கும் அதிபதி ஒருவரே.  அது சனியாகும்.  இந்த ஸ்தானங்கள் ஒன்றுகொன்று த்வித்வாதசம்.  இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு..  தனி ஜாதக பலனில் இவை அசுபபலன் தரும்.  பொருத்தத்தில் சுபத்தை தருகிறது.  அதுபோல் இரு ஜாதக ஸ்தானாதிபதிகள் நட்பாக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் பெரும்பாலும் திரிகோணாதிபதிகளாக இருப்பர்.  இப்படி அசுபஸ்தானாதிபதிகளும், திரிகோணாதிபதிகளும் கணப்பொருத்தம் தந்து விடுகிறனர்.  அடுத்து கேந்திரத்தின் சார்பில், இரு ஜாதக ஸ்தானங்கள் ஒன்றுகொன்று சப்தமமாக இருந்தாலும் கணப்பொருத்தம் உண்டு.

04.  யோனிப்பொருத்தம்:  ......................  ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் சிற்றின்ப வேட்கையின் அளவை தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான பொருத்தமிது.  இருவரும் தாம்பத்திய உறவு மேற்கொள்ளும்போது, அவ்விருவரிடையே சம அளவு திருப்தி உண்டாகுமா? என்பதற்கும் இப்பொருத்தமே விடை சொல்கிறது.  இப்பொருத்தம் பொருந்தாத போது, அதனால் இருவரிடயே ஏற்படும் வெறுப்புகள் பற்றியும், இதனால் மறைமுகமாக சமுதாயமும் பாதிக்கப்படுவதை பற்றியும், ராசிக்கட்டத்தில் தொடர்புடைய ஸ்தானங்கள் பற்றியும் அடுத்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்:  ....................................  தொடரும்....................  நன்றி.  வணக்கம்.         

No comments:

Post a Comment