Tuesday 7 February 2017

கிரஹண தோஷம் பற்றிய பதிவு எண் 01.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.  : .....  கிரஹண தோஷம் பற்றிய பதிவு எண் 01.  : .......  பார்மபரிய முறை.  : .....  பொதுவாக நிழல்கிரகங்கள் எனப்படும் ராகு, கேதுவுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தால் அது கிரகண தோஷம் என்று சொல்லப்படுகிறது.  இதற்குரிய பலனாக, நிழல்கிரகத்துடன் எந்த கிரகம் இணைதிருக்கிறதோ, அதன் இயல்பான பலன் கெட்டுப்போகிறது என்றும் சொல்ல்ப்படுகிறது.  இன்னும் சொல்லப்போனால், கிரகண தோஷம் அடைந்த கிரகங்கள் எதுவுமே நற்பலன் தருவதில்லை, என்று சொல்லப்படுகிறது.   " எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ", என்பதற்கேற்ப மேற்கூறப்பட்டவைகளை பற்றி சற்று சிந்திப்போம்.  முதலில் சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொண்டால், அவைகளுக்கு விடை தேடும்போது பல உண்மைகள் நமக்கு புரிய வரும்.

01.  நிழல்கிரகங்களுடன் ஒரே ராசியில் சூரியன் சந்திரன் இருந்தாலும், கிரகணம் ஆவதில்லை.  இப்படியிருந்தாலும் அதை தோஷம் என்று கொள்ளலாமா?  கிரகணம் இல்லாதபோது, சூரிய, சந்திரர்களின் ஒளி நமக்கு முழுமையாக கிடைக்கிறது.  அப்படியென்றால், இவ்விரு கிரகங்களின் முழ் சக்தியும் தடையின்றி முழுமையாக நமக்கு கிடைப்பதாகத்தானே பொருள்.  இது எவ்வாறு? தோஷமாகும்?

02.  ஒரு ராசியின் ஆரம்பத்தில் ஒரு கிரகமும், அந்த ராசியின் முடிவில் நிழல்கிரகமும் இருந்தால் இதை கிரகணதோஷம் என்று கொள்ளலாமா?  அப்படியென்றால், இவ்விருகிரகங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 22 பாகைகளாவது இடைவெளி இருக்கும்.  அடுத்தடுத்த ராசிகளில் இவ்விரு கிரகங்களும் இருந்து, பாகை அளவில் நெருங்கி இருந்தால், அதாவது குறைந்த பட்சம் 5 பாகை வரை நெருங்கியிருந்தாலும், அடுத்தடுத்து ராசிகளில் இருப்பதால் கிரகணதோஷம் விளையாதா?

03.  கிரகண தோஷம் அதிக பாதிப்பை தரும் என்றால், பழம்பெரும் ஜோதிட சாஸ்த்திரங்களின் மிக சிறந்த தொகுப்பாகிய " பிருஹத் ஜாதகம் ", கிரகண தோஷத்தையோ, அல்லது நிழல்கிரகங்களையோ பற்றி ஏன் எடுத்துக்கூறவில்லை?  இந்த சிந்தனைகளோடு கட்டுரையை தொடரலாம்.

சூரியன் இயற்கையில் தானாகவே ஒளிரக்கூடியது.   இந்த ஒளிக்கதிர்கள், சந்திரன் முதல் சனி வரையிலான எல்லா கிரகங்கள் மீதும் பட்டு பிரதிபலிக்கிறது.  நமக்கு மிகவும் அருகாமையில் இருந்தபடி பிரதிபலிப்பது சந்திரன்.  வெகுதொலைவில் இருந்தபடி பிரதிபலிப்பது சனி.  இப்படி சூரிய ஒளி பிரதிபலிக்கப்படும் போது, அந்தந்த கிரகங்களின் இயல்பான தன்மைகள், ஒளீயாக பிரதிபலிக்கப்பட்டு, நம்மை வந்தடைகிறது.  பூமியும் சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது.  மற்ற கிரகங்களின் பிரதிபலிப்பை, நாம் பூமியிலிருந்து காண்பது போல், பூமியின் பிரதிபலிப்பை மற்ற கிரகங்களிலிருந்து காணமுடியும்.  ஒரு திடப்பொருள் மீது ஒளிக்கதிர் படுகிறது என்றால், அந்த திடப்பொருளின் மறுபுறம், அப்பொருளின் நிழல் இருக்கும்.  அது போல் சூரியனின் ஒளிக்கதிரை பெறுகிற எல்லாகிரகங்களுக்கும் நிழல்கள் உண்டு.  சந்திரனின் நிழலையும், பூமியின் நிழலையும் நம்மால் கண்கூடாக பார்க்கமுடிகிறது.  உணரமுடிகிறது.   சந்திர கிரகணத்தின்போது சந்திரன் மீது விழுவது பூமியின் நிழல்.  சூரிய இக்ரகணத்தின் போது பூமியின் மீது விழுவது சந்திரனின் நிழல்.  இப்படிப்பட்ட நிழல்களால் பூமியில் இருக்கக்கூடிய ஜீவராசிகளுக்கு உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் உருவாகிறன.  இந்த மாற்றங்களால் தீமை விளைவதால், இதை தோஷம் என்று சொல்கிறோம்.  இது கிரகண நேரத்தில் விளைவதால் கிரகண தோஷம் என்று சொல்கிறோம்.   இப்படிப்பட்ட நேரத்தில் பிறந்த ஒருவரது ஜாதகத்தில், சூரியன், சந்திரன், நிழல்கிரகங்கள் ஆகியன மிக நெருக்கமான பாகையில் அமைம்திருக்கும்.  சந்திரகிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் நிழல் கிரகங்களுடன் இணைந்து சமசப்தமமாக இருக்கும்.  சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது இம்மூவரும் மிக நெருக்கமான பாகையில் இருப்பர்.  எழுதப்படும் மூல ஜாதகங்களில் இந்த கிரகண குறிப்பை அவசியம் எழுத வேண்டும்.  ஆனால் எழுதப்படுவதில்லை.  எனவே மேற்கண்ட கிரகண நிலைகளை வைத்து யூகித்தறிய வேண்டியிருக்கிறது.

இதில் சிக்கல் என்னவென்றால், மேற்கண்ட கிரகனிலைகள் இருந்தாலும், பல சமயங்களில் கிரகணம் விளையாமல் போகிறது.  இப்படி கிரகணம் விளையாத போது, சூரியனுடைய ஒளி வழக்கம்போல், நமக்கு முழுமையாகவே கிடைத்துக்கொண்டிருக்கும்.  அதுபோல் சந்திரனுடைய ஒளியும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.  இப்படி முழுமையாக ஒளி கிடைக்கும் போது அது எவ்வாறு கிரகணதோஷம் ஆகும்? என்ற ஒரு நியாயமான கேள்வி நம்முள் எழுகிறதல்லவா!   இன்னும் விரிவான சிந்தனைகளோடு அடுத்தபதிவில் சந்திப்போம்.  : ..........  தொடரும் ;: ..............   

No comments:

Post a Comment