Tuesday 7 February 2017

" கிரகணதோஷம் ", 2 ஆவது பகுதி.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட ஆர்வலர்களுக்கு வணக்கம்.  " கிரகணதோஷம் ", 2 ஆவது பகுதி.  : ...  பாரம்பரிய முறை : .......  சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது, அதை நம் கண்ணால் பார்க்க முடிகிறது.  கிரகண நேரத்தில் சூரியன் அல்லது சந்திரனின் ஒளிக்கதிர்கள் முழுமையாக நமக்கு கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.  அந்த கதிர்கள் கூட ஒளிச்சிதறல்களாகி, ஒழுங்கற்ற முறையில் நம்மை வந்தடைகிறன.  இதனால் கெடுதல்கள் விளைகிறன.  இந்த கெடுதல்கள் எப்படிப்பட்டவை? என்று, கிரகண நேரத்தில் விண்வெளிக்கு சென்று ஆராயும் விஞ்ஞானிகள் இன்றும்கூட இருந்துகொண்டு இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை பிறந்தால், அதன் ஜாதகத்தில், சூரிய சந்திரர்களுடன் நிழல்கிரகங்கள் மிக நெருக்கமான பாகை அளவில் சம்பந்தப்பட்டிருக்கும்.  சூரிய கிரகணம் என்றால், சூரியன், சந்திரன், ராகு அல்லது கேது ஆகிய 3 கிரகங்களும் ஒன்றோடொன்று மிக நெருக்கமான பாகை அளவிலிருக்கும்.  சந்திர கிரகணம் என்றால், சூரியனுக்கு சமசப்தமமாக எதிரே சந்திரன் இருக்க, சூரியனோடும், சந்திரனோடும், நிழல் கிரகங்கள் மிக நெருக்கமான பாகை அளவில் அமைந்திருக்கும்.  அறிவியலின்படி பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3ம் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்.  எனவே ஒரு ஜாதகத்தில், சூரிய சந்திரர்களுடன் நிழல்கிரகங்கள், பாகை அளவில் 3 பாகை 20 கலை [ ஒரு நக்ஷத்திர பாதம் அளவு ] அளவில் நெருங்கியிருந்தாலொழிய, ஒரே ராசியில் இருப்பதால் கிரகணதோஷம் விளையாது என்பதை புரிந்துகொள்ளலாம்.  இந்த கிரகங்கள் அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலும் மேற்குறிப்பிட்ட அளவில் நெருங்கினால் கிரகணதோஷம் விளையும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட கிரக அமைப்பு இருந்தாலும் பல சமயங்களில் கிரகணம் விளைவதில்லை.  எனவே மேற்கண்ட கிரக அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் மட்டும் போதாது.  அந்த நேரத்தில் கிரகணமா? இல்லையா? என்று, ஜாதகர் பிறந்த வருஷத்திய பஞ்சாங்கம் கொண்டு அறிதல் அவசியமாகிறது.  அல்லது ஜோதிடர் பஞ்சாங்க கணிப்பை அறிந்து வைத்துக்கொள்வது அவசியமாகிறது.  ஆனால் பல ஜோதிடர்கள் இவற்றை தவிர்த்துவிட்டு, நிழல்கிரகத்தோடு, ஒரு கிரகம் ஒரே ராசியில் இருந்தால் கிரகணதோஷம் என்று தோஷத்திற்கான பலனை சொல்லி வருகிறார்கள்.  ஜாதகத்தை கொண்டு, தொலைனோக்கு பார்வையுடன், தன் வாழ்க்கையில் ஒரு நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் ஜாதகருக்கு, இவ்விதமாக பலன் சொல்வதால், அது அவர் வாழ்க்கையையே ஏறுக்கு மாறாக புரட்டி போட்டுவிடும்.  ஜோதிட கணிதத்தோடு, பஞ்சாங்க கணிதத்தையும் கணிக்கும் பொறுப்பும், நுணுக்கமும் போதிக்கும் அவசியம் ஏற்படுவதால், கிரகணதோஷம் பற்றிய செய்திகளை பல நூல்கள் சொல்லாமல் விட்டுவிட்டன.  ஒரு ஸ்தானத்தில் நிழல்கிரகம் இருந்தால், நிச்சயம் அந்த ஸ்தானம் பாதிப்படையும்.  எனவே சில நூல்கள் அந்த பாதிப்புகளை விவரிப்பதோடு நிறுத்திக்கொண்டன.  இனி மற்ற கிரகங்களோடு, நிழல்கிரகங்கள் எப்படி தொடர்பு கொண்டு கிரகணதோஷம் விளைவிக்கிறன? என்று விரிவாக பார்க்கலாம்.

சந்திரனை தவிர மற்ற கிரகங்களில் பூமிக்கு மிக அருகாமையில் இருப்பது சுக்கிரன்.  வெகுதொலைவில் இருப்பது சனி.  சுக்கிரனுக்கென்று நிழல் இருந்தாலும் அது பூமி மீது அதிகமாக விழுவதில்லை.  சுக்கிரன் அளவில் மிக சிறியதாகி போனதால், சூரியனை மறைத்து பெரிய அளவில் உருவாகும் நிழலை கொண்டதாக இல்லை.  சனி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே அமையால் வெளிப்புறத்தில் அமைந்து போனதால், அதன் நிழல் வெளிப்புறத்திலேயே விழும்.  பூமி மீது விழ வாய்ப்பே இல்லை.  இருப்பினும் நிழல்கிரகங்களாகிய ராகுவும், கேதுவும், சுக்கிரன், சனி மற்றும் ஏனைய கிரகங்களின் ஒளிக்கதிர்களை பாதிப்படைய செய்கிறன.  சனியிலிருந்து வரக்கூடிய முழுமையான சனிக்கதிர்கள் நமக்கு பெரும்பாலும் கெடுதலையே செய்கிறது.  இந்த சனிக்கதிர்கள் பூமியை வந்தடையும் போது எந்த தடையும் இல்லாமல் வந்தடையும் போதே கெடுதலை விளைவித்துவிடுகிறது.  சனிக்கதிர்கள் பூமியை வந்தடையும் போது, ராகு, கேது என்று சொல்லகூடிய நிழலுக்குள் புகுந்து நம்மை வந்தடையும் சூழ்னிலையும் வரும்.  இப்படி சனிக்கதிர்கள் நிழலுக்குள் புகுந்து வரும்போது, அவை சிதறலடைந்து, ஒழுங்கற்ற முறையில் நம்மை வந்தடையும் போது கெடுதல் இன்னும் அதிகரிக்கும்.  இந்த கெடுதல்கள் நிழல்களின் தன்மை, இயல்புக்கேற்றவாறு மாறுபடும்.  இந்த மாற்றங்களால் நமக்கு விளையும் தீமைகளே கிரகணதோஷம் எனப்படுகிறது.  சுக்கிரகதிர்களால் விளையவேண்டிய நன்மைகள் கூட இந்த நிழல்களுக்குள் புகுந்து வரும்போது, ஒழுங்கற்ற முறையில் சிதறடிக்கப்பட்டு, நம்மை வந்தடையும் போது அது கெடுதலை செய்து விடுகிறது.  இதே நிலையே மற்ற கிரகங்களுக்கு ஏற்படுகிறது.

கிரகங்களின் கதிர்கள், ராகு, கேதுக்குள் புகுந்து வர வேண்டுமானால், ராகு அல்லது கேது, அந்த கிரகங்களோடு ஜாதகத்தில் மிக நெருங்கி இருக்க வேண்டும்.  இதற்கு முன் சொல்லப்பட்ட பாகையையே அளவாக கொள்ளலாம்.  ராகு, கேதுக்களுடன் மற்ற கிரகங்கள் ஒரே ராசியில் இருந்தாலும், பாகை அளவில் நெருங்கியிராமல், தொலைவாக விலகி இருந்தால், அந்த கிரகங்களின் கதிர்கள் ராகு, கேது எனப்படும் நிழலுக்குள் புகாமல் நம்மை நேரடியாக வந்தடைந்துவிடும்.  அப்போது கிரகணதோஷம் விளையாது.  சில ஜாதகங்களில் இந்த ராகு, கேதுவும், மற்ற கிரகங்களும் அடுத்தடுத்த ராசிகளில் இருக்கும்  ஆனால் பாகை அளவில் மிக நெருங்கியிருக்கும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில் கிரகணதோஷம் விளைந்துவிடும்.  இப்படி ராகு, கேதுக்கள் மற்ற கிரகங்களுடன் கொள்ளும் தொட்ர்பை துல்லியமாக ஆராய்ந்து பலன் சொன்னால் அது சரியாக இருக்கும் என்பது என் கருத்தும், என் குருனாதர் உபதேசமுமாகும்.  இதை விடுத்து ஒரே ராசியில் ராகு, கேதுவுடன் எந்த கிரகம் இருந்தாலும் அது கிரகணதோஷம் என்று முடிவுக்கு வருவது தவறாகிவிடலாம்.  ஜோதிடம் என்பது பழைமையான சாஸ்த்திரம் மட்டுமல்ல.  புதுமையான அறிவியலையும் தன்னகத்தே கொண்டது.  இதை உணர்ந்து, அதற்குரிய பலன் சொல்லும் ஜோதிடர்களே வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.  நன்றி.  வணக்கம்.    

2 comments:

  1. வணக்கம்,
    உங்கள் மின்னஞ்சல் கிடைக்குமா?

    ReplyDelete
  2. Hello Sir,

    please provide your contact number . I would like to consult. my email id :
    peer.appa@gmail.com

    ReplyDelete