Wednesday 11 May 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", ....... [ நிறைவு ] பதிவு எண் 07 .......... நாடக காரகனின் நாடகம்.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  ...... " கிரகங்களின் இரட்டை வேஷம் ", .......  [ நிறைவு ] பதிவு எண் 07 .......... நாடக காரகனின் நாடகம். ........  பாரம்பரிய முறையிலான பதிவு.  ......... இது இந்த தொடரின் கடைசி பதிவு.    இந்த தொடரில் ஒரு கிரகம் இரு வேஷங்களை போட்டு, இதில் எந்த வேஷத்தை, எப்போது? எப்படி? செயல்படுத்தும் என்றெல்லாம் பார்த்தோம்.  இப்படி இரு வேஷம் கொண்ட கிரகங்களே ஜோதிடர்களை மிக நன்றாக குழப்பிவிடும் என்பதையும் விரிவாக பார்திருக்கிறோம்.  இப்படியிருக்கும் போது ஒரு கிரகம் பல வேஷங்களை போட்டால், ஜோதிடர் எப்படியெல்லாம் குழம்ப வாய்ப்பு இருக்கிறது?  அதை அவர் எப்படி சமாளிக்கிறார்?  இதனால் ஜோதிடர் படும் பாட்டை ஜாதகர்களுக்கு எடுத்து சொல்வதே இந்த பதிவின் நோக்கம்.  இதோடு ஒரு எளிமையான ராசிக்கட்டம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.   நம் கதானாயகன் " புதன் ".  இந்த புதனைத்தான் நாடக காரகன் என்று சொல்லியிருக்கிறேன்.  நவராத்திரி திரைப்பட சிவாஜிகணேசன் மாதிரி, இந்த புதன் போடும் வேஷங்களை பட்டியலிடுவோம்.  ........................

01.  பத்தாம் அதிபதி.
02.  ஏழாம் அதிபதி
03.  தனித்திருந்து தசாபுக்தி நடத்தும் போது பத்ரயோகம் தருபவர்.
04.  சூரியனுடன் இணைந்து இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் தருபவர்.  சூரியன் தர்மாதிபதி.  புதன் கர்மாதிபதி.  புதன் அஸ்தங்கதமோ வக்கிரமோ அடையவில்லை.
05.  இன்னொரு புறம் இதையே புதாதித்ய யோகம் என்றும் சொல்லலாம். 
06.  தனுசு உபய லக்னம் என்பதால் புதன் பாதகாதிபதி.
07.  புதன் சுபாவ அசுபராகிய சூரியனுடன் ஒரே ராசியில் இணைந்திருப்பதால் சுபாவ அசுபர்.  எனவே புதன் பார்வை அசுபபார்வை.

ஆக இத்தனையையும் ஒரு ஜோதிடர் கவனிக்கும் நேரத்தில், ராசிக்கட்டத்தில் விவரிக்கப்படாமல் இருக்கும் விஷயங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.  புதன், தவிர மற்ற கிரகங்களின் இருப்பிடம், அவர்கள் பார்வை, பாதசாரம், கோசர கிரகங்களின் நிலை ஆகிய எல்லாவற்றையும் கணித்தால்தான், சரியான பலன் சொல்ல முடியும்.  இனி மேற்கண்ட குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு புதனை சுருக்கமாக திறனாய்வு செய்யலாம்.  .........................  இப்போது புதன் திசையில் புதன் புக்தி தொடங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.  7 ஆம் அதிபதி 10 ல் கெடாமல் இருப்பதால் திருமணம் நடக்கும்.  10 ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் என்பதால் தொழில் வளர்ச்சியடையும்.  பத்ரயோகத்தால் புதனின் சுயகாரகத்துவம் நற்பலன் தரும்.  உதாரணத்திற்கு மனைவியும்,, ஜாதகரும் கணிணி துறையை சார்ந்தவராக அமைந்து, தொழிலில் உச்ச நிலை அடைவார்கள்.  புதாதித்ய யோகத்தால் அரசு துறையின் ஆதரவு பெருகும்.  புதனின் அசுப பார்வை சுகஸ்தானத்தில் விழுவதால், சுகம் கெடும்.  உதாரணத்திற்கு, பித்தம் அதிகமாகி வாந்தி மயக்கம், அஜீரணம் ஆகும்............... அடுத்து, சுக்கிரன், சந்திரன், செவ்வாய் ஆகியோருடன் இணைந்து தசைபுக்தி ந்டத்தும்போது பாதகாதிபத்யம் வெளிப்படும்.  6 ஆம் அதிபதி சுக்கிரனின் புக்தியில் செய்வினை தோஷம் உருவாகும்.  செய்யும் தொழில் எதிரிகளின் சதியாலும், போட்டி, பொறாமைகளாலும் முடங்கிப்போகும்.   சந்திர புக்தியில் தொழில் அதிக கடன் காரணமாக எதிர்பாராத நஷ்டம் தரும்.  உருவாக்கும் பொருள் அல்லது சேவையின்  தரமும் தாழ்ந்துபோவதால் அவமானமாக இருக்கும்.  செவ்வாய் புக்தியில், வாழ்க்கையில் சந்திக்காத ஒரு இழப்பு நேரும்.  தொழிலையே இழுத்து மூட நேரும்.  அறிவாற்றலும், திறமையும் கை கொடுக்காமல் கெடும்.  சூரிய புக்தியில் தர்மகர்மாதிபதி யோகத்தால், தொழிலை நேர்மையாக செய்து, புகழடைவதுடன், அதில் வரும் வருமானத்தை, ஆன்மிகம் போன்ற நற்காரியங்களுக்கு செலவு செய்து புண்ணியம் தேடிக்கொள்வார்கள்.  அதே நேரம் சூரியன், புதன் இருவரின் இணைந்த அசுப பார்வையானது சுகஸ்தானத்தில் விழுவதால், மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளாகி வருந்த நேரும்.  குரு புக்தியில் நிறைய சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.  கணிணி மூலம் பங்குசந்தை வணிகத்தில் ஈடுபட்டு, அதிக அளவில் லாபம் பெறலாம்.  புதன் புக்தி தவிர, மேலும் சூரியன், குரு, ஆகியோரின் புக்தியிலும் திருமண யோகம் நேரும்.

இப்படி புதன் பலவகைகளில் நாடகமாடி, அதிர்ஷ்டம், நோய், இழப்பு, ஆகியவற்றை தனித்தனியாகவும், ஒரே நேரத்திலும் தந்து, பல வேஷம் போடுகிறார்.  இந்த புதன் எத்தனை வேஷம் போட்டு ஏமாற்றப் பார்த்தாலும், திறமையான ஜோதிடர்கள், புதனின் உண்மை வடிவத்தை கண்டுபிடித்துவிடுவார்கள்.  ராவணனுக்கு அரண்மனையிலிருந்த பெண்கள் எல்லோரும் சீதையாக தெரிந்தார்களாம்.  அதுபோல் புதன் கேந்திராதிபத்ய தோஷம் உள்ளவர் போலும் தோற்றமளிக்கலாம்.  சுபாவசுப கிரகங்களுக்கு மட்டுமே கேந்திராதிபத்ய தோஷம் உண்டு.  இந்த ராசிக்கட்டத்தின்படி புதன் சுபாவ அசுபர்.  மேலும் சூரியனுடன் இருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் இல்லை.  ஆகவே புதனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் கிடையாது.  மொத்தத்தில் கிரகங்களிலேயே புதன் அதிக வேஷம் போடுபவராக இருப்பார்.  காரணம் அவர் புத்திசாலியல்லவா!.  அவர் அருள் நமக்கெல்லாம் கிடைக்கட்டும் என்ற பிராத்தனையுடன் இந்த தொடரை நிறைவு செய்வோம்.  நன்றி  வணக்கம்.           

No comments:

Post a Comment