Friday 30 May 2014

பெயர் சூட்டும் பெற்றோர்கான பதிவு இது. பகுதி. 1.



  ஓம் நமசிவாய.  அனையருக்கும் வணக்கம்.  பெயர் சூட்டும் பெற்றோர்கான பதிவு இது.  பகுதி. 1.    [ பாரம்பரிய முறை. ]  "ஓம்" என்று உச்சரிக்கும்போது எழும் ஒலியை ஓங்கார நாதம் என்பர்.  இந்த ஓங்கார நாத அடிப்படையில், பிரம்மா சிருஷ்டி செய்கிறார் என்று, வேதங்களும், இதிகாச புராணங்களும், அருளாளர்களின் வாக்குகளும் சொல்கின்றன.   ஒலி என்பது அவ்வளவு முக்கியத்துவமானது.    எனவே நமது முன்னோர்கள், ஒலிகளை வரையறுத்து, மந்திரங்களாக உருவாக்கி தந்தனர்.  அம்மந்திரங்களை உச்சரிக்கும்போது ஒலிகள் மாறினால் அம்மந்திரங்கள் பயனற்றுப்போகின்றன.  வரையறைக்கு உட்பட்ட ஒலிகளை உச்சரிக்கும்போது நல்ல விளைவுகள் உண்டாகின்றன.  இப்படிப்பட்ட நல்ல ஒலிகளை சீர்படுத்தி வரையறுத்து அஅவற்றை தெய்வங்களுக்கு நம் முன்னோர்கள் பெயர்களாக சூட்டியுள்ளனர்.  அவைகளை உச்சரிக்கும்போது, நாம் நல்ல விளைவுகளை உண்டாக்கக்கூடிய மந்திர ஒலிகளை ஒலிக்கச் செய்தவர்களாகிறோம். 

     இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான், நக்ஷத்திரங்களுக்கு உண்டான ஒலிகளை, ஞானத்தால் உணர்ந்து,  நம் முன்னோர்கள் எழுத்து வடிவத்தில் உருவாக்கியுள்ளனர்.  ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள் என்ற வகையில், பாதம் ஒன்றுக்கு ஒரு ஒலி வீதம் 4 ஒலிகளை ஒரு நக்ஷத்திரத்திற்கு தந்துள்ளனர்.  அந்தந்த நக்ஷத்திர பாதங்களில் பிறந்தவர்களுக்கு அந்தந்த பாதத்திற்குரிய ஒலிகளின் அடிப்படையில்  பெயர் வைத்து அழைக்கும்போது அவ்வொலிகள் நல்ல விளைவுகளை உண்டாக்கும்.  அதிலும் தெய்வங்க்களின் பெயரை சூட்டும் போது மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்குகிறது.   எனவே ஜனன ஜாதகத்தை கணிக்கும்போது, பாதபேதம், பாத சந்தி வராமல் கணிப்பது மிகமிக அவசியமாகிறது. 

     தற்காலத்தில் ந்யுமெராலஜி படி பெயர் சூட்டுகின்றனர்.  எனவே ந்யுமெராலஜி சம்பந்தமான ஒரு சிறிய விளக்கம் காண்போம்........................................ஒலிகளின் அமைப்பை தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு சக்தி உண்டென்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு, எண்களுக்கும் சக்தி உண்டென்பது ஒப்புக்கொள்ளப்படவேண்டிய விஷயம்.  ஆனால் அதை நாம் முறையாக பயன்படுத்துவதில்லை.  உதாரணத்திற்கு ஒரு குழந்தை, 21.08.2013 அன்று பிறந்ததாக வைத்துக்கொள்வோம்.  அந்த தேதியின்படி பிறந்த எண். 3.  [ பிறந்த தேதியை தனித்தனியே கூட்டினால், அதாவது 2 + 1 = 3. என்று வரும். ]  இந்த தேதியின் கூட்டு எண். 8.  [  பிறந்த தேதியின், தேதி, மாதம், வருஷம் ஆகியவற்றின் எண்களை தனித்தனியே கூட்டினால் 17 வரும்.  அதையும் தனித்தனியே கூட்டினால் 8 வரும். ]  இந்த 3, 8 அடிப்படையில் பெயரை வைத்துவிடுகிறார்கள்.  இதே ந்யுமெராலஜி ஜோதிடம் 3 க்கும், 8 க்கும், கிரகங்களை வகுத்து சொல்லியுள்ளது.  அந்த கிரகங்கள் நம் ஜாதகப்படி துஸ்தானங்களில் இல்லாத பூரண யோகதிபதிகளாக இருந்தால் சரி.  ஒரு வேளை பாதகாதிபயாகிவிட்டால் என்ன செய்வது?.............விளைவுகள் ஏறுக்குமாறாகிவிடும்.    எனவே நீங்கள் மேற்கத்திய முறைபடி பெயர்சூட்டும்போதும், நம் இந்திய முறையை அனுசரித்தே ஆகவேண்டும். 

     ஆகையால் பெயர் சூட்டும்முன் ஒரு நல்ல ஜோதிடரை அணுகி, குழந்தையின் நக்ஷத்திர பாதத்தை அறிந்து, அதற்கேற்ற ஒலியுள்ள எழுத்தை தேர்வு செய்யுங்கள்.  கூடியமட்டும் அந்த எழுத்தின் ஒலி பெயரின் முதலில் வருமாறு அமைத்துக்கொள்ளுங்கள்.  அதன் பின் ஜாதகப்படி யோக கிரகத்தை தேர்வுசெய்து, பின் மேற்கத்திய முறைபடி அந்த கிரகத்தின் எண் கூட்டுத்தொகையாக வருமாறு அமையுங்கள்.  அந்த பெயர் அவசியம் தெய்வத்தின் பெயராக இருக்கவேண்டும்.  இதுவே சரியான வழி முறையாகும். அல்லது அறவே மேற்கத்திய முறையை மறந்துவிடுங்கள். அடுத்த வாரம் பகுதி 2 என்ற பதிவில் தொடர்ந்து ப்ரொனாலஜி பற்றிய சிறு விளக்கத்துடன், ந்யுமெராலஜி இணைந்த, நம் இந்திய ஜோதிட முறைபடி பெயர் சூட்டுவதை பற்றி, ஒரு உதாரண ஜாதகம் வாயிலாக பார்க்கலாம். .............தொடரும்.......................... 

No comments:

Post a Comment