Friday 9 May 2014

சூரியன் இயற்கை பாபரா? [ சுபாவ அசுப கிரகமா? ]



 ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  சூரியன் ஏன் இயற்கை பாபக்கிரகம்?  [ சுபாவ அசுபர் ] என்பதை சிந்திக்கும் பதிவு இது.  ஒரு ஜாதகத்தில் சூரியன் சுபர் என்றால் நன்மை செய்வார் என்றும், அசுபர் என்றால் தீமை செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.  இது ஸ்தானாதிபத்தியத்தை அடிப்படையயாக கொண்டு சொல்லப்படுவது.  சூரியன் சுப ஸ்தானத்திற்கு அதிபதியானால் அவர் சுபர்.  சுப ஸ்தானம் என்பது கேந்திர, திரிகோனங்கள்.  அசுப ஸ்தானங்களுக்கு அதிபதியானால் அவர் அசுபர்.  3. 6. 8. 12  என்பவை அசுப ஸ்தானகள்.   இப்படி சுபர், அசுபர் என்பதை ஜாதகம் தீர்மானிக்கிறது.

  ஆனால் உலகில் எத்தனை கோடி ஜாதகங்கள் இருந்தாலும் அத்தனையிலும் சூரியன் இயற்கை பாபராகவே கருதப்படுகிறார்.  இந்த இயற்கை பாபதன்மையை, வான்வெளியில் நடக்கும் நிகழ்வுகள் தீர்மானிக்கின்றன.  இது ஜாதக கட்டத்தை அடிப்படையாக கொணதல்ல.  நம் முன்னோர்கள் கிரகங்களிலிருந்து வரும் கதிர் வீச்சுகளால் ஏற்படும் நன்மை தீமைகளை கணக்கிட்டு, கிரகங்களை சுபர் என்றும் பாபர் என்றும் பிரித்தனர்.  ஒரு செயல் என்றால் அதன் விளைவில் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கும்.  கிரகங்களின் கதிர்வீச்சுகளால் நன்மையை விட தீமை அதிகம் விளைந்தால், அக்கதிர்வீச்சை தரும் கிரகம் இயற்கை பாபர் என்றும்,  தீமையை விட நன்மை அதிகம் விளைந்தால், அக்கதிர்வீச்சை தரும் கிரகம் இயற்கை சுபர் என்றும் பெயரிடப்பட்டன.  பாபக்கிரகத்திலிருந்து கிடைக்கும் கொஞ்சனஞ்சம் நன்மை கூட தடுக்கப்படும் போது அந்த செயலை என்னென்பது?  அந்த செயலை சூரியன் செவதால் சூரியனை இயற்கை பாபக்கிரகம் என்று நம் முன்னோர்கள் முடிவு செய்தனர்.  சூரியனை மற்ற கிரகங்கள் நெருங்குபோது ஏற்படும் அஸ்தங்கத நேரத்தில் இந்த செயலை சூரியன் செய்துவிடுகிறார்.

  1.  சூரியனுடன் சந்திரன் இணைந்து அஸ்தங்கதம் ஆகும் போது, சந்திரனால் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள், சூரியனால் பாதிப்படைகின்றன.  அந்த நாள் அமாவாசையாகும்.  அன்றைய தினம் சூரியனுடைய ஆற்றலுக்கு முன் சந்திரன் ஆற்றல் எடுபடாமல் போகிறது.  இதனால் அன்று பிறக்கும் அத்தனை லட்சோப லட்சம் குழந்தைக்ளுக்கும் சந்திரனால் கிடைக்க வேண்டிய நன்மைகள் தடுக்கப்படுகிறன.  இதனால் அன்று பிறக்கும் அத்தனை குழந்தைகளும் மனோபலம், நலம் இழந்தவர்களாகவே பிறக்கிறார்கள்.  நமக்கு ஒருனாள் அமாவாசை.  ஆனால் அந்த குழந்திகளுக்கு வாழ்க்கை முழுதும் அமாவாசை ஆகிவிடுகிறது.  இந்த பாபம் முழுதும் சூரியனையே சேரும். 

 2.  செவ்வாய் தீமை செய்யக்கூடிய இயற்கை பாப கிரகம்.  இந்த கிரகத்தால் விளையக்கூடிய ஒரு நன்மை உண்டு.  செவ்வாய் நல்ல வலுவுடன் இருந்தால் இரத்தம் நல்ல ஆரோக்கியமுடன் இருக்கும்.  ஆனால் அஸ்தங்கதம் என்ற பெயரில் செவ்வாயின் இந்த நன்மையை மறைத்து, கிடைக்கவிடாமல் செய்து, அப்போது பிற்ப்பவர்களுக்கு ரத்த பலக்குறைவுடன் பிறக்கஸ் செய்து அவதிப்பட வைப்ப்து சூரியன் என்றால் அது பாபச்செயல்லவா?

 3.  புதன்.  இந்த கிரகம் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கதம் ஆனால் புத்திக்கூர்மை இருக்காது.  சுருக்கமாக அறிவிலி என்று சொல்லலாம்.  சூரியனால் ஏற்படுத்தப்படும்  இத்தீய நிலையை அனுபவிக்கும் மனிதன் பாவமல்லவா?  இப்பொழுது சூரியனுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

 4.  குரு.  இந்த கிரகம் அஸ்தங்கதம் அடைந்த காலத்தில் பிறந்தவர்களுக்கு நிச்சயம் மலட்டுத்தன்மை இருக்கும்.  அதுவும் பெண்ணக பிறப்பவர்களை எண்ணிப்பார்த்தாலே கவலையளிக்கிறது.  இதற்கு காரணமாகும் சூரியன் பாப கிரகம்தானே.  

 

 5.  சுக்கிரன்.  இவ்வுலகில் அன்பு, பாசம், காதல், கவர்ச்சி ஆகியவற்றை தரும் சுபக்கிரகம்.  இக்கிரகம் இல்லையென்றால் உலக லௌகீக இயக்கங்களே இல்லை.  உலகமே பாலைவனமாகிவிடும்.  அஸ்தங்கதம் என்ற பெயரால் இதன் நன்மை தரும் கதிர்வீச்சுகளை பறித்து அப்போது பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை பாலைவனமாக்கும் சூரியன் எப்படி சுபராவார்?

 அடுத்து சனி.  சனி என்றாலே எல்லோரும் நடுனடுங்கிப்போகும் இயற்கை பாப கிரகம்.  இதன் கதிர் வீச்சிலும் ஒரு நன்மை உண்டு.  சனி கதிர்வீச்சு முழுமையாக கிடைத்து, அது வலுவுடன் இருக்குமானால், மனிதனுக்கு தீர்காயுள்.  இந்த சனி அஸ்தங்கதம் அடைந்து, அதன் கதிர்வீச்சுகள் தடைபடுமானால், அப்போது பிறக்கும் அனைவரும் குறை ஆயுளுடன் பிறப்பார்கள்.  உலகில் அதிக தற்கொலைகள் நடப்பது, அற்பாயுளில் அவரவர்கள் மரணம் அடைவதும் அஸ்தங்கதம் என்ற நிகழ்வின் போது பிறந்தவர்களால்தானே.  இம்மாதிரியான துக்க நிகழ்வுகளுக்கு காரணமாகும் முக்கிய கிரக காரணங்களில், சனியின் அஸ்தங்கதமும் ஒரு காரணம்  என்பதையும் மறுக்க முடியாதல்லவா. 

  ஒரேஒரு கிரகம் அஸ்தங்கதம் அடையும் போது பிறக்கும் குழந்தைகளின் கதி இப்படியானால், சேர்ந்தற்போல் இரண்டு, மூன்று கிரகங்கள் அஸ்தங்கதம் அடையும் போது பிறப்பவர்களின்  வாழ்க்கையே அஸ்தங்கதம் என்றால் அது மிகையாகாது.  ஒரு பாபகிரகம் அஸ்தங்கதம் அடையும் போது அதன் பாபத்தன்மையும் தடுக்கப்படுவது நன்மை தானே என்ற எண்ணம் வரலாம்.  ஆனால் கிடைக்க இருந்த ஒரு நன்மையும் பறிபோகிறதே, என்பதையும் சிந்திக்க வேண்டும்.  எனவே இப்படி நன்மை, தீமை இரண்டும் கலந்த செயல் அஸ்தங்கத காலத்தில் விளைகிறது.  எனவே சூரியனை நம் முன்னோர்கள் அரை பாபர் என்றனர்.  மேலும் சனி, செவ்வாய் எனும் முழுபாபர்கள் மூன்று பார்வைகளால் நமக்கு கெடுதல் செய்கிறனர்.  ஆனால் சூரியன் ஒரேஒரு பார்வையால் மட்டுமே கெடுதல் செய்கிறார்.  இதனாலும் சூரியனை அரை பாபர் என்றனர்.  எவ்வளவுதான் ஒருவர் நன்மைகளை செய்தாலும், அவர் செய்யும் ஒரு சில தீமைகள் இந்த உலகத்தின் பார்வையில் முதலில் படுகிறது.  இந்த உலக பார்வைலிருந்தும் சூரியன் தப்பவில்லை.  நன்றி.. 
 

No comments:

Post a Comment