Sunday 23 October 2016

" குழந்தை ஜாதகமும் பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை. ............ 01



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம்.  " குழந்தை ஜாதகமும் பெற்றோர்களும் ", ஒரு ஜோதிட பார்வை.  ஜோதிடர்களுக்கான பதிவு.  பாரம்பரிய முறை.  : .........  குழந்தையின் ஜாதகம் 12 வயது வரை செயல்படாது.  இது பொது மக்களிடையே நம் ஜோதிடர்களில் சிலர் பரப்பி விட்டிருக்கும் செய்தி.  முதல் 4 வருஷங்கள் தாயின் ஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  அடுத்த 4 வருஷங்கள் தந்தையின் ஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  இதற்கடுத்த 4 வருஷம் தன் சுயஜாதக கர்மவினையை குழந்தை அனுபவிக்கும்.  இது ஜோதிடர்களில் சிலர் சாஸ்த்திர விதியென கூறுகிறார்கள்.  ஆனால் இந்த ஜோதிட விதிக்கு ஜோதிடர்களிடையே பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதே உண்மை.  நமக்கு ஜோதிடம் சொல்லித்தரும் முன்னணி சாஸ்த்திரனூல்களில் இந்த ஜோதிட விதிகள் இல்லை.  எனவே இந்த விதிகளுக்கு பெரும்பான்மை இல்லாமல் போனது.  மேலும் 12 வயதுவரை குழந்தை ஜாதகம் செயல்படாது என்று சொல்லிவிட்டு, 8 ஆவது வயது முதல் 12 ஆவது வயது வரை சுய ஜாதகம் செயல்படும் என்றும் சொல்கிறார்கள்.  இந்த முரண்பாடு ஏன்?  இப்படிப்பட்ட முரண்பாடுகளால் மனதில் பல கேள்விகள் முளைக்கிறன.

முதலில் தாய் ஜாதகம், பின் தந்தை ஜாதகம், பின் சுயஜாதகம் செல்லுபடியாகும் என்றால் 12 வயதுக்கு பின்பு யாருடைய ஜாதகம் செல்லுபடியாகும்?  8 வயதுக்கு மேல் சுயஜாதகம் செல்லுபடியாகும் என்றால், நேரடியாக, 8 வயதுவரை குழந்தையின் ஜாதகம் செயல்படாது என்று சொல்லியிருக்கலாமே!  ஏன் அவ்வாறு சொல்லவில்லை?  : ................  தாய்க்கோ அல்லது தந்தைக்கோ ஜாதகம் இல்லையென்றால், யாருடைய ஜாதகம் வைத்து குழந்தைக்கு பலன் அறிவது?  குழந்தை பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டால், முதல் 4 வருஷங்களுக்கு குழந்தைக்கு எந்த ஜாதகம் வைத்து பலன் பார்ப்பது?  குழந்தையின் ஜெனன ஜாதகம் வைத்து, தாய், தந்தை, தாய்மாமன், உடன்பிறந்தார், சித்தப்பா, சின்னமா, அத்தை ஆகியோரைபற்றி அறியலாம் என்ற வகையில் ஜோதிட விதிகள் இருக்கிறதே.  இவற்றை பயன்படுத்துவதா? அல்லது வேண்டாமா?  இவைகளில் ஏதாவது நுட்பமான ஜோதிட சூட்சுமம் ஒளிந்திருக்கிறதா?  ஒரு தந்தைக்கு இரு குழந்தைகள் இருந்து, அவைகளுக்கு முறையே 5. 7 வயது என்றால், தந்தையின் ஜாதக கர்மவினை எந்த குழந்தையை பாதிக்கும்?  இரட்டை குழந்தைகள் பிறந்து வாழும் போது, இரு வேறு அனுபவங்களை பெறுகிறன என்பது உண்மையானால், மேற்கண்ட விதி எந்த அளவுக்கு சாத்தியம்?  பெற்றோரின் கர்மவினைகளை 8 வயதுவரை குழந்தை அனுபவிக்கும் என்றால், பெற்றோர்கள், அவரவர்கள் ஜாதக கர்மவினைப்படி,  துன்பம், துயரம் ஆகியவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்போதோ அல்லது வேற்றிடத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலோ, அந்த குழந்தைகள் நலமுடன் மகிழ்ச்சியாக இருப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.  இதன் பொருளென்ன?  இனி ஜோதிட சாஸ்த்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ள ஒரு சில ஜோதிடவிதிகளை சிந்தித்தோமானால், மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஜோதிட சாஸ்த்திர நூல்களிலேயே மிகமிக எளிதானதும், ஜோதிடம் கற்றுக்கொள்பவர்களுக்கு முதல் புத்தகமாகவும் விளங்கும் " குடும்ப ஜோதிடம் ", என்னும் நூல் பாலாரிஷ்ட விதிகளை தொகுத்து தருகிறது.  குழந்தைபருவத்தில் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகள் என்பதே பாலாரிஷ்டத்தின் தமிழாக்கம் ஆகும்.  இன்னூலில் உள்ள விதிகளில் ஒன்று : .................  லக்னத்திலிருந்து 4 குடையவன் 8 ல் இருந்தால், அவமானமுள்ள தாய், அல்லது ஜாதகனுக்கு தாயினால் அவமானம் ஏற்படும்.  : ...............  இதன் விளக்கமாவது.  ..........  4 ஆமிடத்தின் காரகத்துவம் தாய்.  8 ஆமிடத்தின் காரகத்துவம் அவமானம்.  ஜாதகம் குழந்தையினுடையது என்பதால், குழந்தையின் தாய், குழந்தைக்கு அவமானத்தை தேடித்தருவாள்.  இது பொதுவான பலன்.  எத்தகைய அவமானம் என்றறிய சாரம், மற்றும் 8 க்குடையவன் இருக்குமிடம் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.  தாய் அவமானமுடையவளாக இருப்பாளா? என்று அறிய, குழந்தையின் ஜாதகத்தில் " பாவத்பாவ " முறைப்படி பலன் விளைகிறதா? என்று பார்க்க வேண்டும்.  அதற்கு தாய்காரகன் யார்? என்று தெரிந்துகொள்ள வேண்டும்.  குழந்தை பகலில் பிறந்திருந்தால் சுக்கிரனும், இரவில் பிறந்திருந்தால் சந்திரனும் தாய்க்காரகர்களாவர்.  மேலே சொல்லப்பட்ட விதி சுருக்கமானது என்பதாலும், ஜோதிடம் பயில்பவர்களுக்கானது என்பதாலும், நாம் எதிர்பார்க்கும் நுட்பங்கள் அதில் கொடுக்கப்படவில்லை.  மேற்கண்ட விதியின் மூலம், தாய், குழந்தை இருவரின் நிலை என்னவென்று அறிய குழந்தை ஜாதகமும் வேண்டும் என்று புரிந்துகொள்ளலாம்.

அதே நேரம் தொழில்முறை ஜோதிடர்கள், இந்த விதியையும் பலனையும் இதோடு நிறுத்திக்கொள்வதில்லை.  தாயின் ஜாதகத்தையும் கவனிப்பர்.  தாயின் ஜாதகத்தில் லக்னாதிபதி அஷ்டமத்தில் இருந்தால் தாய்க்கு அவமானம் நேரும்.  எனவே தாய் அவமானமுள்ளவளாகிறாள்.  அத்துடன் தாய் ஜாதகப்படி புத்திர காரகன் குரு.  எனவே குரு இருக்குமிடத்தை லக்னமாக கொண்டு, குழந்தைக்கு தாயால் அவமானம் நேருமா என்றும் பார்க்க வேண்டும்,  இப்படி இருவழிகளிலும் உறுதியாகும் போது, நாம் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வர முடிகிறது.  அதற்கு குழந்தையின் ஜனன ஜாதகமும் அவசிய தேவையாகிறது என்பதையும் உணரமுடிகிறது.  ................  நாம் கலந்துரையாடல் இன்னும் இருக்கிறது.  அடுத்த பதிவில் தொடர்வோம்.  .................         

3 comments:

  1. ஐயா வணக்கம் குழந்தையின் ஜாதகம் மூன்று வயது வரை சரியில்லை அதனால் தந்தைக்கு கஷ்டம் வரும் ஆட்டிவைக்கும் என்று ஜோதிடர் சொல்கிறார் ஆனால் தந்தையின் ஜாதகம் நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன் ஆனால் தந்தை மிகவும் கஷ்டப்படுகிறார் குழந்தை பிறந்த தேதி 05/09/2019 வியாழன் அன்று மதியம் 2.52 தந்தை பிறந்த தேதி 02/07/1983 பகல் 11.30 க்கு ராசி மீனம் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4 பாகம் கன்னியா லக்கனம் மிக முக்கியமான கேள்வி குழந்தை பிறந்த பிறகு தந்தையின் ஜாதகம் காலாவதியாகிவிடுமா தயவுசெய்து விளக்கவும்

    ReplyDelete
  2. Sir Can I get your contact details.. just mail me lgs0563@gmail.com (LGS Zero Five Six Three )

    ReplyDelete
    Replies
    1. I also need his contact detail, please share with me sir.

      Delete