Thursday 7 January 2016

விவாஹ தசவித பொருத்த விளக்கம். ... தொடர்பதிவு எண். 5.



ம் படைவீட்டம்மா துணை.  வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  .....................  விவாஹ தசவித பொருத்த விளக்கம். ...........................  தொடர்பதிவு எண். 5. ....................  பாரம்பரிய முறை.  .................  " ராசி மற்றும் ராசியதிபதி பொருத்தங்கள். " ...............  இவ்விரு பொருத்தங்களையும் ஒன்றாக பதிவிடுவதில் முக்கிய காரணங்கள் அடங்கியுள்ளன.  இவ்விரு பொருத்தங்களும், புத்திர பாக்கியம் பற்றி தெரிவிப்பவை.  ஆனால் ஒரு நுணுக்கமான வித்தியாசம் இரண்டுக்கும் உண்டு.  ராசிப்பொருத்தத்தின் மூலம் சந்ததியை பற்றி அறியலாம்.  ராசியதிபதி பொருத்தத்தின் மூலம் வம்சத்தை பற்றி அறியலாம்.  வம்சம் என்பது குலம், கோத்திரத்தை பற்றி குறிப்பது.  எனவே மஹாகவி காளிதாசர் தன்னுடைய நூலுக்கு " ரகுவம்சம் ", என்று பெயரிட்டார்.  அந்த வம்சத்தில் வழிவழியாக பிறந்தவர்களின் வரலாற்று தொகுப்பு உடைய நூல் அது. அந்த வம்சாவழியாக வந்தவர் ஸ்ரீராமர்.  ஒரு தம்பதியர் ஆண் குழந்தை பெற்றெடுத்து, அந்த ஆண் குழந்தைக்கு திருமணமாகி, அவனுக்கு ஆண் குழந்தை பிறந்து................  இப்படி வாழையடி வாழையாக ஆண் குழந்தை பிறந்து கொண்டே வருவது வம்சவிருத்தியாகும்.  இதனால் குலம், கோத்திரம் ஆகியன ஒருவனால் வளர்ச்சியடைகிறது.  குழந்தைகள் பிறந்தாலும், வம்சவிருத்தியில் தடை ஏற்படுவதுண்டு.  அதாவது, பெண் குழந்தைகள் மட்டுமே பிறப்பது, அல்லது பிறந்த ஆணுக்கு விவாஹப்ராப்தம் இல்லாமல் போவது.  அல்லது அந்த ஆணுக்கு புத்ரபாக்கியமே கிடைக்காமல் போவது.  இவைகளால் வம்சம் வளராமல் தடைபட்டு போகும்.  குழந்தைகள் இருந்தும், அதனால் வம்சவிருத்தி இல்லையென்றால், அது சந்ததி என்று சொல்லிக்கொள்ளாலாமே ஒழிய, வம்சம் என்று சொல்ல இயலாது.  ராசிப்பொருத்தம் சந்ததியையும், ராசியதிபதி பொருத்தம் வம்சத்தையும் குறிக்கும்.  எனவேதான், ராசியதிபதி பொருத்தம் இருந்தால், ராசிப்பொருத்தம் இருப்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்த்திரங்கள் சொல்லுகிறன.  எனவே விவாஹ தசவித பொருத்தம் பார்க்கும்போது, முதலிடம் ராசியதிபதி பொருத்தத்துக்கு தர வேண்டும்.  இந்த பொருத்தம் ஒன்று இருந்துவிட்டால், ராசி, ரஜ்ஜு, கணம், வேதை ஆகிய பொருத்தங்கள் இல்லையென்றாலும் இருப்பதாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ராசியதிபதி பொருத்தம் இருந்தால் அதோடு மேற்கூறிய பொருத்தங்களும் சேர்த்து மொத்தம் 5 பொருத்தங்கள் பொருந்திவிடுகிறன.  ராசியதிபதி பொருத்தம் இல்லையென்றால், ஒவ்வொரு பொருத்தத்தையும் தனித்தனியாக பார்த்தாக வேண்டும்.  விவாஹ தசவித பொருத்த அட்டவணைகள், இந்த அளவுக்கு கவனமுடன் தயாரிக்கப்படுவதாக தெரியவில்லை.

ராசியதிபதிகள், இருவர் ஜாதகத்திலும் ஒருவராக இருக்க வேண்டும்.  அல்லது ஒருவருக்கொருவர் நட்பாக இருக்க வேண்டும் என்பது ராசியதிபதி பொருத்தத்தின் முக்கிய விதியாக கருதப்படுகிறது.  ராசியதிபதிகள் ஒருவருக்கொருவர் நட்பானால், அவர்கள் பெரும்பாலும் திரிகோணாதிபதிகளாக இருப்பர்.  திரிகோணங்களான 1, 5, 9 நட்பானால், புத்திரபாக்கிய தடை இருக்காது.  இருஜாதக ராசியதிபதிகள் ஒருவராகவே இருந்துவிட்டால், தனக்குதானே கெடுதல் செய்துகொள்வதில்லை.  எனவே இதில் சஷ்டாஷ்டக தோஷம், த்வித்வாதச தோஷம் ஆகியன அடிபட்டுப்போகிறன.  ஆனால் ராசிப்பொருத்தம் பார்த்தாக வேண்டிய சூழ்னிலை ஏற்படும்போது, தனிப்பட்ட முறையில் மேற்கண்ட இருவகை தோஷங்களையும் கவனிக்க வேண்டும்.  ஜோதிட ஆர்வலர்கள் மிக எளிதாக மேற்கண்ட தோஷ விதிவிலக்கு கிரக நிலைகளை நினைவில் வைத்துக்கொள்ள வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

சஷ்டாஷ்டக தோஷ விதிவிலக்கு.. ......................  ராசிகளில் ஆண், பெண் என்று இருவகை உண்டு.  சஷ்டாஷ்டகம் என்றால், பெண் ஜாதகராசியும், ஆண் ஜாதகராசியும் ஒன்றுகொன்று ஆறுக்கெட்டாக அமைவது.  ராசிப்பொருத்தம் பார்க்கும்போது, பெண் ஜாதக ராசி ஆணாக இருந்தால், அதோடு இணையும் ஆண் ஜாதக ராசி பெண்ணாக இருந்தால் சஷ்டாஷ்டகதோஷம் இல்லை.  .........................  த்வித்வாதச தோஷ விதிவிலக்கு.  .....................  த்வித்வாதசம் என்றால், பெண் ஜாதகராசியும், ஆண் ஜாதகராசியும் இரண்டுக்கு பனிரண்டாக அமைவது.  பெண் ஜாதக ராசி பெண்ணாக இருந்து, அதோடு இணையும், ஆண் ஜாதக ராசி ஆணாக அமைந்தால் த்வித்வாதசதோஷம் இல்லை.  ராசிப்பொருத்தத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது.  சூரியனும் சனியும் ஜென்மபகைவர்கள் என்பதால், சிம்மராசியோடு மகர,, கும்பராசிகளை, எந்த விதிவிலக்கு காரணத்தையும் ஆதாரமாக காட்டி இணைத்துவிடவே கூடாது.  இதில் சிம்மராசிக்குரிய மகம் மட்டும் மகர, கும்பத்துடன் விவாஹதசவித பொருத்தம் எதுவும் பார்க்காமல் இணைக்கலாம் என்று சாஸ்திரம் அனுமதிக்கிறது.  இவ்வளவு நுட்பமாக கணிக்கப்படும் விவாஹதசவித பொருத்த அட்டவணை இன்று வரை என் கண்ணில் படவில்லை.  எனவே வாசகர்களே, அட்டவணையை நம்பி, பொருத்தம் பார்க்கும் ஜாதகத்தை அவசரப்பட்டு தள்ளுவதும், கொள்ளுவதும் ஆகாது என்று என் வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.  நன்றி.  வணக்கம். ....................................  தொடரும்.  ...................          

1 comment:

  1. Hi

    please provide your contact number . I would like to consult. my email id : sivjothie@gmail.com

    thanks

    ReplyDelete