Thursday 26 November 2015

" ஜோதிடரும், ஜீவனபலனும் [ தொழில் / பணி / வணிகம் ] ",



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்....................  " ஜோதிடரும், ஜீவனபலனும் [ தொழில் / பணி / வணிகம் ] ",...............பாரம்பரிய முறையிலான ஜாதகர்களுக்கான பதிவு.  இந்த பதிவை ஜாதகர்கள் படிப்பதன் மூலம், ஒரு ஜோதிடர் மூலம், ஜாதகப்படி, சரியான ஜீவனத்தை தேர்வு செய்துகொள்ளும் வழிமுறையையும், அதை வெற்றிகரமாக நடத்த தேவையான பின்பற்றுதல்களையும் { இயந்திரம், நவரத்தின கற்கள் தெய்வ வழிபாடு } அறிந்துகொள்ள முடியும்.

ஜோதிடரும், ஜாதகமும்:......................  ஒரு ஜாதகருக்குரிய ஜீவனத்தை அறிய வேண்டுமானால், ஜீவனஸ்தானம், லாபஸ்தானம், ஜீவனாதிபதி இருக்கும் ஸ்தானாதிபதி ஆகிய மூன்று நிலைகளில் அணுகவேண்டியிருக்கிறது.  மொத்தம் ஒன்பது கோணங்களில் ஆராய்ந்து, அதில் அதிக வலுவுள்ள, சுபகரமான கிரகத்தை, தேர்வு செய்ய வேண்டும்.  இப்படி தேர்வு செய்யப்படும் கிரகமே ஜீவன கிரகமாகும்.  நமது சாஸ்த்திரத்தில், ஒவ்வொரு கிரகத்துக்கும் நூற்றுக்கணக்கான ஜீவனங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.  எனவே ஜோதிடரால், அந்த கிரகத்தை அடையாளம் காட்டி, பொதுவாக 1.  அரசுப்பணி,  2.  பெரிய நிறுவனத்தில் நிர்வாக பணி  3.  சொந்ததொழில்  04.  அடிமைத்தொழில்  05. வணிகம் என்றெல்லாம் குறிப்பிட முடியுமே தவிர, ஜாதகர் இந்த தொழிலைத்தான் செய்வார் என்று உறுதியாக சொல்ல இயலாது.  எனவே ஜாதகர்கள் தனக்கான வெற்றிகரமான ஜீவனத்தை தேர்வு செய்ய, ஜோதிடருடன், நீண்ட கலந்துரையாடல் செய்ய வேண்டியிருக்கிறது.  ஜாதகர் செய்யும் ஜீவனம், விரும்பும் ஜீவனம், ஆகியன ஜோதிடரிடம் தெரிவித்தால், அந்த ஜீவனங்கள் ஜீவனகிரகத்தோடு ஒத்துப்போகிறதா?  அல்லது மாற்றிக்கொள்ள வேண்டுமா?  அல்லது தடை ஏதும் இருப்பின், அதை நீக்கிக்கொள்ள வழி ஏதேனும் இருக்க்றதா? அல்லது செய்வது தற்காலிகமா? நிரந்தரம் எப்போது?  என்றெல்லாம் அவர் ஆராய்ந்து வழிகாட்டுவார்.

ஜீவனத்தில் வெற்றியும், தோல்வியும்:  ....................  ஒரு ஜாதகருக்கு, கல்வியை தருவது கல்விக்கிரகம்.  இந்த கல்விக்கிரகமே, ஜீவனகிரகமாக அமையும்போதும், கல்விக்கிரகம் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலும், அல்லது ஜீவன கிரகம் கல்விஸ்தானத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலும், படித்த படிப்புக்கேற்ற ஜீவனம் ஜாதகருக்கு அமையும்.  எனவே அவர் வெற்றிகரமான ஜீவனத்தை மேற்கொள்வார்.  கல்விக்கிரகமும், ஜீவனகிரகமும் வேறுவேறாக அமைந்துவிட்டால், படித்த படிப்புக்கேற்ற ஜீவனம் அமையாது.  இத்தகைய ஜாதகரால் முழு ஈடுபாடுடன் ஜீவனத்தை மேற்கொள்ள முடியாமல், அரைமனதுடனேயே காலத்தை கழிப்பார்.  எனவே மேற்படிப்புக்கான கல்வியை தேர்வு செய்யும்போதே, அது ஜீவனத்திற்கு உதவுமா? அன்று அறிந்துகொள்ளுதல் நன்று.  ஒரு சிலருக்கு, படித்தபடிப்புக்கேற்ற ஜீவனம் அமைந்தாலும், அதில் மேன்மையடைய முடியாமல் தவிப்பார்கள்.  இதற்கு காரணம், கல்விகிரகமும், ஜீவனகிரகமும் ஒரே கிரகமாக அமைந்திருந்தாலும், அந்த கிரகம் பலவீனமாக இருக்கலாம்.  இந்த பலவீனத்தை போக்க, இறைவழிபாடு, நவரத்தின கற்கள், இயந்திரம் ஆகியவை உதவுகிறன.  இந்த வழிமுறைகளில் தேவையானதை தேர்வு செய்துகொண்டு ஜீவனத்தில் வெற்றியடையமுடியும்.

இயந்திரம், நவரத்தின கற்கள், இறைவழிபாடு:.............................  இயந்திரங்களை இருவகையாக பிரிக்கலாம்.  1.  கிரக இயந்திரங்கள்.  2.  கிரகத்துக்குரிய தெய்வீக இயந்திரங்கள்.  அதாவது, கிரகங்களுக்கான தெய்வங்களுக்குரிய இயந்திரங்கள்.  இவ்விருவகை இயந்திரங்களை பற்றியும், அதற்குரிய மந்திரங்களை பற்றியும், நமது வேதங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.    கிரக இயந்திரங்கள், கிரகங்களின் சக்தியை ஈர்த்துத்தருபவை.  அந்த சக்தி தீயபலனை தருவதாக இருந்தாலும் அதையும் ஈர்த்துதந்துவிடும்.  எனவே கிரக இயந்திரங்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவை.  கிரகதெய்வீக இயந்திரங்கள், இறை வழிபாட்டுக்கு ஒப்பானவை.  பாதுகாப்பானவை.  ஆனால் நிதானமாக செயல்புரியக்கூடியவை.  இவ்வகை இயந்திரங்கள், நம் வேண்டுதலுக்கு ஏற்றவாறு, கிரகங்களின் சக்தியை பெற்றுத்தரும்.  உதாரணத்திற்கு, ஒரு ஜீவனகிரகம், சுபகரமாக இருந்தாலும், நீசமடைந்திருந்தால், பலன் தருவதில் மிகவும் பலவீனமாக இருக்கும்.  அந்த கிரகத்துக்குரிய இயந்திரத்தை ஸ்தாபித்துக்கொள்வதன் மூலம், பலவீனத்தை போக்கி சக்தியை பெருக்கிக்கொள்ளலாம்.  அதுவே ஜீவன கிரகம் நல்ல வலுவுடன் இருந்து, விரயத்தில் இருந்தால், ஜாதகர் அடிக்கடி ஜீவனத்தை மாற்றிக்கொள்வார்.  அத்துடன் ஜீவன இடமும் அடிக்கடி மாறும்.  அலைச்சல் அதிகமாக இருக்கும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில், ஜீவனகிரக இயந்திர ஸ்தாபிதம் செய்துகொண்டால், மேற்கண்ட விரும்பத்தகாத பலன்கள் அதிகரித்துவிடும்.  எனவே இத்தகைய ஜாதக அமைப்புக்கு கிரகதெய்வீக இயந்திரங்களே பொருத்தமானவை.  இதைப்போலவே நவரத்தின கற்களும் செயல்படுகின்றன.  ஒவ்வொரு நவரத்தின கல்லும், அதற்குரிய கிரக சக்தியை ஈர்த்துத்தரும்.  எனவே கல்லை தேர்வு செய்வதில், இயந்திர தேர்வை விட மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.  கிரகதெய்வீக இயந்திரங்களைப்போல் கற்களில், கிரகதெய்வீக கற்கள் கிடையாது.  நமது சாஸ்த்திரங்களில், கிரகங்களுக்குரிய கற்கள் மட்டுமே  பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  அடுத்து, இறைவழிபாடு என்பது கிரகங்களுக்குரிய பரிகார வழிபாடாகும்.  அதாவது, ஜீவன கிரகத்துக்குரிய ப்ரீதிகளை செய்வதுடன், அக்கிரகத்திற்கான தெய்வத்தையும் வணங்கி, அந்த தெய்வத்தின் சார்பாக, இவ்வுலக உயிர்களுக்கும் உதவுவதாகும்.  இதை சுருக்கமாக ஜீவகாருண்யம் என்று சொல்லலாம். 

எனவே ஜாதகர்கள், தங்கள் ஜீவனத்தை [ தொழில் / பணி / வணிகம் ] பற்றி தெரிந்துகொள்ள ஜோதிடரை அணுகும்போது, மேற்கண்ட வழிமுறைகளை, கவனத்தில் கொண்டு, ஜோதிடரிடம், மனம் திறந்த கலந்துரையடலை மேற்கொண்டு, வெற்றகரமான ஜீவனத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோளாகும்.  அதற்கு இறைவன் அருள் துணையிருப்பதாக.  ................  நன்றி.  வணக்கம்.                

No comments:

Post a Comment