Monday 6 July 2015

அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது............ பாகம். 4.


ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது............  பாகம். 4.  பாகம் 3 இன் தொடர்ச்சி.  ......................  பாரம்பரிய முறை........................  இந்த தொடர் பதிவில் விடுபட்டு போன சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  பொதுவாக கிரகங்கள் அஸ்தங்கமடைந்தால், அதன் ஒளியையும், சக்தியையும் இழந்துவிடும்.  அதனால் பலன் தர இயலாமல் பலவீனமடைகிறன.  ஆனால் புதன் மட்டும் அஸ்தங்கமானாலும், தன் சுயகாரகத்துவத்தை பலனாக வழங்குவது எவ்வாறு"  அது போல் சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லயென்றால் அதன் காரணம் என்ன?  இப்படியெல்லாம் சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.  பதிவிடும்போதே இதற்கும் சேர்த்து பதிவிட்டிருக்க வேண்டும்.  விடுபட்டு போனதால் இப்போது பதிவிடுகிறேன். 

சூரியனை ஒரு மையப்பொருளாக கொண்டு, இந்த பூமி ஒரு வட்டப்பாதையை அமைத்துக்கொள்டு சுற்றி வருகிறது.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரு உள்வட்டப்பாதையை அமைத்துக்கொண்டு சூரியனை புதன் சுற்றி வருகிறது.  சந்திரன் பூமியை சுற்றி ஒரு வட்டப்பதையை அமைத்துக்கொண்டு பூமியை சுற்றி வருகிறது.  செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் சூரியனை மையப்பொருளாக கொண்டு, பூமியின் வட்டாபாதைக்கு அடுத்தாற்போல் வெளிவட்டப்பாதைகளை அமைத்துக்கொண்டு சுற்றி வருகிறன.  இக்கிரங்கங்களின் பாதை சூரியனையும், பூமியையும் விட்டு விலகி வெளிவட்டமாக அமைந்ததால், பூமிக்கும், சூரியனுக்கும் இடையே இவைகள்  வருவதில்லை.  சுக்கிரனுடைய பாதை, புதனைப்போல உள்வட்டப்பாதையாக அமைந்திருந்தாலும், அது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருவதில்லை.  அதன் பாதை அமைப்பு அவ்வாறு உள்ளது.  ஆனால் புதன் அடிக்கடி பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வரும்.  சந்திரனும் பூமியை சுற்றி வருவதால் 15 தினங்களுக்கு ஒருமுறை பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகிறது. 

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் அஸ்தங்கமடையும் போது, அவை சூரியனுக்கு பின்னால் சென்று மறைகிறன.  எனவே அவைகளின் சக்தியையும், ஒளியையும், சூரியன் ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது.  சூரியனுக்கும், பூமிக்கும் இடையே புதன் வரும் போது ஒருமுறையும், சூரியனுக்கு பின்னால் செல்லும் போது ஒரு முறையும் புதன் அஸ்தங்கமடைகிறது.  புதன், சூரியனுக்கு பின்னால் சென்று மறையும் போது, மற்ற கியரகங்களிப்போல், சூரியனிடம் தன் சக்தி, ஒளி ஆகியனவற்றை இழந்தாலும், மற்ற கிரகங்களைப்போல் தன் சுயகாரகத்துவங்களை முற்றிலுமாக இழப்பதில்லை.  மற்ற கிரகங்கள் மிகவும் தொலைதூரத்தில் சூரியனுக்கு பின்னால் மறைகிறன.  புதன் வெகு அருகாமையில் மறைகிறது.  எனவே அதன் சக்தி ஓரளவு நமக்கு கிடைத்துவிடுகிறது.  இப்படி புதன் மறைந்தாலும், அதன் பலன் நமக்கு கிடைப்பதால், " மறைந்த புதன் நிறைந்த பலன் ", என கூறப்படுகிறது.    அதுவே புதன், சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வரும் போது, புதன் முழுமையாக மறைந்துவிடுவதில்லை.  அதன் ஒரு பாதி சூரியனை பார்த்தவாறும், மறுபாதி பூமியை பார்த்தவாறும் இருக்கும்.  எனவே புதன் தன் சக்தியை பூமிக்கு நேரடியாக தந்துவிடுகிறது.  இதனால் புதனின் சுயகாரகத்துவம் நமக்கு கிடைக்கிறது.  ஆனால், இம்மாதிரியான அஸ்தங்க அமைப்பில் புதன் இருக்கும்போது, அது வக்கிரமடைந்துவிடும்.  எனவே அவரது சுயகாரகத்துவங்கள் வக்கிரமடைந்த பலனாகவே நமக்கு கிடைக்கிறது.  இவ்வாறு, புதன் சூரியனோடு இணைந்து, பின்னால் அஸ்தங்கமானாலும், முன்னால் அஸ்தங்கமானாலும், அதன் காரகத்துவங்கள் நமக்கு கிடைத்துக்கொண்டே இருப்பதால் இதை " புதாதித்ய யோகம் ", என்கிறனர்.

இனி சந்திரனுக்கு ஏன் அஸ்தங்க தோஷம் இல்லை? என்பதை பற்றி சிந்திப்போம்.  அஸ்தங்கம், உதயம், சீக்கிரம், சமம், மந்தம், வக்கிரம் ஆகிய கதிகள் எல்லாம் சூரியனை சுற்றி வரும் கிரகங்களுக்கு ஏற்படுகிறன.  சந்திரன் பூமியை சுற்றுவதால் இதற்கு இவ்வகையான எந்தவித கதிகளும் இல்லை.  ஒரு கிரகம் அஸ்தங்கமடையும் போது, இழக்கும் தன் சக்தி, ஒளி ஆகியவற்றை உதயகதியின் போது முழுமையாக பெற்று விடுகிறது.  ஆனால் சந்திரன் அஸ்தங்கம் அடைவதாக சொல்லப்படும் எல்லை விட்டு விலகி வந்தாலும், தன் சக்தி, ஒளி ஆகியவற்றை முழுமையாக உடனே பெற்று விடுவதில்லை.  வளர்பிறை என்ற வகையில் சிறுக, சிறுக ஒளியை பெற்று வருகிறது.  இவ்வாறு முழு ஒளியை அடைந்தவுடன் மீண்டும் தன் ஒளியை தேய்பிறை என்ற வகையில் இழக்க ஆரம்பித்துவிடுகிறது.  ஆகையால் நம் முன்னோர்கள் சந்திரன் சூரியனை நெருங்கவதாலும், விலகுவதாலும், பெறும் ஒளியை வைத்து சுபகிரகம், அசுபகிரகம் என்று அதன் தன்மையை வரையறுத்தார்கள்.  ஆகையால் சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லாமல் போனது.  சந்திரன், புதனைவிட இன்னும், மிக, மிக, மிக, நெருக்கமாக பூமிக்கு அருகில் அமைந்திருப்பதால், அதன் ஸ்தானாதிபத்தியம், மற்றும் காரகத்துவ பலன்களை குறைவின்றி நமக்கு  கொடுத்துவிடுகிறது.  மற்ற கிரகங்களுக்கு, அஸ்தங்கம், வக்கிரம் ஆகிய கதிகளை வைத்து பலனை கணிப்பதுபோல், சந்திரனுக்கு, அதன் சுப, அசுபதன்மையை வைத்து பலன்களை கணிக்க வேண்டும்.  நன்றி.  வணக்கம் நண்பர்களே.................................முற்றும்....................             

2 comments: