Sunday 14 June 2015

.வாக்கியமா? திருக்கணிதமா? Part 1



ம் படைவீட்டம்மா துணை.  எல்லோருக்கும் வணக்கம்.  " வாக்கியமும் திருக்கணிதமும் ", .............ஒரு முன்னுரை..............வாசகர்களுக்கான பதிவு.....................வாக்கியமா? திருக்கணிதமா? இந்த பஞ்சாங்களுக்குள் என்னதான் வித்தியாசம்?  ஜோதிடர்கள் இரண்டையும் வைத்துக்கொண்டு நம்மை குழப்புகிறார்களே! என்ற கேள்விகள் வாசகர்கள் மனதில் பல காலமாக இருந்து வருகிறது.  இதை பற்றி, அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக, அதே நேரம் விரிவாக சொல்வாரில்லை.  எனவே எளியேன் இதில் ஈடுபட்டு அவர்களுக்கு புரிய வைக்க விரிவாக சொல்ல இருக்கிறேன்.  இது இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வரலாம்.  இந்த பதிவுகளில், ஜோதிடம் பயில்பவர்களுக்கோ அல்லது தொடக்க நிலை ஜோதிடர்களுக்கோ தேவைப்படும் அளவுக்கு எந்த விளக்கமும், ஆராய்ச்சியும், நுணுக்கமும் இருக்காது, என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  வாசகர்களுக்கு புரிந்தால் போதும் என்ற நோக்கத்துடன் இந்த பதிவுகளை இடுவதே என்னுடைய குறிக்கோளாகும்.......................இனி நாம் தொடர்வோம்......வாசகர்களே.........

 விண்வெளியில் வெளிச்சமாக, ஜோதியாக நம் கண்களுக்கு புலப்படுகின்ற, நக்ஷத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை தம் கதிர்வீச்சுகளால், நமக்கு பல விளைவுகளை உண்டாக்குகின்றன.  அவற்றில் நல்ல விளைவுகளும், தீய விளைவுகளும் அடங்கும்.  இது போன்ற கதிர்வீச்சுகள், நம் கண்களுக்கு புலப்படாத கிரகங்களிலிருந்தும் நம்மை வந்தடைகின்றன.  சூரியன் நம் கண்களுக்கு புலப்படுகிறது.  அதன் கதிர்வீச்சுகள் வெய்யிலாக நம்மை வந்தடைகிறது.  அது போல் சந்திரனுடைய ஒளியையும் சொல்லலாம்.  குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் நக்ஷத்திரம் போல் நம் கண்ணுக்கு தெரிபவையே.  இதன் கதிர்வீச்சுகளும் நம்மை வந்தடைகின்றன.  புதன், சனி, ஆகிய கிரகங்கள் நம் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும், அதன் கதிர்வீச்சுகளும் நம்மை பாதிக்கின்றன. சூரியனுடைய வெய்யில் சந்திரனாலும், பூமியாலும் தடுக்கப்படுகிற போது அவை நிழலாக மாறுகிறன.  அவைகளையே ராகு, கேது என்கிறோம்.  இந்த நிழல்களாலும் நமக்கு பாதிப்பு விளைகிறது.  இந்த பாதிப்புகளை நமக்கு முன்னதாகவே தெரிவித்து, அதன் நன்மை தீமைகளை எடுத்து சொல்வதே ஜோதிட சாஸ்த்திரமாகும்.  .  விண்வெளியில் இருக்கின்ற நக்ஷத்திரங்கள், கிரகங்கள் பற்றி கூறுவது வான சாஸ்த்திரமாகும்.  இந்த வான சாஸ்த்திரங்களே பஞ்சாங்கங்களாக உருவெடுக்கின்றன.  அதை பற்றி விரிவாக பார்க்கலாம். 

இந்த வானசாஸ்த்திரமானது,  எத்தனை வருஷங்களானாலும், ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றுகின்ற, ஆனால் அவ்வப்போது அசைந்து நகர்ந்துகொண்டிருக்கின்ற நக்ஷத்திரங்களை பற்றி தெரிவிக்கின்றன.  கிரகங்கள் அசைந்து நகர்வதை நம்மால் பார்க்க முடிகிறது.  சந்திரன், குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகியவை விண்வெளியில் ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதில்லை.  அவைகள் இடம் மாறிக்கொண்டே இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.  அது போல் எல்லா கிரகங்களும் அசைந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன.  இவைகளின் அசையும் திசை, கோணம், வேகம், சுழற்சி, ஆகியவற்றோடு இவைகளின் உருவம், அளவு, எந்த பொருட்களால் உருவாகியிருக்கிறது, இந்த அசைவுகளால் இவைகள் தினசரி இருக்கும் இருப்பிடம் ஆகியவற்றை வான சாஸ்த்திரம் நமக்கு எடுத்து சொல்கிறது.  இக்கிரகங்களால் உண்டாகும் விளைவுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நமக்கும் வானசாஸ்த்திர அறிவு தேவைப்படுகிறது.  இவ்வறிவுக்காகவே ஜோதிடர்கள் வானசாஸ்த்திரத்தின் மறுவடிவமாகிய பஞ்சாங்கங்களை நாடுகின்றனர்.  ஒவ்வொரு ஜோதிடருக்கும் தான் கணிக்கும் ஜாதகம் சரியாக அமைய வேண்டுமென்றாலும், சொல்லும் பலாபலன்கள் சரியாக இருக்க வேண்டுமென்றாலும் அவசியம் வான சாஸ்த்திரம் தேவைப்படுகிறது.  அதுபோல் ஜோதிடர் தேர்ந்தெடுக்கும் வான சாஸ்த்திரமும் சரியாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.  வான சாஸ்த்திரங்கள் சரியாக இருக்கிறனவா?  அதன் மறுவடிவங்களான பஞ்சாங்கங்கள் சரியாக இருக்கிறனவா? என்பதை பற்றிய விரிவான விளக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.  நன்றி வாசகர்களே.  ................தொடர்வோம்....................          

No comments:

Post a Comment