Wednesday 26 November 2014

புத்ரபாக்கியமு, புத்ர ஹானியும் [ புதன் கிரகம் ]

ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  புத்ரபாக்கியமு, புத்ர ஹானியும் [ புதன் கிரகம் ] என்ற இந்த பதிவை இட ஒரு காரணம் உள்ளது.  கடந்த 16.11.2014 அன்று முகனூல் ஜோதிடர் சபை சேலம் கருத்தரங்கில், புதனை பற்றி என்னால் சொல்லப்பட்ட இரு வரி கருத்தின் விளக்கமாக இதை வெளியிட்டிருக்கிறேன்.  பிருகுசூத்திரம் என்ற வடமொழி ஜோதிட நூல் கூறும் பலன் ஒன்றின் அடிப்படையில் அந்த இரு வரிகளை பேசினேன்.  புதனுக்கு புத்ரஹானி என்னும் காரகத்துவம் உண்டு என்றும், அதனால் புதன் புத்ர பாக்கிய ஸ்தானத்தில் எந்த நிலையில் இருந்தாலும் புத்ரபாக்கியம் தடுப்பார்., என்றும், குழந்தை பிறக்காது என்றும் நான் கூறியதன் விளக்கம் இது.

புதன் புத்ர பாக்கிய ஸ்தானத்தில் இருந்தால் குழந்தை பிறக்காது என்று பிருகுசூத்திரம் கூறுகிறது.  சில நூல்கள் புத்ர பாக்கியம் தாமதமாகும் என்று சொல்கிறன.  இன்னும் சில நூல்கள் குழந்தை பிறக்கும் என்றும் சொல்கிறன. உதாரணத்திற்கு பலதீபிகை குழந்தை பிறக்கும் என்கிறது.  நூல்களுக்குள் ஏனிந்த வேறுபாடு?  ஜோதிடம் அறியாதவர்கள் இயற்றியதா? என்றால் இல்லை.  பின் ஏன் இந்த குழப்பம் என்று ஆய்வுசெய்வதே இப்பதிவின் நோக்கம்.

புதன் அதிக வலுவுடன் இருக்ககூடிய ஸ்தானம் கன்னி.  இதில் புதனுக்கு, ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் என்ற ஸ்தானத்திற்கு அதிபதி என்ற பெருமை சேரும்.  இதுவே புத்ரபாக்கிய ஸ்தானமாக அமைந்தால் அவர் புத்ரஸ்தானாதிபதியாகிறார்.  ஒரு ஸ்தானாதிபதி, அதே ஸ்தானத்தில் நல்ல வலுவுடன் இருந்தால் அந்த ஸ்தானத்தின் பலன் தடையின்றி கிடைக்கும் என்பது ஜோதிடவிதி.  அதன்படி ரிஷப லக்ன ஆண்களுக்கும், மகர லக்ன பெண்களுக்கும் அவர் புத்ர பாக்கியத்தை தடையின்றி வழங்க வேண்டும்.  ஆனால் பலதீபிகையின் பலன் அப்படியில்லை.  புதன் புத்ர ஹானி, அதாவது புத்ர பாக்கியத்தை கெடுப்பவர் என்பதால், மிக அதிக வலுவுடன் இருக்கும் புதனின் காரகத்துவமானது செயல்பட்டு புத்ர பாக்கியத்தை தடை செய்துவிடும் என்ற பிருகுசூத்திரத்தின் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது.  ஆக புதன் குழந்தை பேற்றை தருவாரா? அல்லது தடை செய்வாரா? என்பது கேள்விக்குறியாகிறது.  இதற்கு தீர்வு?????.....

புத்ர பாக்கியம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம்.  தனியொருவர் ஜாதகத்தை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுக்கு வருவது தவறான பலனையே காட்டும்.  ஆணுக்கு இல்லை என்றும், பெண்ணுக்கு உண்டு என்றும் இருந்தால் புத்ர பாக்கியம் தாமதமாக கிடைக்கும்.  இருவருக்கும் தாமதம் என்றால், அதற்கான பரிகார வழிபாடு செய்து மிக தாமதமாக புத்ர பாக்கியத்தை பெறலாம்.  இருவருக்கும் இல்லை என்று ஆகிவிட்டால் நிச்சயம் புத்ர பாக்கியம் கிடைக்காது.  இது பொதுவான் பலன். புதன் கன்னியில் இக்கட்டான சூழ்னிலையில் இருக்கும் போது பெண்ணின் ஜாதகத்தில் தாமதம் என்றோ, இல்லை என்றோ ஆகிவிட்டால், ஆணின் ஜாதகத்தில் உள்ள புதனால் புத்ர பாக்கியம் தர முடியாமல் போகும்.  அதேனேரம் பெண்ணின் ஜாதகத்தில் புத்ரபாக்கியம் நல்ல வலுவுடன் இருந்தால், கிடைக்கும் பாக்கியமானது தாமதப்படும்.  இதையே மேற்கண்ட நூல்கள் கிடைக்காது, தாமதம், கிடைக்கும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்கிறன.

புதன் சுபகரமாக, தன்புத்ரபாக்கிய ஸ்தானத்திலேயே இருக்கும் போதே இந்த கேள்விக்குறி நிலை என்றால் மற்றவர்களின் புத்ரபாக்கிய ஸ்தானத்தில் இருந்தால் நிச்சயம் புத்ரபாக்கியம் வாய்க்காது என்பது புலனாகிறது.  அதிலும், குருவுடன் சேர்ந்திருந்தால், காரகோ பாவ நாஸ்தி என்ற அடிப்படையில் புதனுடன் இணைந்து, நிச்சயம் புத்ரபாக்கியத்தை குரு கெடுத்துவிடுவார்.  எனவே புதனோடு பாபகிரகங்களின் தொடர்பு என்பது புத்ரபாக்கியத்துக்கு வழிவகுக்காது என்றும் சொல்லிதெரியவேண்டியதில்லை..  இதை பற்றி இன்னும் விரிவாக சொல்லவேண்டுமென்றால் ஒரு சிறிய அளவிலான நூலையே எழுதிவிடலாம்.  மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் புத்ரபாக்கியம் புதனால் கிடைக்காது என்பதே பெரும்பான்மையாக அமையும்.  ஆகவே பொதுவாக பிருகுசூத்திரமானது, அழுத்தம் திருத்தமாக, ஐந்தில் புதன் இருந்தால் புத்ரபாக்கியம் இருக்காது என்று கூறுகிறது.  இதை அடிப்படையாக வைத்தே சேலம் கருத்தரங்கில், புதனால் புத்ரபாக்கியம் தர இயலாது என்று பேசியிருக்கிறேன் என்பதை ஒரு விளக்கமாக உங்கள் அனைவருக்கும் பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலே நான் சொல்லியிருக்கும் விதி முறைகளை ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒப்பிட்டு கணக்கிட்டு பாருங்கள் மிக சரியாக வரும்.  ஆகவே ஆணோ, பெண்ணோ.......................இருவரில் ஒருவரின் ஜாதகத்தில் புத்ரஃபாக்கிய ஸ்தானத்தில் புதன் இருந்துவிட்டால் புத்ரபாக்கியம் மிகப்பெரும் கேள்விக்குறிதான் என்பதில் சந்தேகமேயில்லை.  நன்றி.

No comments:

Post a Comment