Saturday 16 August 2014

இருதார தோஷம்/யோகம் மற்றும் பரிகாரம் பற்றிய 2 வது பதிவு இது.



 ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  இருதார தோஷம்/யோகம் மற்றும் பரிகாரம் பற்றிய 2 வது பதிவு இது.  [ முதல் பதிவின் தொடர்ச்சி ]  முதல் பதிவில் களத்திர ஸ்தானாதிபதி விரையமானால் என்னாகும்? அதற்கு என்ன செய்யலாம்? என்றும் பார்த்தோம்.  இந்த பதிவில் களத்திர ஸ்தானாதிபதி லாபஸ்தானத்தில் இருந்தால் என்னாகும்?  அதற்கு என்ன செய்யலாம்?என்று பார்க்கலாம்.  பலர் சொல்வது போல் இதுவும் இருதார தோஷம்/யோகம் தானா? என்றும் பார்க்கலாம்.

இம்மாதிரியான அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் ; இரு தார யோகம் ' என்று சொல்லிவிடுகிறனர்.  இதற்கு பரிகாரம் என்று ' வாழை மர', பரிகாரமும் சொல்லுகிறனர்.  களத்திர ஸ்தானாதிபதி விரையத்தில் இருந்தாலும், லாபத்தில் இருந்தாலும் பரிகாரம் ஒன்றுதானா?  இரண்டுக்கும் பலனில் வித்தியாசம் கிடையாதா? என்றெல்லாம் சிந்தனைகள் ஓடும்.  உண்மையில் இது வேறு, அது வேறு.  களத்திர ஸ்தானத்திற்கு ' காமம் ' என்றொரு காரகத்துவமும் உண்டு.  இதனால் களத்திரஸ்தானாதிபதி லாபத்தில் இருந்தால் காமம் அதிகப்படும்.  இத்தகையோர்கள் விரைவிலேயே வாழ்க்கைத்துணையை தேடுவார்கள்.  ஆனால் இத்தகைய ஜாதகங்களுக்கு பலனாக திருமணம் தாமதமாக செய்ய வேண்டும் என்று, பரிகாரம் செய்தால் இருதார தோஷம்/யோகம் நீங்கும் என்று சொல்வது பொருத்தமானதல்ல.  இத்தகைய ஜாதகர்களுக்கு விரைவில் திருமணம் முடிக்காவிடில் வாழ்க்கையில் பண்பாட்டு முறை தவற வாய்ப்புகளுக்கு இடம் தருவதுபோலாகிவிடும்.  மேலும் பரிகாரங்கள் செய்வதால் இவர்கள் காம உணர்வுகள் சரியாகிவிடுமா? என்பதும் கேள்விக்குறி?

இவர்களுக்கான வாழ்க்கைத்துணையை தேர்வுசெய்வதிலும் அதிக கவனம் தேவை.  இதே மாதிரியான ஜாதகத்தை இணைக்கும் போது அவர்களுக்குள் ஒத்துபோய்விடும்.  இரு வேறு வகையான ஜாதகங்களை இணைத்தால் வாழ்க்கை ஏறுக்கு மாறாக அமைந்து விடும்.  அதாவது, ஒரு வாழ்க்கைத்துணை இருக்கும்போதே இன்னொன்றையும் நாடுவார்கள்.  ஆகவே களத்திர ஸ்தானாதிபதி விரையத்தில் இருப்பதற்கும் லாபத்தில் இருப்பதற்கும் வித்தியசம் உள்ளது. 

அதுபோல் விரையாதிபதி களத்திர ஸ்தானத்தில் இருந்தாலும், லாபஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் ஒரே மாதிரியான பலனே சொல்லப்படுகிறது.  இம்மாதிரியான பலனை நம்பி திருமணத்தை தள்ளிப்போடுவதும், ஜாதகம் வேண்டாம் என்று நல்ல வாழ்க்கை துணை கிடைக்க இருப்பதை இழப்பதுமாக இருப்பதும் வேதனைக்குரியது.  விரையாதிபதி களத்திர ஸ்தானத்தில் இருந்தால் வாழ்க்கைத்துணைக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.  அல்லது ஒரு சிலவற்றை இழக்க வேண்டி வரலாம்.  அவை எவ்வகையானவை என்று ஜாதகத்தை சற்று நுட்பமாக பார்த்தால் தெரிந்துவிடும்.  அதுபோல் லாபாதிபதி களத்திர ஸ்தானத்தில் இருந்தால், வாழ்க்கைத்துணையால் வரவுகள் அதிகமாகும். அவை பொன் பொருள், போன்றவைகளாகவும் இருக்கலாம்.  வரும் வரவுகள் எவ்வகையானவை என்று அறிய ஜாதகத்தை நுட்பமாக பார்க்க வேண்டும்.  இவ்வகை ஜாதகங்களையும் இருதார தோஷம்/யோகம் என்ற பட்டியலில் சேர்த்து வரும் நல்ல வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்.  எனவே, தாரத்தால் இழப்பா? தாரமே இழப்பா? தாரத்தால் வரவா? தாரங்களே வரவா? என்றெல்லாம் ஜாதகங்களில் வித்தியாசம் உள்ளது. இவற்றையெல்லாம் கவனித்து சொல்லகூடியவரே நல்ல ஜோதிடராவார்.  அதுபோல் ஜாதகர்களும் ஒன்றுக்கு பலமுறை இவ்விஷயங்களில் யோசிப்பதும் நல்லது.  இறைவன் திருவருளால் இவ்விஷயத்தில் எல்லோருக்கும் நல்ல ஜோதிடர்கள் அமைந்து வாழ்க்கை செழிப்புற வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.  நன்றி. 


2 comments:

  1. Nalla pathivu, , vazha ayya neengal......

    ReplyDelete
  2. வணக்கம் அய்யா,

    உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது. களத்திர ஸ்தானாதிபதி லாபாதிபதியோடு கூடினாலும் ஒன்றிக்கு மேற்ப்பட்ட திருமணம் நடக்கும் என்கிறார்களே உண்மையா.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete