Monday 14 April 2014

தம்பதிகளில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, ஒருவருக்கு இல்லை என்றால் என்னாகும்? என்ன செய்யவேண்டும்?



  ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  "திருமணம் ஆன தம்பதிகளில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, ஒருவருக்கு இல்லை என்றால் என்னாகும்?  என்ன செய்யவேண்டும்? "  என்று நண்பர் திரு. L.v. Rajapandian  அவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்வி இது.  இதற்கான பதில் தனிப்பட்ட முறையில் அவருக்கு சொல்வதை விட, பதிவாக வெளியிட்டால், பயனுள்ள நல்ல கலந்துரையாடல் கிடைக்கும்.  அது திரு ராஜபாண்டியன் போன்ற தம்பதியர் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையுமென்று எண்ணி பதிவாக வெளியிட்டிருக்கிறேன். 

  1.  செவ்வாய் காரகத்துவம் : { ஆண்கள் }
      கட்டுக்கோப்பான உடல், குறையில்லாத ரத்த ஓட்டம், சுகபோகம் தரும் வீரியம், ஆகிய தன்மைகள், செவ்வாய் நல்ல முறையில் ஒரு ஆண் ஜாதகத்திலிருந்தால் அமையக்கூடியனவாகும்.

  2.  செவ்வாய் காரகத்துவம்:  { பெண்கள் }
      காலத்தே பூப்பெய்துதல், முறையான மாத விடாய் ஆகியன, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல முறையில் இருந்தால் அமையக்கூடியனவாகும்.  ருது மங்கள ஜாதகம் எழுதும் போதுபெரியோர் சொல்லும் நேரமானது சரியாக இருக்கிறதா? என தெரிந்துகொள்ள செவ்வாய் நிலை ஆராய வேண்டும்.  அதன் பின்பே லக்னம் அமைக்க வேண்டும், என்பது ஜோதிடத்தில் விதியாக கூறப்பட்டுள்ளது.

  மேலே கூறப்பட்ட காரகத்துவம் அமையப்பெற்ற இருவரும், செவ்வாய் பகவான் அருளால் இனிதே இல்லறம் நடத்துவர்.  இவர்கள் இருவரும் செவ்வாய் தோஷம் அற்றவர்களாவர்.  எனவே திருமண பொருத்த விஷயத்தில் செவ்வாய் குறை { தோஷம் } இன்றி உள்ளதா? எனப் பார்த்து இணைக்கிறார்கள்.  குறை { தோஷம் } இருப்பின், குறையுள்ள ப் தோஷமுள்ள } ஜாதகத்தை இணைக்கிறார்கள்.  இதையே ஜோதிட சாஸ்த்திரம் ' தோஷ சாம்யம் ' என்கிறது.  குறை என்பது எத்தன்மையதோ, அதற்கேற்றாற் போல் அத்தன்மை உள்ள ஜாதகத்தை இணைக்கிறார்கள்..    இத்தனமையை கண்டுகொள்வதற்காகத்தான்,  ஜாதகத்தில் செவ்வாய் இருப்பிடம். செவ்வாயை பார்க்கும் கிரகம் ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  இதில் ஒருவருக்கு குறைத்தன்மை இருந்து, ஒருவருக்கு நிறைத்தன்மை இருந்து இணைத்தோமானால், குறைத்தன்மையானது, ஆண் பெண்ணுக்கு தக்கவாறு காரகத்துவ பலனை குறைத்து விடும்.  இப்படி ஏறுக்கு மாறாக அமைந்த பின்பு என்ன செய்வது? என்பது தான் கேள்வி.

  இதற்கு இரு வழிகளை கடைபிடிக்க வேண்டும்.  ஒருவழி நல்ல மருத்துவரை அணுகுதல்.  இன்னொருவழி இறைவனை அணுகி வழிபடுதல்.  நாம் இறைவனை அணுகும் முறையை பார்க்கலாம்.  "சிறுகுடி" என்றொரு ஸ்தலம் உள்ளது.  மயிலாடுதுரையிலிருந்து, பேரளம், கூந்தலூர், கடகம்பாடி வழியாக ஸ்தலத்தை அடையலாம்.  ஆனால் மயிலாடுதுரையிலிருந்து, பேரளம், திருப்பாம்புரம், வழியாக ஸ்தலத்தை அடைவது போக்குவரத்துக்கு வசதியான வழியாகும்.  திருக்கோயில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை திறந்திருக்கும்.  இங்கு ஸ்ரீமங்களனாதர் என்ற பெயருடன் இறைவனும், ஸ்ரீமங்களனாயகி என்ற பெயருடன் இறைவியும் எழுந்தருளியுள்ளார்கள்.  வினாயகரோ ஸ்ரீமங்களவினாயகர்.  தீர்த்தம் ஸ்ரீமங்களதீர்த்தம்.  [ செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயருண்டு என்பது இங்கு நினைவில் கொள்ளவேண்டும் ].  மங்கள வாரத்தன்று அதாவது செவ்வாய்க்கிழமை ஸ்ரீமங்கள தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீமங்களவினாயகரை வணங்கி, ஸ்ரீமங்களனாதருக்கும், ஸ்ரீமங்களநாயகிக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.  தோஷமுள்ளவர் ஆணாக இருப்பின் ஸ்ரீமங்களனாதர் திருவடியிலும், பெண்ணாக இருந்தால் ஸ்ரீமங்களனாயகி திருவடியிலும், ஒரு பவளமணி மாலையை வைத்து அர்ச்சித்து அணிந்து கொள்ளவேண்டும்.  மேலும் செவ்வாய் பகவானுக்குரிய பரிகாரங்கள் எதுவாக இருந்தாலும் மேற்கொள்ளலாம்.  அடுத்து ஸ்ரீஆலிங்கன மூர்த்தியாக எழுந்தருளி, ஸ்ரீஅம்பிகையை அனைத்தவண்ணம் இருக்கும் ஸ்ரீசிவபெருமான் உற்சவ மூர்த்தத்தையும் வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.  வரும் தம்பதியர்கள் தோஷம் நீங்கப்பெற்று தம்மைப்போலவே ஆனந்தமாய் வாழ இறைவன் ஸ்ரீஆலிங்கன மூர்த்தியாய் இருந்து அருள் புரிகிரார்.  எனவே திருமணத்துக்கு பின் செவ்வாய் தோஷம் இருவரில் ஒருவருக்கு இருப்பது தெரியவரின், இத்தலத்து இறைவனை வணங்கி மங்களமாய் வாழ்வார்களாக. 

1 comment:

  1. Ayya kalai vanakkam,enkalukku arranged marriage 23/04/2009 _il nadanthathu,some problems nankal chennaiyl thanikudithanam seithuvandhoam,03/06/2010_il oru pen kizhanthai pirantha 29 natkal parthan athan piragu sila thagatha varthaikalal ennal parkavum mudiyavillai pokavum mudoyavillai,palathadavai muyarchikal seithum palanallikavillail,nankal onru sera mudiyuma,ennudaya feature life patriyum therinthukoll aasaipadukinran,melum nan iruthalaikooli pola vazhnthukondirukkinran ithil irunthu eppozhudhu vidudhalai kidaikkum ena thankal pathillukkaka kathukondirukkinfan,.

    ReplyDelete