Thursday 20 March 2014

சயனதோஷம் பற்றிய ஜோதிடர்களுக்கான பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்க்ம் வணக்கம்.  இது.  [ பாரம்பரிய முறை ] இதை வாசகர்களுக்கான பதிவின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்.  சயனதோஷத்தின் கிரக அமைப்பே சற்று வித்தியாசமானதாகும்.  சயனஸ்தானம் எனப்படும் விரயத்தோடு தொடர்புடையது இது.  இந்த ஸ்தானத்தில் சுபாவ சுபர்களான குரு, சுக்கிரன், சுப புதன், சுப சந்திரன் ஆகியோர் தனித்தனியாகவோ அல்ல்து கூட்டாகவோ இருந்தால் சயனதோஷம் ஏற்படும்.  ஸ்ரீ வராகிமிகிரர் தத்துவப்படி, ஒரு பாபஸ்தானத்தில் சுபாவ சுப கிரகம் இருந்தால், அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறையும். அதன் படி விரயஸ்தாத்தில் சுபாவ சுப கிரகங்கள் இருக்கும் போது,  அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறைந்து தோஷம் உருவாகிறது. 

     1.  குரு என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும்போது சயனதோஷம் உருவாவதோடு,  புத்திரத்தடை ஏற்படுகிறது.  ஏனென்றால் குருவின் காரகத்த்துவத்தில் ஒன்று புத்திர பாக்கியம். 

     2.  சுக்கிரன் என்ற சுபாவ சுப கிர்க்ம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் உருவாவதோடு, தாம்பத்திய உறவில் திருப்தியின்மையோ அல்லது நாட்டமின்மையோ ஏற்படுகிறது.  ஏனென்றால் சுக்கிரனின் காரகத்துவத்தில் ஒன்று காமம். 

     3.  புதன் என்ற கிரகம் சுபாவ சுபத்தன்மையோடு இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, புத்திர பாக்கிய தடையும் ஏற்படுத்துகிறது.  புதனுக்கு புத்ர ஹீனன் என்ற காரகத்துவம் உண்டு.  அதாவது ஜனன ஜாதகத்தில் புதன் கெட்டுபோக வேண்டும் அதாவது அஸ்தங்கதம் அடையவேண்டும்.  அல்லது 6,8,12 ஆகிய இடங்களில் மறைய வேண்டும். அப்போதுதான் புத்ரஹீனமும் கெட்டு மறைந்து புத்ர பாக்கியம் உண்டாகும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில் புதனின் தொடர்பு புத்ர பாகய ஸ்தானத்திற்கு ஏற்பட்டால் புத்திர தடை இருக்காது.  புதன்  நல்ல நிலையில் இருந்தால் புத்ர பாக்ய தடை உருவாகும்.  இங்கு புதன் விரயத்தில் மறைவதால் புத்திர பாக்கியம் இருக்கும்.  ஆனால் சயனதோஷத்தின் காரணமாக தாமதமாகும். 

     4.  சந்திரன் என்ற் சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, பெண்மை குறைவையும் ஏற்படுத்தி, தாம்பத்தியம் கசக்க செய்கிறது.  இது பெண்கள் ஜாதகப்படி மட்டுமே நேரும்.

     குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்களின் சுபத்தன்மையை இந்த தோஷத்தை பொறுத்தவரை அதன் சுபாவத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும்.  ஸ்தானாதிபத்தியத்தால் அவை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.  பாப ஸ்தனங்களுக்கு அதிபதியாக இருந்தாலும் பாவிகளாக மாட்டார்கள்.  சுபாவப்படி அவர்கள் சுபர்களே. 

     இந்த தோஷம் ஏற்படும் கால கணிதமும் சற்று வித்தியாசமானதே.  இளம் தம்பதியருக்கு, இந்த கிரகங்கள் தங்களூடைய தசா, புக்தி காலங்களில் மட்டுமே தோஷத்தை தரக்கூடியவர்கள்.  அதிக பட்சம் சுக்கிரதசை, சுக்கிர புக்தி காலத்தில் 3 வருஷம் 4 மாதம் இந்த தோஷத்தை சுக்கிரன் தருவார்.  சந்திரன் தன் தசா, புக்தி காலத்தில் 10 மாதங்கள் மட்டுமே தோஷம் தருவார்.  இந்த தசாபுக்திகள் நடைமுறைக்கு வரும் போது தம்பதியருக்கு இளம் வயதாக இருக்க வேண்டும்.  இந்த கிரக அமைப்பு இல்லாத இளம் தம்பதியருக்கு இந்த தோஷமே ஏற்படுவதில்லை.  ஜனன ஜாதகத்தில் இந்த கிரக அமைப்பு இருந்தும், அது இளமையில் நடைமுறைக்கு வராத நிலையும் உண்டு.  எனவே இந்த கிரக அமைப்பு ஜனன ஜாதகத்தில் இருந்தால், அந்த ஜாதகமே சயனதோஷ ஜாதகம் என்று முடிவெடுப்பதும்  தவறாகிவிடும்.  எனவே சயனதோஷத்தின் கணக்கீடுகளை உன்னிப்பாக கவனித்து, அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, [ பரிகார வழிபாட்டு முறைகளை சொல்வது ] அவர்கள் வாழ்க்கையை பிரகாசமடைய செய்யவேண்டியது ஜோதிடர்கள் கடமையாகும்.  நன்றி

4 comments:

  1. கிரக அமைப்பை தெளிவாக விளக்கவும்

    ReplyDelete
  2. பாப சாம்யம் கணக்கிடுவது எப்படி?

    ReplyDelete