"தசா
சந்தி", பற்றிய விளக்கப் பதிவு இது.
உண்மையில் ஒரு
தசை முடிந்து,
அடுத்த தசை தொடங்கும் தறுவாய்தான் "தசா சந்தி"
என்பதாகும். பொருள் பொதிந்த விளக்கமும் இதுதான். ஆனால் நடப்பில் நடப்பது என்ன?.
விவாகப் பொருத்தம்
பார்க்கும் போது,
தசா சந்தி இருந்தால் இணைக்கக்கூடாது, தள்ளுபடி
செய்யவேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இது தசா சந்தியல்ல. 'ஏக தசை நடப்பு' என்பதாகும். ஆண், பெண் இருவருக்கும் ஏக தசை நடப்பில் இருந்து,
அவை சுபயோகத்தை தருவதாக இருந்தால், இரு ஜாதகங்களையும் இணைக்கலாம். இதில் இன்னும் நுணுக்கமாக பார்க்க
புக்தியையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
( உ-ம் ) ஏக தசை
நடப்பில், ராகு தசை- சனி புக்தி
[அ] கேது புக்தி எனக் கொண்டால், ஜாதகங்களை இணைக்க இயலாது. காரணம். இந்த
தசா புக்தி நிச்சயமாக விவாக பிராப்தியை தராது. அதே நேரம் ராகு தசை - சுக்கிர புக்தி எனக் கொண்டால், இது இருக்கும் சுபயோகத்தை
பொருத்து விவாக பிராப்தம் தரும். இணைக்கலாம். அதே நேரம், இதுவே அசுபயோகத்தில் இருப்பின் இணைக்க இயலாது.
இப்படி தசா புக்தி
கணித்து பொருத்தம் பார்ப்பதை முறைபடி "தசா பொருத்தம்"
என்று சொல்ல வேண்டும்.
இதை தசாசந்தி என்பது தவறு. ஆனால் நடைமுறையில், ஒரு ஜாதகரிடம் தசாபொருத்தம் இல்லை என்று சொன்னால், அதை
அவர் தசபொருத்தம் இல்லை என்று புரிந்துகொண்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். இப்படி நேரக்கூடாது என்பதற்காக இதையும்
தசாசந்தி என்று சொல்லிக்கொண்டிருக்கிரார்கள். அதுதான் நடைமுறையில் உள்ளது.
மொத்ததில், தசா பொருத்தம்
என்னும் தசாசந்தி இருப்பின், அதை ஆராயாமல் “இணைக்ககூடாது”, என்று கூறுவது தவறாகும்.
Purikiradhu nanri sir
ReplyDeleteதிருமணம் முடிந்து10 வருடம் கழித்து திசா சந்தி இருந்தால் ஜாதகம் பொருந்துமா
ReplyDeleteSr unga number send me sr
ReplyDelete