ஆயுள் குறைவாக
உள்ள இளைஞர்களுக்கான பதிவு இது................அதனால் ஆயுளை வளர்க்கக்கூடிய
ஏதோ ஒரு அதிசயமான, அற்புதமான பரிகாரத்தை சொல்லப்போகிறேன் என்று
எண்ணிவிட வேண்டாம். ஆயுளை
நீட்டிக்க ஜோதிட சாஸ்திரத்தில் எந்த வித பரிகாரமும் கிடையாது.
திருமண பொருத்தம்
பார்க்கும் போது இத்தகைய இளைஞர்களின் ஜாதகத்தை, “பொருத்தத் தத்துவம் அறியாத ஜோதிடர்கள்”
தள்ளுபடி செய்துவிடுவார்கள். ஏனென்றால் பெண் விதவையாகிவிடக்கூடாது
என்பது காரணம் என்று சொல்வார்கள். ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது? என்ற விபரம் தெரியாமலேயே
இளைஞர்களுக்கு வயது ஏறிக்கொண்டிருக்கும்.
ஆயுள் விஷயத்தை ஜோதிடர்கள் வெளிப்படையாக சொல்லுவதில்லை. இதை தவறு என்றும் சொல்லிவிடமுடியாது. அப்படியானால் திருமணம் ஆகாமலேயே காலம்
கடத்திக் கொண்டிருக்கும் இளைஞர்கள் கதி என்ன?
இறைவன் கருணையே
வடிவானவன். "ஒரு வழியை அடைத்தால்,
இன்னொரு வழியை திறந்து விடுவான்", என்ற பொன்மொழிக்கு ஏற்றவன். இவ்வகை இளைஞர்களை காக்க அவன் படைத்ததுதான்
"சக்தி" வடிவமான பெண்கள். பெண்களை போகப் பொருளாக கருதுபவர்களுக்கு,
பெண்களின் அருமை தெரியாது.
பெண்களின் அருமையை அறிந்துகொள்ள சிறந்த உதாரணமாக, நமது முன்னோர்கள் சொன்னதுதான் சத்திவான் - சாவித்திரி
கதை. இதில் ஜோதிட நுணுக்கமும்
அடங்கியுள்ளது.
சத்தியவான் ஆயுள்
குறைவு என்பதும்,
சாவித்திரிக்கு ஆயுள் தீர்க்கம் என்பதும் நாரதருக்கு தெரியும். அத்துடன் சாவித்திரி ஜாதகப்படி அவள்
தீர்க்கசுமங்கலி என்பதையும் அவர் அறிவார்.
இதன் அடிப்படையில்தான் அவரது திருவிளையாடல் ஆரம்பிக்கிறது. இந்த இருவரையும் சேர்த்து அவர் திருமணமுடிச்சு
போட்டுவிடுகிறார். இதனால் நடந்தது என்ன? சத்தியவான் ஆயுள் நீண்டுவிட்டது.
திருமண பொருத்தம் பார்ப்பவர்களுக்கு அவர் காட்டிய வழி இது. எப்படியென்றால், தீர்ககசுமங்கலியாக, நீண்ட ஆயுளுடன் இருக்கும் சாவித்திரிக்கு
ஆயுள் முடியும் வரை சத்தியவான் இருந்தாக வேண்டும்………………… இருந்தான் என்பதுதான் கதையின் முடிவு.
இதன் அடிப்படையில், ஜாதகப்படி
நீண்ட ஆயுளுடன், தீர்ககசுமங்கலியாகவும், நிச்சயம் இருப்பாள் என்ற அமைப்பு
உடைய பெண்ணை, ஆயுள் குறைவாக
உள்ள இளைஞனுக்கு பொருத்தம் பார்த்து நிச்சயித்தால், இளைஞனுக்கு
ஆயுள் கூடும் என்பதிலும், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்
என்பதிலும் சந்தேகம் இல்லை. இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியர்களின்
ஜாதகங்களை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
இது போன்ற அனுபவங்கள்
நமது ஜோதிட நண்பர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். அவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம், ஏதோ கடுமையான ஜாதக
தோஷம் பாதித்துள்ளது என்று நினைத்து, ஏதேதோ பரிகாரவழிமுறைகளில்
ஈடுபட்டு, பொழுதையும் பொருளையும் வீணாக்கிகொண்டிருக்கும் இளைஞர்களுக்கு
ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வகை இளைஞர்களும் மேலும்
கவலைப்படாமல், நம்பிக்கையுடன், ஒரு அனுபவமுள்ள,
விபரமான ஜோதிடரை அணுகி கலந்தாலோசித்து வாழ்க்கையை வளமாகிக்கொள்ளுங்கள்.
such a fantastic article ji, keep it up
ReplyDelete