ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது. [ பாகம் 3. ]............பாகம் 2 தொடர்ச்சி. .............
பாரம்பரிய முறை.
.................. கிரகங்கள் எல்லாம்
தத்தம் பாதையில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறன. அவை எப்போதும் பின்னோக்கி வருவதில்லை. சில நேரங்களில், பூமியிலிருந்து பார்க்கும்போது
அவை பின்னோக்கி வருவது போல் தோன்றும். இது
உண்மையல்ல. இது ஒரு தோற்றம் அவ்வளவே. இந்த தோற்றத்திற்கு வக்கிரகதி என்று பெயர். இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன் மெதுவாக நகர்ந்து
செலவது போல் நமக்கு தோன்றும். அதே வேகத்தில்
அவன் நம் அருகில் ஓடினால், விரைந்து ஓடுவது போல் இருக்கும். இரண்டும் ஒட்டத்தில் ஒரே வேகமே. இப்போது நாமும் அவனுடன் சேர்ந்து ஒடும் போது, சில
நேரங்களில் அவன் நம்மிலிருந்து பின்னடைவது போல் இருக்கும். அப்போதும் அவன் ஓட்டம் முன்னோக்கியே இருக்கும். அவனுடைய பின்னடைவு ஒரு தோற்றம் அவ்வளவே. அது போல் கிரகங்களின் ஒட்டங்களில், நமக்கு தோன்றும்
ஒரு தோற்றமே வக்கிரகதியாகும். வழக்கத்திற்கு
மாறாக இப்படி ஒரு தோற்றம் நிகழ்வதால், அந்த கிரகங்கள் தரும் பலன்கள் கூட வழக்கத்திற்கு
மாறாக அமைந்திருக்கும்.
வக்கிர கதியில் இருக்கும்
கிரகங்களின் பலன்களை கணிப்பதில், கூடுதல் கவனமும், அனுபவமும் தேவை. திடீர், திடீரென்று அவை தான் பலன் தரவேண்டிய தன்மைகளை
மாற்றிக்கொள்ளும். ஒரு பைத்தியக்காரனின் செயல்பாடுகளைப்போல்
அதன் செயல்பாடுகள் இருக்கும். நல்ல பலன் தரப்போகிறது
என்று எதிர்பார்க்கும் நேரத்தில், துர்பலன் தரும். திடீரென்று நற்பலன் தரும். தந்ததை முன்னறிவிப்பில்லாமல் பிடுங்கிக்கொள்ளும். பலன்கள் ஒரு நிலையாக இருக்காது. எனவே பொதுவாக, வக்கிரகதியிலிருக்கும் கிரகம், நீச
ஸ்தானத்தில் இருந்தால், உச்சபலன் தரும் என்றும், உச்ச ஸ்தானத்திலிருந்தால் நீச பலன்
தரும் என்றும் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு
வக்கிரபுத்தி படைத்த புத்திசாலியை போல் நடந்துகொள்ளும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை சிந்திப்போம்.
ஒரு புத்திசாலியான சிறுவன்
ஒருவனால், எதையும் உடனே புரிந்துகொண்டு உடனடியாக செயலாற்ற முடியும். எல்லோரும் வியந்து மூக்கின் மேல் விரல் வைக்கும்
அளவுக்கு அதிபுத்திசாலியாக அவன் இருப்பான்.
இதுவே அவனுக்கு வக்கிர புத்தியும் சேர்ந்திருந்தால் என்ன செய்வான்? ஒரு முறை அவனை பார்த்து, " எல்லோரும் வியந்து
போய் மூக்கின் விரல் வைக்கும்படி ஒரு செயலை செய்துகாட்டு ", என்று உத்தரவிட்ட
போது, உடனே எல்லோரும் வியந்து முக்கின் மேல் விரல் வைக்கும்படி ஒரு செயலை செய்துவிட்டான். அவன் யோசித்ததை போல் அவ்வளவு விரைவாக நம்மால் யோசிக்க
முடியாது. அதாவது....................... ஒரு
நீண்ட குச்சியை எடுத்தான். பக்கத்தில் இருந்த
ஒரு சாக்கடை குட்டையை, படு வேகமாக கிண்டி, குழப்பிவிட்டான். எல்லோரும் மூக்கில் விரலை வைத்துக்கொண்டனர். ...................உங்களுக்கு புரிந்திருக்கும்
என்று எண்ணுகிறேன். எதிரபாராமல், திடீரென்று
அவன் யோசித்த அறிவு வேகத்தை, விவேகத்தில் காட்டியிருந்தால் அவனை பாராட்டியிருக்கலாம். வேகம் இருந்தது, விவேகம் இல்லை. அது போல் பலன் தருவதில் வக்கிர கிரகங்கள் உடனுக்குடன்
வேகமாக செயல்படும். அதில் விவேகம் இருக்காது. ஆகவே வக்கிரகதியிலிருக்கும் கிரகங்களின் பலன்களை
துல்லியமாக கணித்து சொல்வதில் மிகுந்த கவனமும், அனுபவமும் தேவை என்று முன்கூட்டியே
சொல்லியிருக்கிறேன். இப்படி வக்கிரகதி கிரகங்களின்
பலன்கள் ஒரு நிலையாக இல்லாததால், நம் சாஸ்த்திரங்கள் பெரும்பாலும் வக்கிரகதி பலனை சொல்லாமல்
விட்டு விட்டன. ஸ்ரீவராகிமிகிரரின், ப்ருஹத்
ஜாதகத்தில், கிரகயோனி பிரபேதாத்யாயமும், ஜாதக கணிதாமிர்த சாகரம் என்னும் நூலும், வக்கிரகதி
பலனை பற்றி ஓரளவு விவரித்துள்ளன.
குரு வக்கிரகதியில் இருக்கும்
காலம் 3 மாதங்களுக்கு அதிகமாகவும், சனி வக்கிரகதியிலிருக்கும் காலம் 4 மாதங்கள் முதல்
5 வரையிலும், ஆகின்றன. செவ்வாய் இரண்டு ஆண்டுகளுக்கு
ஒரு முறை சுமார் 2 மாதகாலம் வக்கிரமடைகிறது.
செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் ஸ்தம்பனகதி என்று ஒரு சிறப்பு கதி உண்டு. அதாவது, செவ்வாய் சில நேரங்களில் 4, 5 மாதங்களானாலும்
ஒரே இடத்தில் அசைவற்று நிற்பது போன்ற ஒரு தோற்றமளிக்கும். எந்த கிரகமும் ஒரு இடத்தில் நிலையாக நிற்பதில்லை
என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த
பிரபஞ்சத்தில், சூரியன் கூட, தன் சூரிய குடும்பத்தோடு இடம் விட்டு, இடம், நகர்ந்துகொண்டு
இருக்கிறது. இதை பஞ்சாங்க கணிதம் செய்பவர்கள்
நன்றாக அறிவார்கள். சுக்கிரன் ஒன்றரை வருஷத்திற்கு
ஒருமுறை சுமார் 50 நாட்கள் வக்கிர கதியிலிருக்கும். புதனின் வக்கிர காலத்தை கணிப்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. நன்றி நண்பர்களே. ..................தொடரும்..................
v
No comments:
Post a Comment