ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். அஸ்தங்கம், மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது.
[ பாகம் 2 ] ................பாகம் 1 தொடர்ச்சி.....................பாரம்பரிய முறை...................... செவ்வாய் சூரியனிடமிருந்து முன்பின்னாக 17 பாகைக்குள்ளும்,
அதேபோல் புதன் 11 பாகைக்குள்ளும், குரு 15 பாகைக்குள்ளும், சுக்கிரன் 9 பாகைக்குள்ளும்,
சனி 17 பாகைக்குள்ளும் இருக்கும்போது அஸ்தங்கமடைகிறன. இப்படி அஸ்தங்கமடைகிற கிரகங்களின் அஸ்தங்க பலனை
தீர்மானிக்க ஒரு பொது விதி உள்ளது.
...................... " சூரியன்,
தன்னோடு இணைந்து அஸ்தங்கமடைகிற கிரகங்களின் பலனை தான் ஈர்த்து தன்னுடைய தகுதிக்கேற்ப
பலனை மாற்றியும், அதிகரித்தும் தருவார். சூரியன்
சுபஸ்தானாதிபதியாக எந்த ஸ்தானத்தில் இருந்தாலும், அஸ்தங்க கிரகம், சுபஸ்தானாதிபதியாக
இருந்தால், அதன் ஸ்தான சுப பலனை அதிகரிப்பார்.
இதுவே அஸ்தங்க கிரகம் அசுபஸ்தானாதிபதியாக இருந்தால், அஸ்தங்க கிரகத்தின் அசுபஸ்தான
பலனை தடுத்து, அதையே சுப பலனாக மாற்றிதருவார்.
சூரியன் அசுபஸ்தானாதிபதியாக, எந்த ஸ்தானத்தில் இருந்தாலும், அஸ்தங்க கிரகம்
சுப ஸ்தானாதிபதியாக இருந்தால், அதன் சுப ஸ்தானாதிபத்திய பலனை தடுத்து, அசுப பலனாக மாற்றித்தருவார். இதுவே அஸ்தங்க கிரகம் அசுப ஸ்தானாதிபதியாக இருந்தால்,
அதன் அசுப பலனை அதிகரித்து தருவார். " ........................
இவற்றில் அஸ்தங்க கிரகமாக
புதன் அமையும் போது, " புதாதித்திய யோகம் ", காரணமாக ஒரு சில வித்தியாசமான
பலன் ஜாதகருக்கு கிடைக்கிறது. மற்ற கிரகங்கள்
அஸ்தங்கமடையும் பொழுது, அவை தன் சொந்த காரகத்துவங்களை இழந்துவிடுகிறன. ஆனால் புதன் மட்டும் இழப்பதில்லை. உதாரணத்திற்கு, புதனின் சொந்த காரகத்துவங்களில்
ஒன்றான கல்வி, மற்றும் கலையறிவை வழங்க தவறுவதில்லை. ஆனால், ஸ்தானாதிபதியத்தை பொறுத்தவரை, புதன், முன்கூறிய
பொதுவிதிக்கு உட்பட்டே பலன் தரும். ஒரு உதாரணத்தின்
மூலம் இதை விரிவாக சிந்திப்போம்...................
மீன லக்னம், மிதுனத்தில்
சூரியன், புதன் இணைவு. புதன் அஸ்தங்கம். இதை கிரக அமைப்பாக கொள்ளலாம். சூரியன் அசுபஸ்தானமாகிய 6 ஆம் அதிபதி. புதன் 4, 7 ஆகிய சுபஸ்தானகளுக்கு அதிபதி. புதன் சூரியன் இணைவால் புதாதித்திய யோகம் ஏற்படுகிறது. அதே நேரம புதன் 4, 7 ஆகிய இரு கேந்திரங்களுக்கு
அதிபதியாகி, 4 ஆமிடம் என்னும் இன்னொரு கேந்திரத்தில் ஆட்சி பெறுவதால் பத்ர யோகம் ஏற்பட்டு,
அஸ்தங்கம் ஆனதால் யோகம் பங்கப்பட்டு விடுகிறது.
புதாதித்திய யோகம் காரணமாக, தன்னுடைய காரகத்துவத்தை சூரியனிடம் அஸ்தங்கம் காரணமாக
இழக்காத புதன், தன் காரகத்துவங்களில் ஒன்றான கல்வியறிவை ஜாதகருக்கு தடையின்றி வழங்குவார். எனவே ஜாதகர் மிக உயர்ந்த கல்வித்தகுதியை அடைவார். மிதுனம் மீனத்துக்கு 4 ஆமிடமாகிறது. இதன் காரகத்துவங்களில் ஒன்று கல்வி. இதற்கு அதிபதியாகிய புதன் ஸ்தானாதிபத்தியத்தின்
மூலமாகவும், நல்ல கல்வியை வழங்க வேண்டும்.
ஆனால் ஆறாமதிபதியிடம் அஸ்தங்கமான 4 ஆமதிபதி புதன், கல்வியில் தடையை ஏற்படுத்துவார். அதாவது பயின்றது உயர்கல்வியாக இருப்பினும், அது
அவர் வாழ்க்கைக்கு உதவாமல் போகும். பலர் படித்தது
ஒன்று, பணிபுரிவது ஒன்று என வாழ்க்கையை காலம் தள்ளிக்கொண்டிருப்பது, இதற்கு சிறந்த
உதாரணம். இன்னும் பாதசாரம் மற்றும் கிரகபார்வைகள்
ஆகியவற்றை துணையாக கொண்டோமானால், இந்த பலனை இன்னும் விரிவாகவும், துல்லியமாகவும் சொல்ல முடியும். மேலும் புதன் அஸ்தங்கம் அடைவதில் இரு நிலைகள் உள்ளன. இது மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு. மற்ற கிரகங்கள், அஸ்தங்கம் அடையும் போது வக்கிரம்
அடைவதில்லை, அதுபோல் வக்கிரம் அடையும்போது
அஸ்தங்கம் அடைவதில்லை. ஆனால் புதன் மட்டும்,
இந்த இரு வகை கதிகளையும், தனித்தனியாகவும், சேர்ந்தும் அடைகிறது. இதனால் இவைகளுக்குண்டான பலன்களும், அதற்கேற்றாற்
போல், தனித்தனியாகவும், சேர்ந்தும் கிடைக்கும்.
இதில் எவ்வகை கதியில் புதன் இருந்தாலும், புதாதித்திய யோகம் காரனமாக தன் தனிப்பட்ட
காரகத்துவத்தை ஜாதகருக்கு தராமல் விடுவதில்லை.
அஸ்தங்க கதியில் இருக்கும்
கிரகங்கள், கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை விட்டு விலகி வரும். அஸ்தங்க எல்லை பாகையை விட்டு வெளியேறும் நிலையுள்ளதையே
உதயகதி என்று குறிப்பிடப்படுகிறது. இதுவரை,
அஸ்தங்க கதியில், தான் இழந்திருந்த சுயகாரகத்துவ, சுயஸ்தானாதிபத்திய பலன் தரும் சக்தியை
மீண்டும் அவை பெறுகின்றன. அந்த நேரத்தில் அவை
மிக வலிமையுடன், தன் சுயபலத்தையும், பலனையும் ஜாதகருக்கு தரும். அதன் முழுமையான பயனை ஜாதகர் அடைவார். எனவே உதயகதியை நாம் அவசியம் கவனித்தாக வேண்டும். வந்துசேரும் நீரின் வேகத்தை விட, அணையிலிருந்து
விடுதலையாகும் நீரின் வேகம் அதிகமாக இருக்கும்.
உதாரணத்திற்கு இந்த உவமையை நினைவில் வைத்துக்கொள்ளலாம். ............................... தொடரும்......................... நன்றி.
No comments:
Post a Comment