ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். அஸ்தங்கம், மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது. [ பாகம் 1. ] .....................பாரம்பரிய முறை.................நவக்கிரங்கங்கள்
ராசிக்கட்டத்தில் இடம் மாறி, மாறி வருகிறன.
இந்த இட மாறுதல்கள் நேரும் போது, சூரியனை கிரகங்கள் நெருங்கியும், விலகியும்,
சூரியனோடு இணைந்தும் இருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனை ஜோதிட சாஸ்த்திரம் பொதுவாக " கதி ", என்று குறிப்பிடுகிறது. இந்த கதிகளை விரிவாக சிந்திப்போம்.
01. சூரியனோடு இணைந்திருப்பது அஸ்தங்க கதி.
02. அஸ்தங்க கதியிலிருந்து விலகி வருவது உதய கதி.
03 சூரியனுக்கு 2 ல் இருப்பது சீக்கிரகதி.
04. சூரியனுக்கு 3 ல் இருப்பது சமகதி.
05. சூரியனுக்கு 4 ல இருப்பது மந்த கதி.
06. சூரியனுக்கு 5, 6 ல் இருப்பது வக்கிரகதி.
07. சூரியனுக்கு 7, 8 ல் இருப்பது அதிவக்கிரகதி.
08. சூரியனுக்கு 9, 10 ல் இருப்பது வக்கிர நிவர்த்தி
கதி.
09. சூரியனுக்கு 11 ல் இருப்பது சீக்கிரகதி.
10. சூரியனுக்கு 12 ல் இருப்பது அதிசீக்கிரகதி.
இவற்றில் வக்கிர கதியானது,
கிரகங்களுக்கு தக்கவாறு, ஸ்தானங்கள் சற்று மாறுபடுகிறன. இவற்றில் செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு
இடையே சிறிது மாறுதல்கள் இருக்கும். புதனுக்கும்,
சுக்கிரனுக்கும் முற்றிலும் ஸ்தானம் மாறுபடும்.
இவ்விரு கிரகங்களும் சூரியனை விட்டு அதிக ஸ்தானங்கள் விலகாதவையாகும். எனவே சூரியனுக்கு அருகில் இருக்கும்போதே வக்கிரகதியை
அடைகிறன. இவ்விரு கிரகங்களின் வக்கிர கதி,
அவை எங்கு இருக்கும்போது நிகழும்" என கணிப்பதற்கு தனி கணிதம் உள்ளது. அதை பஞ்சாங்க கணிதம் அறிந்தவர்கள் துல்லியமாக அறிவர். மேற்கண்ட 10 வகையான கதிகளில், ஜோதிடர்களில் பெரும்பாலோர்,
அஸ்தங்கம், வக்கிரம், அதிவக்கிரம், வக்கிர நிவர்த்தி ஆகிய கதிகளை மட்டுமே கணித்து பார்க்கின்றனர். இவைகளோடு, உதய கதியையும் இணைத்து பார்த்து பலன்
சொல்லவேண்டும் என்பது என் சொந்த கருத்து. சந்திரனுக்கும்,
ராகு, கேதுக்களுக்கும் வக்கிர கதிகள் கிடையாது.
இந்த கதிகளின் தன்மைகேற்றவாறு,
கிரகங்கள் பலனை தருகிறன. சூரியனுடன் இணைந்து
அஸ்தங்க கதியிலிருக்கும் கிரகங்கள், பலவீனமடைந்துவிடுவதால், அவை தர வேண்டிய பலனை சிறப்புற
தருவதில்லை. இவற்றில் விதி விலக்கு சந்திரனுக்கு
மட்டும் உண்டு. சந்திரன் சூரியனுடன் எவ்வளவு
நெருக்கத்தில் இருந்தாலும், தான் தரவேண்டிய பலனை குறைத்துக்கொள்வதில்லை. எனவே சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்பது பெரும்பானமை
கருத்தாக இருக்கிறது. சிலர் சந்திரனுக்கு அஸ்தங்க
தோஷம் உண்டு என்கிறனர். இதை இங்கே விவாதிக்க
வேண்டாம். அதை அவரவர் அனுபவத்தில் பார்த்துக்கொளூங்கள். என் அனுபவத்தில் சந்திர்னுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை.
சந்திரனுக்கு, அதன் ஒளி அளவை பொறுத்து சுப,
அசுபதன்மை உண்டு. இதன் அடிப்படையில் ஒளியே
இல்லாத அமாவாசை திதி முதற்கொண்டு, முழு ஒளி பொருந்திய பௌர்ணமி திதி வரையிலான பலன் நமது
சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வகையான
பலனை, பிரசன்னம், ஆருடம், மாந்திரீகம், போன்ற ஜோதிட வழிமுறைகளை பின்பற்றுபவர்கள் பயன்படுத்துகிறனர். இவர்களை பொறுத்தவரை சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம்
உண்டு.
.................................
தொடரும்................................
No comments:
Post a Comment