ஓம் படைவீட்டம்மா துணை. வணக்கம்.
" திதி சூன்ய பலன் ", விளக்க பதிவு. : ..........
பாரம்பரிய முறை. திதிசூன்யம் சம்பந்தமாக
மூன்றுவிதமான பட்டியல்கள் சாஸ்த்திரத்தில் உள்ளன.
1.] திதி / சூன்யராசி / சூன்யராசியதிபதி. 2.] திதி / சூன்ய நக்ஷத்திரம். 3.] சூன்யமாதம்
/ திதி / சூன்யனக்ஷத்திரம் / சூன்யராசி. ஆகியவை
அந்த மூவகை பட்டியல்களாகும். இந்த பட்டியல்களும்,
இதன் பயனபாடுகள் பற்றியும் " சர்வமுஹூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம்
", மற்றும் ", காலப்பிரகாசிகை ", ஆகிய, மூலனூல்களில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவையிரண்டும் சுபமுஹூர்த்தங்கள் குறிக்க வழிகாட்டும்
ஜோதிட நூல்களாகும். ஜோதிட பலன் கூற வழிகாட்டும்
மிக பழைமையான சில மூலனூல்களில் [ சுந்தரசேகரம் ] முதலாவது பட்டியல் தரப்பட்டுள்ளது. பலதீபிகை, புலிப்பாணி 300, பிருஹத்ஜாதகம், சர்வார்த்த
சிந்தாமணி, ஜாதக அலங்காரம் போன்ற ஜோதிட பலன் சொல்ல வழிகாட்டும் முன்னோடியான நூல்களில்
திதிசூன்யம் பற்றிய குறிப்புகள் இல்லை. எனவே
ஜோதிட பலன் சொல்ல திதிசூன்யத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்பது என்
சொந்த கருத்து. மேலும் இந்த பதிவில் எழுதப்பட்டுள
திதிசூன்ய பலன் சம்பந்தப்பட்ட விபரங்கள் யாவும் என் சொந்த அனுபவத்தில் பெற்றதாகும். இதற்கு ஆதாரம் உள்ளாதா" எனக்கேட்டால் என்னால்
தர இயலாது. எனவே இந்த பதிவை படிக்கும் நண்பர்கள்,
இவைகள் சரியா? தவறா? என்று தீர ஆலோசித்து, பின் நடைமுறைபடுத்தி பார்த்து, அதன்பின்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனது முந்தைய பதிவில் சொன்னதை
சற்று சுருக்கமாக நினைவு கூர்வோம். திதிசூன்ய
கணிப்புகள் எல்லாமே சூரிய சந்திரர்களின் நகர்வுகளை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டவை. இந்த க்ணிப்புகளுக்கும் லக்னத்துக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது. எனவே திதிசூயமானது, லக்னத்தையோ,
லக்னத்தை வைத்து கணக்கிடப்படும் ஸ்தானங்களையோ, அதன் காரகத்துவங்களையோ, ஸ்தான அதிபதியாக
இருக்கும் கிரகங்களின் ஸ்தானாதிபத்திய காரகத்துவங்களையோ சிறிதள்வும் பாதிக்காது. திதிசூன்யம் பெறும் ராசிகளின் காரக்த்துவங்களையும்,
அந்த ராசிக்குரிய அதிபதியாக இருக்கும் கிரகங்களின் காரகத்துவங்களையும் மட்டுமே பாதிக்கும். இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். திதிசூன்ய முதலாவது பட்டியலில், [ பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது
] துவாதசி திதியன்று, துலாமும், மகரமும் திதிசூன்யமடையும் என உள்ளது. சுக்கிரனும், சனியும் முறையே சூன்யராசியதிபதிகளாவர். இந்த அதிபதிகள் சுபாவ பாபர் ராசியில் இருந்தால்
திதிசூன்யம் இல்லாமல் போகும். சந்திரன் மற்றும்
புதன் ஆகியோர் சுபாவ பாபர்களாக இருக்கும்போது மட்டுமே கடகம், மிதுனம், கன்னி ஆகியவை
பாபர் ராகிகளாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். துவாதசி திதியன்று சனி தன் சுயகாரகத்துவத்தை இழந்துவிடும்
என்று இதன் மூலம் தீர்மானித்துக்கொள்ளலாம்.
துவாதசியன்று பிறந்தவருடைய ஜனன ஜாதகத்தில் சனி தன் சுயகாரகத்துவத்தை இழந்த நிலையில்
இருக்கும். சனியின் காரகத்துவங்களில் ஒன்று
கடனை உருவாக்குவது. துவாதசி ஜாதகருக்கு சனியால்
கடன் உருவாகாது என்பதே இதன் பலன். ஒரு ஜாதகத்தில்
ரிஷபம், துலாம், தனுசு, மீனம் தவிர மற்ற எட்டு ராசிகள் பெரும்பாலும் பாபர் ராசியாக
அமைய வாய்ப்புள்ளது. இதில் ஏதாவது ஒரு ராசியில்
திதிசூன்யராசியதிபதி அமர வாய்ப்புகளும் அதிகம்.
எனவே பெரும்பாலான ஜாதகங்களில் திதிசூன்யம் அமையாது. ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புரியும். எனவே ஜோதிட பலன் சொல்ல வழிகாட்டும் பெரும்பாலான
மூலனூல்களில் திதிசூன்யம் பற்றி எழுதப்படவில்லை.
எனவே பெரும்பான்மையை கருத்தில் கொண்டு திதிசூன்யத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை
என்பது என் கருத்து. யோசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்த திதிசூன்யத்தை கொண்டு
இன்னொரு வகையான பலனும் சொல்லலாம். துவாதசியன்று
பிறந்த ஜாதகருக்கு, ஜனன ஜாதகத்தில் சனி சுயகாரகத்துவத்தை இழப்பதுபோல், நடைமுறையில்
துவாதசி நடக்கும்போதும் சனி சுய காரகத்துவத்தை இழந்துவிடும். எனவே துவாதசியன்று பிறந்த ஜாதகர், நடைமுறையில் துவாதசியன்று,
சனி சம்பந்தமான ஒரு காரியத்தில் இறங்கினால் அது தோல்வியடையும். உதாரணத்திற்கு, இரும்பு வியாபாரம் செய்து வரும்
ஒருவர், துவாதசியன்று, முதலீடு செய்து புதிய இரும்பு பொருட்களை கொள்முதல் செய்தால்,
அந்த பொருட்கள் அவருக்கு பெரும் நஷடத்தை தந்துவிடும். இது கோசரபலன் போன்ற ஒரு நடைமுறை பலன். இது போன்ற பலனை எல்லா திதிசூன்ய ஜாதகங்களுக்கும்
கூறலாம். இதையும் சோதித்து பாருங்கள். வெற்றிகரமாக இருக்கும். பின் ஜோதிட பலன் கூறுவதில் நடைமுறைபடுத்துங்கள். மேலும் உள்ள இருவ்கை திதிசூன்ய பட்டியல்களை பற்றி
அடுத்த பதிவில் பார்ப்போம். நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment