ஓம் படைவீட்டம்மா துணை. வணக்கம்.
" திதி சூன்யம் ", பற்றிய பதிவு இது. பாரம்பரிய முறை. நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது, அமாவாசை அன்று
சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருப்பது போலவும், அதன்பின் நாள்தோறும் சந்திரன் சூரியனை
விட்டு விலகி வருவது போலவும், சூரியனுக்கு நேர் எதிரே விலகி வந்த நாள் பௌர்ணமியாகவும்,
மீண்டும், பௌர்ணமி முதல், சந்திரன் நாளுக்கு நாள் சூரியனை நோக்கி நெருங்கி வருவது போலவும்,
இருவரும் நெருங்கி இணையும் போது அமாவாசை எனவும் ஒரு தோற்றமளிக்கிறது. இந்த விலகல் மற்றும் நெருக்கத்தை, ராசிகட்டத்திலும்
நம் முன்னோர்கள் அமைத்து, அதை வரைந்து காட்டியிருக்கிறார்கள். கோசரப்படி சந்திரன் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு கட்டமாக
சூரியனை விட்டு விலகி வந்து, பின் மீண்டும் நெருங்கி வந்து ஒன்று சேரும். இப்படி ஏற்படும் விலகல், நெருக்கங்களால் சந்திரனுக்கும்
சூரியனுக்கும் இடையே உருவாகும் இடைவெளியை "திதி" என்னும் அளவால் அளந்திருக்கிறார்கள். ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பெயரை சூட்டியுமிருக்கிறார்கள்.
ஒரு குழந்தைக்காக ஜெனன
ஜாதகம் எழுதும்போது, திதி பற்றிய விரிவான தகவல்களை தினசுத்தி பகுதியில் எழுதுவதுண்டு. ஒரு குழந்தை பிறந்தபோது நடப்பில் இருந்த ஒரு திதியால்,
சில ராசிகள் சூன்யம் அடைவதாக ஜோதிட சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. சூன்யம் என்றால் வெறுமை என்றும், ஒன்றுமே இல்லாதது
என்றும் பொருள். இதை திதிசூன்யம் என்று ஜோதிடர்கள்
குறிப்பிடுகிறார்கள். சூன்யமடையும் ராசியை
சூன்யராசி என்றும், அந்த ராசிக்குடைய கிரகத்தை சூன்யகிரகம் என்றும், குறிப்பிடுகிறார்கள். எனவே திதிசூன்யத்தோடு தொடர்புடையவை ராசியும், அந்த
ராசிக்குரிய கிரகமும் ஆகும். திதிசூன்ய பலன்
பார்க்கும்போது, சூன்யராசி எதுவென்றும், அதன் அதிபதியாகிய கிரகம் எத்வென்று மட்டுமே
பார்த்து, அதற்குரிய பலன் அறியவேண்டும். சில
ஜோதிடர்கள், சூன்யராசி லக்னத்திற்கு எத்தனையாவது ஸ்தானம் என்றும், ஸ்தானாதிபதி யாரென்று
பார்த்தும், சூன்யராசியில் இருக்கும் கிரகத்தின் ஸ்தானாதிபத்தியத்தை வைத்தும் பலன்
சொல்லி குழப்பிவிடுகிறார்கள். அதாவது திதிசூன்யராசியில்
லக்னாதிபதி இருந்தால், லக்னாதிபதி செயலற்று போவார் என்பதே அவர்களது வாக்குமூலம். விரிவாக சொன்னால், திதிசூன்யராசியில் இருக்கும்
கிரகங்களின் ஆதிபத்தியங்கள் செயலிழக்கிறன.
அதுபோல் திதிசூன்யராசிக்குரிய கிரகம், இருக்கும் ஸ்தானத்தின் செயல்பாடுகளும்
தடைபட்டுப்போகும். அதாவது பூர்வபுண்ணியஸ்தானத்தில்
திதிசூன்யராசிக்குரிய கிரகம் இருந்தால் புத்ர பாக்கியம் கெட்டுப்போகும் என்று பலன்
சொல்வதுண்டு. இது தவறான அணுகுமுறை.
திதிசூன்யத்தை பற்றி எடுத்து
சொல்லும் சாஸ்த்திரங்கள் குறைவு. மேலும் திதிசூன்ய
பலனுக்கும் முக்கியத்துவம் குறைவு. திதிசூன்யம்
கணிக்க சந்திரனின் நகர்வு பிரதானமாகிறது. லக்னத்திற்கும்
இதற்கும் சம்பந்தமில்லை. குறிப்பிட்ட திதியில்
சூன்யம் அடைவதாக ராசிகள் குறிப்பிடப்படுகிறன.
லக்ன அடிப்படையிலான ஸ்தானங்களல்ல. சூன்யகிரகங்களாக
தேர்வுசெய்யப்படுபவை, ராசிகளுக்குரிய அதிபதிகள்.
ஸ்தானத்திற்குரிய அதிபதிகளல்ல. திதிசூன்ய
விதிவிலக்குக்கு ராசிகளே அடையாளம் காட்டப்பட்டுள்ளன. மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய
ராசிகளில், சூன்யகிரகம் இருந்தால், திதிசூன்யம் செயலற்று போகும், என்பது விதி. எனவே எந்தவகையிலும், திதிசூன்யத்திற்கும் லக்னத்திற்கும்,
அதன் ஸ்தானங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போகிறது.
எனவே தித்சூன்ய பலனோடு லக்னத்தையும், அதன் ஸ்தானங்களையும் தொடர்பு படுத்த வேண்டியதில்லை
என்பது உண்மையாகும். மேலும் திதிசூன்ய பலன்
சொல்வது எப்படி? என்றும் சாஸ்த்திரத்தில் எழுதியுள்ளார்கள். சூன்யராசியானது தனக்குரிய காரகத்துவங்களை இழக்கும். சூன்ய ராசிக்குரிய கிரகம் தனக்குரிய காரகத்துவகளை
இழந்துவிடுவார். உதாரணத்திற்கு பஞ்சமாதிபதி
சுக்கிரன் திதிசூன்யகிரகம் என்று கொள்வோம்.
சுக்கிரன் தனது காரகத்துவகளான, அழகு, இளமை, செல்வம், காமம், காதல் ஆகியனவற்றை
தராது. ஆனால் பஞ்சமஸ்தானாதிபதி என்ற முறையில்
புத்ரபாக்கியம், தேவதாவழிபாடு, அதிர்ஷ்டங்கள், வித்தை ஆகியனவற்றை தடையின்றி தந்துவிடுவார். துலாம் என்னும் பஞ்சமஸ்தானம் திதிசூன்யராசி எனக்கொள்வோம். துலாம் ராசி என்னும் முறையில் தனது காரகத்துவங்களான, வர்த்தகம், கடைத்தெரு, ஏற்றுமதி இறக்குமதி, ஆகியனவற்றை
தராது. ஆனால் பஞ்சமஸ்தானம் என்னும் முறையில்
புத்ரபாக்கியம், பூர்வபுண்ணியம், பிதுர்பக்தி, உயர்கல்வி ஆகியனவற்றை தடையின்றி தரும். இந்த வித்தியாசங்களை நன்றாக புரிந்துகொண்டு திதிசூன்யபலன்
அறிந்து சொல்லி வெற்றியடைவோமாக. நன்றி வணக்கம்.
clear explanation. avoids unnecessary confusions
ReplyDeleteதிதிசூன்யமடையும் ஒரு கிரகம் லக்கனபாவரீன் சாரம் பெற்று 6 அல்லது 8ல் மறைந்து திசை நடத்தும்போது எப்படிபட்ட பலன் தரும்....
ReplyDeleteவிளக்கம் தேவை
அந்த பாவகத்தின் தன்மையை கெடுக்கும்
Deleteதிதி சூன்ய அதிபதி கிரகம் பாதக ஸ்தானத்தில் நின்றால் என்ன பலன்
ReplyDeleteஇயல்பான பரிகாரங்கள் எதையும் பெறாத திதி சூன்ய கிரகத்துக்கு செய்யக்கூடிய பரிகாரங்கள் என்னென்ன?
ReplyDeleteஎனக்கு சப்தமி திதி சூன்யராசி தனுசு கடகம் எனக்கு 10.மிடம் சரியாக இல்லை துலாம்(ல) மேஷம்ராசி..
ReplyDeleteதிதி சூன்ய இராசி அட்டவனை எப்படி வந்தது எண்பதை விளக்கவும்
ReplyDelete