ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். ............
கிரகங்களின் இரட்டை வேஷம்.
.............. தொடர் பதிவு எண்
06. ................ " அமாவாசையின் யோகமும், அவயோகமும்
", ........... பாரம்பரிய முறை. .................... சென்ற பதிவில் அமாவாசை தரும் யோகம் ஒன்றை பார்த்தோம். இந்த பதிவில் அமாவாசை தரும் அவயோகம் ஒன்றை பார்க்கலாம். .............
ராசிக்கட்ட அமைப்பு. விருச்சிக லக்னம். மிதுனத்தில் ஒரே பாதத்தில் சூரியன் சந்திரன். ............
விருச்சிகத்திற்கு அடிப்படையில் சந்திரன் 9 ஆம் அதிபதி என்னும் பாக்கியாதிபதி,
என்னும் சுபஸ்தானாதிபதி. சூரியனும் 10 ஆம்
அதிபதி என்னும் சுபஸ்தானாதிபதி. அஸ்தங்கத தத்துவத்தின்
படி, சூரியனிடம் சந்திரன் தன் சுபத்தன்மை கொண்ட ஸ்தானாதிபத்ய காரகத்துவ பலனையெல்லாம்,
ஒப்படைத்துவிடுகிறார். சூரியனும் சுபஸ்தானாதிபதி
என்பதால், சந்திரனின் சுப ஸ்தானாதிபத்ய பலனை அப்படியே பெற்றுத் தரவேண்டும். ஆனால் இணைவு நிகழ்வதோ அஷ்டமத்தில். எனவே சூரியன், சந்திரனிடம் இருந்து பெற்ற சுபபலன்களும்,
தானாக தர வேண்டிய சுபபலன்களும், இருக்கும் ஸ்தானமாகிய அஷ்டமத்திற்கு தகுந்தாற்போல்,
அசுபமாக மாற்றப்பட்டு விடுகிறது.. எனவே அமாவாசை
யோகம் சுபகரமானதாக இருக்காது. சந்திரன், சூரியனுக்கு
முன்னால் அஸ்தங்கதம் அடையும் உள்வட்ட கிரகம் என்பதால், தன் சுய காரகத்துவத்தை மட்டும்,
மாற்றாமல் நேரடியாக அப்படியே நமக்கு தந்துவிடுகிறார்.
சென்ற பதிவில் அமாவாசையானது
நல்ல யோகத்தை தரும் நிலையில் அமைந்திருந்ததால், சந்திரன் அஸ்தங்கதம் ஆனாலும் யோகம்
தர முடிந்தது. எனவே சந்திரனுக்கு அஸ்தங்கத
தோஷம் இல்லை என்று சொல்வது உண்மை என்று தோன்றியது. இப்போது இந்த பதிவில் அமாவாசை யோகம் சுபமாக இல்லாமல்
அசுபமாகிப்போனதால், சந்திரனுக்கு அஸ்தங்கத தோஷம் உண்டு என்று பொருளாகிறது. சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கதம் அடையும் செவ்வாய்,
குரு, சனி ஆகிய கிரகங்கள் தம் சுயகாரகத்துவத்தை கூட வெளிப்படுத்த முடிவதில்லை. எனவே அவைகளுக்கு எப்போதும் அஸ்தங்கத தோஷம் உண்டு. சில நேரங்களில் புதன், சுக்கிரன் ஆகிய உள்வட்ட கிரகங்கள்
கூட சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கதம் அடைவதுண்டு.
அச்சமயத்தில் அவைகளின் ஸ்தானாதிபத்ய காரகத்துவங்களுடன், சுய காரகத்துவங்களும்
சூரியனால் தடுக்கப்பட்டுவிடுகிறன. இவ்விரு
கிரகங்களும் சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கதம் அடையும் போது மட்டும். தம் சுயகாரகத்துவங்களை
நமக்கு நேரடியாக தந்துவிடுகிறன. சந்திரன் பூமியை
சுற்றி வருவதால், சூரியனுக்கு பின்னால் செல்ல முடியாது. ஆகவே ஒவ்வொரு அமாவாசையின் போதும் சந்திரனுடைய சுய
காரகத்துவங்கள் நமக்கு தடையின்றி கிடைத்து விடுகிறது. புதன் சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கதம் அடையும்போது
வக்கிரம் அடையாது. சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கதம்
அடையும் போது வக்கிரம் அடையும். எனவே புதன்
வக்கிராஸ்தமனம் அடைந்தால், அது சூரியனுக்கு முன்னால் இருக்கிறது என்று பொருள். அதுபோல் சுக்கிரனும் எப்போது சூரியனுக்கு முன்னால்
அஸ்தங்கதம் அடைகிறது? என்பதற்கும் ஒரு அடையாள்ம் உண்டு. பொதுவாக எல்லா கிரகங்களும் மேற்கில் அஸ்தங்கதம்
அடைந்து கிழக்கே உதயமாகும். இதை பஞ்சாங்கம்
மூலம் நாம் அறியலாம். சுக்கிரனும் அதுபோல்
மேற்கில் அஸ்தங்கதம் அடைந்து கிழக்கில் உத்யமாகும் போதெல்லாம் சூரியனுக்கு பின்னால்
அஸ்தங்கதம் அடைந்திருக்கிறது என்று பொருள்.
சில நேரங்களில் சுக்கிரன் கிழக்கில் அஸ்தங்கதம் அடைந்து பின் மேற்கில் உதயமாகும். அப்போது அது சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கததம் அடைகிறது
என்று பொருள். இதையும் பாஞ்சாங்கம் மூலம் நாம்
அறியலாம். .
இனி இவ்விரு பதிவுகளில்
வந்த அமாவாசைகளை ஒப்பிடும்போது, சந்திரன் தன் சுய காரகத்துவத்தை எப்போதும் எந்த சூழ்னிலையிலும்
விட்டுத்தருவதில்லை என்ற உண்மை புலனாகிறது.
ஆனால் ஸ்தானாதிபத்ய பலன் மாற்றம் பெறுகிறது. எனவே சந்திரனுக்கு அஸ்தங்கத தோஷம் இல்லையென்றால்,
அதன் பொருள், எப்போதும் சந்திரனின் சுயகாரகத்துவம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கும்
என்பதாகும். ஆனால் ஸ்தானாதிபத்ய பலன் தான்
இருக்கும் இடத்தில் நேரும் அஸ்தங்கதத்தை பொறுத்ததாகும். இதன்படி சந்திரனுக்கு அஸ்தங்கத தோஷம் உண்டு என்றும்
சொல்லலாம். எப்போது? என்பதை மட்டும் நாம் வரையறுத்துக்கொள்ள
வேண்டும். ........................... {{ முக்கிய வேண்டுகோள். }} .................... சந்திரனை பற்றி இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள்
சிலருக்கு முரண்பாடாக தோன்றலாம். எனவே அவர்கள்
தயவுசெய்து இந்த கருத்துக்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனையோர், சந்திரனை பற்றிய கருத்துக்களை, சிந்தித்து
ஏற்றுக்கொண்டு, அவற்றை தங்கள் அனுபவத்தில் சோதித்து, அதற்கு பின் நடைமுறைக்கு கொண்டுவர
வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment