ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். " கிரகங்களின் இரட்டை வேஷம் ". ..........
பகுதி எண். 03. .......... கிரக பார்வைகள் ............. ஒரே கிரகம் தன்னுடைய பார்வையை சுப பார்வையாகவும்,
அசுப பார்வையாகவும் தருவதை பற்றிய பதிவு.
.............. பாரம்பரிய முறை. ............................
ஒரு ஜாதகர்.................. அவருக்கு கடகலக்னம் என்று வைத்துக்கொள்வோம். குரு மகரத்தில் இருக்கிறார். இந்த ஜாதகர் 4 ஜோதிடர்களை சந்திக்கிறார். முதலாமவர், " குரு சஷ்டமாதிபதி. எனவே லக்னத்தை குரு பார்ப்பது ஆகாது. வரும் குருதிசை கஷ்டம்தான் ", என்கிறார். இரண்டாமவர், " குரு பாக்கியாதிபதி. எனவே அவர் லக்னத்தை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம்
" என்கிறார். மூன்றாமவர், ம். ம் ஹூம் அதெல்லாங்க் கெடையாது. குரு நீசம்.
பார்வைல நீசமிருக்குமில்ல. அதோடு எல்லாம்
முடிஞ்சி போச்............. இனிமே அவ்ளோதான்
" என்கிறார். நாலாமவரோ, " ஐயய்யய்யே .......... அதெல்லாம் தப்பு. குரு சுபகிரகம். அவர் இருக்குற எடத்தைதான் கெடுபார். பார்க்கிற எடம். பவுனு, பவுனு மாதிரி." என்கிறார். இவற்றையெல்லாம் கேட்டு குழம்பிப்போன ஜாதகரின் பார்வை
எப்படியிருக்கும்? ஐயோ பாவம். இந்த ஜோதிடர்கள் சொன்னதில் யார் சொன்னது சரி? என்று
ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதற்கு முன்
கிரக பார்வைகள் சம்பந்தமாக நமது ஜோதிட சாஸ்த்திரங்கள் சொல்லும் ஒரு சில விதிகளை கவனத்தில்
கொள்வோம்.
01. ஒரு கிரகம், தன் சொந்த ஸ்தானத்தை பார்க்குமானால்,
அந்த சொந்த ஸ்தானத்தை அந்த கிரகம் வலுப்படுத்தும். .............
02. ஒரு கிரகம் சுபாவ சுபத்தன்மை கொண்டதாக இருந்து,
ஒரு சுபஸ்தானத்தை பார்க்குமானால், அந்த ஸ்தானத்தை அந்த கிரகம் வலுப்படுத்தும். அதே நேரம் ஒரு அசுப ஸ்தானத்தை பார்க்குமானால், அந்த
ஸ்தானத்தை வலுவிழக்க செய்யும்.
...........
03. ஒரு கிரகம் சுபாவ அசுபத்தன்மை கொண்டதாக இருந்து,
ஒரு அசுபஸ்தானத்தை பார்க்குமானால், அந்த கிரகம், அந்த ஸ்தானத்தை வலுப்படுத்தும். அதே நேரம் ஒரு சுபஸ்தானத்தை பார்க்குமானால், அந்த
ஸ்தானத்தை வலுவிழக்க செய்யும்.
மேற்கண்ட விதிகளை வைத்துக்கொண்டு
ஒவ்வொரு கிரகமும், தன் பார்வையில் ஒரே நேரத்தில், சுபத்தன்மையும், அசுபத்தன்மையும்
கொடுத்து இரட்டை வேஷங்களை மிக அழகாக் போடுகிறது.
................ உதாரணத்த்ற்கு முதலில்
கடக லக்ன ராசிக்கட்டத்தை எடுத்துக்கொள்வோம்.
கணித்துப்பார்க்க எளிதாக இருக்கும் பொருட்டு, ராசிக்கட்டம் இணைக்கப்பட்டுள்ளது. ................. கடகலக்னம்.
குரு சிம்மத்தில் இருப்பு. அவர் பார்வை
தனுசில் பதிகிறது. தனுசு குருவின் சொந்த ஸ்தானம். அதே நேரம் ராசிக்கட்டத்திற்கு சஷ்டமம். இப்போது குருவுக்கு தன் சொந்த ஸ்தானத்தை வலுப்படுத்த
வேண்டிய கடமை இருப்பதால், தன் பார்வையில் சுபத்தை தர இயலாது. எனவே அவர் அசுபபார்வை பார்த்து தன் சொந்த ஸ்தானத்தை
வலுப்படுத்துகிறார். இதனால் இந்த பார்வையை
பொறுத்த மட்டில், குருவின் பார்வை சஷ்டமாதிபதி பார்வையாக அமைகிறது. இதே குருவின் பார்வை அஷ்டமத்திலும் விழுகிறது. அது குருவுக்கு சொந்த ஸ்தானமல்ல. எனவே அந்த ஸ்தானத்தை தன் அசுப ஆதிபத்ய பார்வையால்
வலுப்படுத்த வேண்டும் என்ற கடமை குருவுக்கு இல்லை. எனவே அஷ்டமத்தை குரு பார்க்கும் பார்வை ஒரு சுபாவசுப
கிரகத்தின் சுப பார்வையாகி, அஷ்டமத்தை வலுவிழக்கசெய்யும். குருவின் பார்வை 10 லும் பதிவதை பார்க்கலாம். இந்த ஸ்தானமும் குருவின் சொந்த ஸ்தானமல்ல. எனவே குரு தன் இயல்பான சுபாவசுப பார்வையால், அந்த
ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார். ஆக தனுசின்
மீது விழும் குருவின் பார்வை சஷ்டமாதிபதி பார்வை.
அதாவது அசுப பார்வை. கும்பம், மேஷம்
ஆகிய ஸ்தானங்கள் மீது விழும் குருவின் பார்வை சுபாவசுப பார்வை. இதிலிருந்து குரு போடும் இரட்டை வேஷம் புரிகிறது. ................. இனி செவ்வாயை கொண்டு அதன் இரட்டை வேஷ பார்வையை பார்க்கலாம்.
கணித்து பார்க்க எளிதாக
இருக்கும் பொருட்டு விருச்சிக லக்ன ராசிக்கட்டம் இணைக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மேஷத்தில் இருக்கிறார். அவரது பார்வை விருச்சிகத்தில் பதிகிறது. இப்போது செவ்வாயின் பார்வை லக்னாதிபதி பார்வையாகும். அது விருச்சிகத்தை வலுப்படுத்தும். இது சுப பார்வை. இதே நேரம் செவ்வாயின் பார்வை கடகத்திலும், துலாமிலும்
விழுகிறது. இது சுபாவ அசுபர் பார்வையாகும். இப்படி ஒவ்வொரு கிரகமும் தன் சொந்த ஸ்தானத்திற்கு
தகுந்தாற்போல் ஒரு பார்வையும், மற்ற் ஸ்தானங்களுக்கு தகுந்தாற் போல் ஒரு பார்வையும்
கொண்டுள்ளன. இதில் அதிசயம் என்னவென்றால், எந்த
கிரகமும் தனக்கிருக்கும் இரு சொந்த ஸ்தானங்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பதில்லை. அதில் ஒன்று சுபமாகவும், இன்னொன்று அசுபமாகவும்
இருக்கலாம். ஒரே நேரத்தில் இரு ஸ்தானனகளையும்
பார்த்தால், பார்வையின் தன்மையை தீர்மானிப்பதில் குழப்பமே மிஞ்சும். மீண்டும் சந்திப்போம். நன்றி வணக்கம். .......................... தொடரும்.
..................
No comments:
Post a Comment