ஓம் படைவீட்டம்மா துணை. அனைவருக்கும் வணக்கம். ...................
" கர்மமா? தர்மமா? ", .................... இந்த பதிவில் எளியேன் ஜாதகருக்கு தெரிவித்த ஜோதிட பலன் மற்றும் ஆலோசனையை
இங்கே தந்திருக்கிறேன்.
நோயை பற்றி அறிய நாம் அஷ்டமஸ்தானத்தை
முதலில் கவனிக்க வேண்டும். அஷ்டமத்தில் செவ்வாய்
சஷ்டமாதிபதியாகவும், லக்னாதிபதியாகவும் இருந்து பகையாகிவிட்டார். லக்னாதிபதி அஷ்டமத்தில் இருந்தால் ஆயுள் கூடும்,
அத்துடன் உடல் ஊனம் ஏற்படும். இங்கு பகையாய்
இருப்பதால் ஆயுள் குறையும், உடல் ஊனம் ஏற்பட்டு,
குணமாகி, அதன் அடையாளம் உடலில் தங்கும். அதுபோல்
செவ்வாயை சனி பார்ப்பதால், மூட்டுவலி ஏற்பட்டு, உடல் ஊனம் ஏற்படும் வகையில் நடக்க இயலாத
நிலை உருவாகி இருக்கிறது. செவ்வாய் குரு சாரத்தில்
இருக்க, குருவோ நல்ல ஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார். ஷட்பலப்படி சற்று பலவீனமாக இருக்கிறார். குருவின் வலிமையை அதிகப்படுத்தினால், அவர் பார்வையில்
பலம் அதிகமாகி, 6. 8. 10 ஆகிய ஸ்தானங்கள் சுபமடையும். எனவே குருவை வலிமைபடுத்த ஜாதகர் கனகபுஷ்பராக தங்க
மோதிரம் அணிய வேண்டும். இந்த மோதிரத்தை முறைபடி
பூஜித்து, வழிபட்டு அணிய வேண்டும். இதனால்,
குருவருள் கிடைத்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடப்பதுடன், விரைவில் குணமாகும். ஆயுள் கூடவும், உடல் ஊனம் எனப்படும் மூட்டுவலி நீங்கவும்,
செவ்வாய் + சனிக்குரிய தெய்வமாகிய ஸ்ரீகாலபைரவருக்கு பரிகாரவழிபாடுகள் செய்ய வேண்டும். ஸ்ரீகாலபைரவ உபாசனை செய்பவர்களை விரைவில் எமன் நெருங்குவதில்லை. இங்கே நாம் ஆயுளை பற்றியும் ஸ்தானரீதியாக பார்த்தாக
வேண்டும். அஷ்டமம் என்ற அசுபஸ்தானத்திற்கு
அசுபபலம் அதிகரித்தால் அது விருத்தியடையும்.
அஷ்டமத்திற்கு சனியின் வலுவான அசுபபார்வை, மற்றும் சஷ்டமாதிபதி என்னும் அசுபஸ்தானாதிபதியின்
இருப்பு. அதோடு செவ்வாயும் ஒரு அசுபகிரகம். ஆகிய இவை ஆயுளை கூட்டும். ஆயுளை வளர்ப்பதில், லக்னாதிபதி, அஷ்டமாதிபதி, தசமஸ்தானாதிபதி
ஆகியோருக்கும் பங்குண்டு. யாரும் நீசமடையவில்லை. அதுபோல் அஷ்டமாதிபதி விரயத்தில் பகை, நீசமடைந்த்ருந்தாலும்
ஆயுள் குறையும். ஜாதகத்தில் நட்பாக இருப்பதால்
கவலையில்லை. ஆகையால் ஆயுளுக்கு பஞ்சமில்லை.
இதற்கிடையே அஷ்டமாதிபதி
புதன் விரயத்தில் இருப்பதை வேறு வகையில் கவனித்தல் வேண்டும். இவர் விரயத்தில் இருந்தபடி, நோய்க்கான செலவை செய்ய
வைக்கிறார். அத்துடன் புதன் நரம்புக்காரகன்
என்பதால், மூட்டில் நரம்பு சம்பந்தமான சிக்கலை உருவாக்கி இருக்கிறார். மருத்துவர்கள், மூட்டு எலும்புபகுதியை எதுவும் செய்யப்போவதில்லை. மூட்டுக்குள் இருக்கும் நரம்பு, தசையை சரி செய்யப்போகிறார்கள். இதை நமக்கு புதன் உணர்த்துகிறார். அதோடு புதன் ராகு சாரத்தில் இருக்க, ராகு கர்மஸ்தானத்தில்
பகை. அதாவது, இந்த கர்மாவை ஜாதகர் அனுபவித்தாக
வேண்டும், அதே நேரம் செலவும் செய்தாக வேண்டும் என்பதை புதன் மூலம் அறியலாம். அதாவது, கர்மாவை சில காலம் அனுபவிக்க தயாராக இருக்க
வேண்டும். இந்த வேதனையை சிலகாலம் ஏற்றுக்கொண்டாக
வேண்டும். இந்த வேதனைய தருவதில் கோசர ஏழரை
ஜென்ம சனியும் துணை செய்வதை கவனிக்க வேண்டியிருக்கிறது. சனியின் காரகத்துவம் மூட்டுவலி. எனவே ஜாதகர், ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து வேதனையை
தளர்த்திக்கொண்டு, மீதத்தை சகித்துக்கொண்டாக வேண்டும். அதன்பின் புதன் விருப்பப்படி செலவுகளை செய்ய வேண்டும். இந்த செலவை, மருத்துவ செலவாக செய்வதா? அல்லது தர்ம
செலவாக மாற்றிக்கொள்வதா என்று முடிவு செய்யும் கட்டத்தில் இருக்கிறோம். ஆக புதன் விரையப்படி ஜாதகர் சேமித்துள்ள தொகையை
செலவு செய்தே தீர வேண்டும். இனி அறுவை சிசிச்சை
எப்போது நடக்கும்? என்ற கேள்விக்கு விடை காண்போம்.
அறுவை சிகிச்சை காரகனான
செவ்வாயின் தசை புக்தி தொடங்கும் காலமான டிசம்பர் 2017 க்குப்பின் நடக்கும். இந்த நேரத்தில்
ஜென்மசனி முடிவுக்கு வந்துவிடும். தர்மம் செய்து,
அறுவை சிகிச்சையை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜாதகர் விரும்புவதால், அதன் நிலை
என்ன" என்று பார்க்கலாம்.
....................... ஒரு ஜாதகத்தில்
தர்மகர்மாதிபதியோகம் இருந்தால், அந்த ஜாதகர் தர்மகாரியங்களை தடையின்றி செய்து, அதன்
புண்ணிய பலனை அனுபவிப்பார். இந்த ஜாதகத்தில்
தர்மகர்மாதிபதிகள் லக்னத்தில் இணைவு. ஆனால்
தர்மாதிபதி சந்திரனின் நீசத்தன்மை யோகத்தை பங்கப்படுத்துகிறது. எனவே சந்திரனின் நீசத்தன்மையை போக்கி, வலுவூட்டினால்,
தர்மகர்மாதிபதி யோகம் செயல்படும். அதே நேரம்
சந்திரனை இயந்திரம் அல்லது நவரத்தின கல் கொண்டு வலுவூட்டும்போது அவரது பாதகத்தன்மையும்
பலப்பட்டுவிடும். எனவே கவனமுடன் செய்ல்படவேண்டியுள்ளது. பாதகம் மற்றும் பூர்வபுண்ணியம் என்ற இருவகை அசுப,
சுப ஸ்தானாதிபத்தியம் ஒரு கிரகத்திற்கு ஏற்படும்போது, அந்த கிரகம், அசுபஸ்தானாதிபதிகளுடன்
இணையும்போது பாதகத்தனமையையும், சுபஸ்தானாதிபதிகளுடன் இணையும்போது சுபத்தன்மைஉம் வெளிப்படுத்தும்.` பெண்களின் ஜாதகத்தில் 9 ஆமிடம் பூர்வபுண்ணியமாகும். தற்போது சந்திரன், சுக்கிரன் என்ற சுபஸ்தானாதிபதியுடன்
இணைந்து தசைபுக்தி நடத்துகிறார். அடுத்து சூரிய
புக்தி. சூரியனும் சுபஸ்தானாதிபதியே. சூரியபுக்திக்காலம் வரும் ஜூன் 2017 முதல் டிசம்பர்
2017 வரை. சூரிய புக்தியுடன் சந்திர தசை நிறைவு
பெறும். அத்துடன் சந்திரன் வலுப்பெற்ற நிலையில்,
சூரியனுடன் இணையும் போது தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்கும். அதற்கு வழி வகுக்கும் வகையில், ஜாதகர் வெள்ளியாலான
சந்திரகாந்தக்கல் மோதிரம் அணீய வேண்டும். இதையும்
முறைபடி பூஜித்து வழிபட்டு அணீய வேண்டும்.
செவ்வாய் தசை சந்திரபுக்தி வரும் போது அணிந்தஃ மோதிரத்தை நீக்கிவிட வேண்டும். செவ்வாயும், சந்திரனும் இணைந்து என்ன செய்வார்கள்?
என்பதை பின்னர் பார்க்க இருக்கிறோம். சந்திரனுக்குரிய
மோதிரம் அணிந்துகொண்டு தர்மங்கள் செய்வதன் மூலம் புண்ணியத்தை தேடிக்கொள்ளலாம். பரிகாரவழிபாடுகளில் நிறைய தானதர்மங்கள் உண்டு. அவற்றை குறைவின்றி நிறைவேற்ற வேண்டும். இந்த ஜாதகருக்கு பரிகார வழிபாடுகள் நிச்சயம் பலிக்கும். பெண்களின் ஜாதகத்தை பொறுத்தவரை பாக்கிய ஸ்தானம
5 ஆம் இடமாகும். பாக்கியாதிபதி குரு நல்ல நிலையில்
இருக்கிறார். அத்துடன் ஜாதகரும் கனகபுஷ்பராகம்
அணிய வேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறார்.
இந்த பாக்கிய ஸ்தானாதிபதி குரு பரிகார வழிபாடுகளை பலிதமாக்குவார். முக்கியமாக ஜாதகரின் உண்மையான மன ஈடுபாடு அவசியம். இனி கடந்த காலத்தில் சந்திரதசை செவ்வாய்புக்தியின்
போது நடந்ததையும் கவனிப்போம்.
சஷ்டமாதிபதியாகிய செவ்வாயுடன்,
பாதகாதிபதியாகிய சந்திரன் இணைந்து நடத்திய சந்திரதசை செவ்வாய் புக்தியின் போது ஜாதகருக்கு,
எதிரிகளால், " செய்வினை தோஷம் ", உருவக்கப்பட்டுள்ளது. செவ்வாய் புக்திக்காலம் அக்டோபர் 2008 முதல் செப்டம்பர்
2009 வரை. அதன் பிறகு அஷ்டமத்தில் கோசர கேது
நவம்பர் 2009 முதல் தொடர்ந்திருக்கிறார். கேதுவின்
மூலம் தோஷம் மேலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு தொடர்ந்திருக்கிறது. தோஷத்தை செவ்வாய் உருவாக்க, அதை சனி பார்க்கும்
நிலை ஜாதகத்தில் உள்ளது. எனவே இதை நீக்கிகொள்ளும்
வரை தோஷம் நீடிக்கும். ஆகையால் இந்த தோஷத்தை
ஒரு நல்ல மாந்திரீக ஜோதிடரை கொண்டு நீக்கிக்கொள்ள வேண்டும் என சிபாரிசு செய்கிறேன். இது முடிந்தபின் தோஷத்தை அறவே நீக்கும் தெய்வமாகிய
ஸ்ரீபீஷணபைரவரை ராமேஸ்வரத்தில் அல்லது பிரான்மலையில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த தோஷம் இருக்கும் வரை மூட்டுவலி குணமாவது மிககடினம். செய்வினை தோஷத்தை பற்றி இன்னும் துல்லியமாக அறிய
நமது ஜோதிட நண்பர் " சோழிப்பிரசன்னம் " திரு அவர்களை அணுகலாம் என்று சிபாரிசு
செய்கிறேன்.
ஜாதகருக்கு எளியேனது வழிகாட்டுதலின்
வரிசை தொகுப்பு:..............
01. செய்வினை தோஷத்தை நீக்கிகொள்ள வேண்டும். ஸ்ரீபீஷணபைரவரை வழிபடவேண்டும்.
02. கனகபுஷ்பராக தங்க மோதிரம் அணிய வேண்டும்.
03. ஸ்ரீகாலபைரவருக்கு பரிகார வழிபாடுகள் செய்ய வேண்டும்.
04. சந்திரகாந்தக்கல் மோதிரம் அணிய வேண்டும்.
05. பரிகார வழிபாடுகளில் அறிவுருத்தப்படும் தான தர்மங்களை
குறைவின்றி நிறைவேற்ற வேண்டும். இதை விரயத்தில்
சுபகிரகமாக இருக்கும் புதன் செய்ய வைப்பார்.
06. ஒவ்வொரு செவ்வாயன்றும் கந்தசஷ்டிகவச பாராயணம் செய்து
வர வேண்டும்.
முடிவுரை.:............ இத்தனை சிக்கல்கள் உள்ள ஜாதகருக்கு, மருத்துவ பேரதிசயம்
என்னும் அருளை தெய்வம் அருள வேண்டும். செவ்வாய்
தசை தொடங்கும் வரை பொறுமையுடன் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். அப்போதும் தெய்வம் அருள் தர மறுத்தால், கர்மாவை
அனுபவித்தே ஆக வேண்டும். அதாவது அறுவை சிகிச்சை
மேற்கொள்ளலாம். மேற்கண்ட வழிபாடுகளை நிறைவேற்றியிருப்பதால்,
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து, நோய் நிச்சயமாக குணமாகும். ஒரு வேளை மருத்துவ பேரதிசயம் நிகழ்ந்தால், ஜாதகர்
விருப்பப்படி தொகை 4,00,000 ஐ செவ்வாய் தசை, செவ்வாய் புக்திக்குப்பிறகு, தானதர்மம்
செய்யலாம். நன்மை நடக்க இறைவன் அருள் புரிவானாக. அனைவரும் பிரார்த்தனை செய்வோம். நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment