ஓம் படைவீட்டம்மா துணை. வாசக நண்பர்களுக்கு வணக்கம். " திருமண பொருத்த விளக்கப் பதிவு ",
...... பகுதி எண் 4. ..........
வாசகர்களுக்கான பதிவு.
..................... " யோனிப்பொருத்தம்
", பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
காதல் இல்லாமல் கூட மனிதனால் இருந்துவிட முடியும். காமத்தை தவிர்த்து விட்டு மனிதனால் இருக்க முடியுமா?
என்ற சிந்தனையை உங்கள் முன் வைத்துவிட்டு பதிவு தொடர்கிறது. காமம் யோனிப்பொருதத்தோடு தொடர்புடையது என்பதால்
இந்த சிந்தனையை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இளம்தம்பதியர்கள் பிரிகிறார்கள்
என்றால், அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொல்லலாம். ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம், காமக்குறைபாடாகவும்
இருக்கலாம். பிரிவினையில் பெரும்பான்மை இந்த
காரணத்திற்கு உண்டு. தாம்பத்திய உறவில் திருப்தியின்மையால்
ஒரு தம்பதியர் பிரிகிறார்கள் என்றால், அதன் உண்மையான காரணத்தை ஒரு வழக்கறிஞரால் யூகிக்கமுடியும். ஒரு ஜோதிடரால் நிச்சயமாக உறுதியாக தெரிந்து கொள்ள
முடியும்.. அதை காட்டிக்கொடுப்பதில் பெரும்பங்கு
யோனிப்பொருத்தத்திற்கு உண்டு. ஒருவருக்கு ஒருவர்
என்ற நீதியை மீறி, ஒரு குடும்பத்தில் முறை தவறும் வாழ்க்கை உருவாகிறது என்றால், அதற்கு
முக்கிய காரணம் இந்த யோனிப்பொருத்தமின்மையே.
விவாஹதசவித பொருத்தத்தில் எல்லாபொருத்தங்களும் பொருந்தி, இந்த ஒரு பொருத்த்தம்
மட்டும் இல்லையென்றால் கூட அந்த இரு ஜாதகங்களையும் இணைக்ககூடாது என்று மிகவும் கண்டிப்பாக
நமது சாஸ்த்திரங்கள் சொல்லியிருக்கிறன. இந்த
பொருத்தத்திற்கு விதிவிலக்குகள் எதுவும் சொல்லப்படாததிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை
நம்மால் உணர முடியும். தாம்பத்திய உறவை விரும்பும்
உணர்வின் அளவு, ஒருவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவு கொண்ட ஒரு துணையை இந்த
பொருத்தத்தின் மூலம் தேர்வு செய்து இணைக்கமுடிகிறது. ஏறுக்குமாறாக அமையும்போது, ஒருவர் வேறொருவரை தேடுகிறார். எனவே இந்த விஷயத்தில் இருவரும் எப்படி? என்று மறைமுகமாக
நமக்கு உணர்த்த, நமது முன்னோர்கள், மிருகங்களை அடையாளம் காட்டி பொருத்த சாஸ்த்திரத்தை
அமைத்திருக்கிறார்கள். அதை கவனமுடன் பார்த்து
இணைப்பதே சாலச்சிறந்தது.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: ...................... இனி ஒரு சில ஜோதிட குறிப்புகளோடு இந்த பதிவு தொடரும். அந்த குறிப்புகளையெல்லாம், உங்கள் ஜாதகத்துடனோ அல்லது
மற்றவர்கள் ஜாதகத்துடனோ ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. அதுபோல் இதன் சம்பந்தமாக ஜோதிட குறிப்புகளை கொடுத்து,
ஜோதிட பலனையும் தயவுசெய்து கேட்க வேண்டாம்.
............................. சப்தமாதிபதி,
லாபத்தில், அல்லது திரிதியத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு காம உணர்வுகள் அதிகமாக
இருக்கும். அதோடு காம காரகன் சுக்கிரனும் லாபத்திலோ
அல்லது திரிதியத்திலோ இருந்தால், வேறு வினையே வேண்டாம். இத்தகையோர்கள் ஒன்றிருக்கும்போதே இன்னொன்றையும்
நாடுவார்கள். சிலர் வாழ்க்கையில் கள்ளத்தொடர்பு,
சின்னவீடு ஆகியன உருவாவதற்கும் காரணம் இதுவாக அமைந்துவிடுகிறது. நிம்மதியான குடும்பத்தில் புயலை கிளப்பிவிட்டுவிடுகிறது. இதை தவிர்க்க பொருத்தம் பார்க்கும்போதே ஜோதிடர்களால்
நல்ல ஆலோசனைகளை வழங்கமுடியும். சம்பந்தப்பட்டவர்களுக்கு
பரிகாரவழிபாடுகளை செய்ய சொல்வதன் மூலம், தவறான உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்
. இல்லையென்றால், இவ்வகையான கிரக அமைப்பிற்கு
நம் முன்னோர்கள் பரிகாரவழிபாடுகளை தேவையின்றி சொல்லியிருக்க மாட்டார்கள். மேலும், ஆணுக்கு ஆண் மிருகம் அமைந்திருந்தால், பொருத்தும்
பெண்ணின் ஜாதகத்தில் பகையில்லாத பெண் மிருகம் இருக்குமாறு உள்ள ஜாதகத்தை பொருத்தினால்,
மேற்கண்ட விபரீதங்கள் நடக்காது.
மேற்கண்ட கிரக அமைப்பு
உடைய ஆண்கள், முற்காலத்தில், வெளிப்படையாகவே ஆசைநாயகியோடு தொடர்பு கொண்டனர். மேலும் பல திருமணங்களையும் செய்துகொண்டனர். இக்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவில்லை. இது வரவேற்புக்குரியதே. ஆனால், விவாகரத்து, உரியவரை விட்டுவிட்டு அடுத்தவரோடு
வாழ்தல், போன்ற திசைகளில் விவகாரம் திரும்பிவிட்டது. பெண்களுக்கும் இதே மாதிரியான, கிரக அமைப்பு இருப்பதுண்டு. அக்காலத்தில், வழிபடும் தெய்வத்தை விட கணவனே கண்கண்ட
தெய்வம் என்றும், பூஜை புனஸ்காரங்கள், விரதாதி அனுஷ்டானங்கள் என்றும், ஆண்களைவிட பெணகளுக்கு
அதிகமாக கற்பிக்கப்பட்டது. இவையெல்லாம், தவறான
உணர்வுகளை மறக்கடித்து, திசை திருப்பி வைத்தன
என்றால் அது மிகையில்லை. இப்போது மாற்றங்கள்
நிறைய ஏற்பட்டுவிட்டன. அதற்கேற்றாற் போல்,
யோனிப்பொருத்தத்திலும், மிக அதிக கவனம் செலுத்தி, நல்ல இல்லறம் நடத்தும் தம்பதியர்களை
இணைக்கும் பொறுப்பு ஜோதிடர்களுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது. எனவே இந்த தொடரின் முதல் பதிவில் சொல்லப்பட்டது
போல், திருமண பொருத்த அட்டவணைகளை முழுமையாக நம்பிவிட வேண்டாம். :
....................... தொடரும்
................... நன்றி.
.................. வணக்கம்.
No comments:
Post a Comment