ஓம் படைவீட்டம்மா துணை. வணக்கம்.
" தோஷ நக்ஷத்திர பெண்களின் திருமணம்.
[ ஆயில்யம், மூலம். ] ", .................... பாரம்பரிய முறையிலான பதிவு............................ ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் ஆகிய நக்ஷத்திரத்தில்
பிறந்த பெண்கள், செல்லக்கூடிய புகுந்த வீட்டில், முறையே மாமியார், கொழுந்தன் அதாவது
இளையவன், ஜேஷ்டஃன் அதாவது மூத்தவர், மாமனார்
இருப்பின் அவர்களுக்கு ஆகாது என்று காரணம் காட்டி, பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகத்தை
தள்ளுபடி செய்வது வழக்கமாக உள்ளது. தவிர்க்க
முடியாத சந்தர்ப்பங்களில், இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பெண்கள், புகுந்த வீட்டிற்கு
மருமகளாக வரும் சூழ்னிலை ஏற்பட்டால் என்ன செய்யலாம்? என்பதற்கு வழிகூறுகிறது இந்த கட்டுரை.
முதலில் மூல நக்ஷத்திரம்
சம்பந்தமாக..............................
மூல நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணை, மருமகளாக்கிக்கொண்டால், மாமனாருக்கு ஆகாது. ஆகவே அவளை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா" என்று
குழப்பமடையத் தேவையில்லை. மூல நக்ஷத்திர பெண்ணும்,
மாப்பிள்ளையின் தகப்பானாரும், மருமகள் மாமனார் என்ற உறவு உறுதி செய்ய்ப்படுவதால்தானே,
மருமகள் மாமனார் என்ற உறவு அமைகிறது. இந்த
உறவின் தொடர்பால் பாதிப்பு வந்துவிடும் என்ற கவலையும் வருகிறது. இப்படி உறுதி செய்யப்படுவதை நிறுத்திவிட்டால் மருமகள்
மாமனார் என்ற உறவு ஏற்படாது. இந்த உறவை உறுதி
செய்யும் சம்பிரதாயமே, " கன்னிகாதானம் ", ஆகும். இந்த சம்பிரதாயத்தின்படி, பெண்ணை பெற்றவர்கள், கன்னியான
தன் மகளை, பிள்ளையை பெற்றவர்களிடத்தில், மருமகளாகவும், பிள்ளையிடத்தில், மனைவியாகவும்,
தீர்த்தம் கொண்டு தாரை வார்த்து, தானம் கொடுத்து விடுகிறனர். இந்த சம்பிரதாயத்தின் மூலம், பெண்ணின் பெற்றோர்கள்
மகள் என்ற தங்கள் உறவின் உரிமையை, பிள்ளையை பெற்றவர்களிடமும், பிள்ளையிடமும், முறையே
மருமகள், மனைவி என்ற உறவின் உரிமையாக தந்துவிடுகிறனர். இந்த சம்பிரதாயத்தை மட்டும் விவாஹ சடங்கில் நிறுத்துவதன்
மூலம், மாமனார் மருமகள் என்ற உரிமை சாஸ்த்திர சம்பிரதாயப்படி ஏற்படாது. பேச்சுக்கு வேண்டுமானால் மாமனார், மருமகள் என்று
சொல்லிக்கொள்ளலாம். இப்படி உரிமையில்லாத மூல
நக்ஷத்திர மருமகளின் பாதிப்பு சாஸ்த்திரப்படி மாமனாருக்கு வராது. மற்ற விவாஹ சம்பிரதாயங்களின்படி மூல நக்ஷத்திரப்பெண்,
தன் மனைவி என்ற உரிமையை பிள்ளை மட்டும் பெறுகிறான். திருக்கோவில் சன்னதியில் திருமணம் நடக்கும் போது,
இந்த கன்னிகாதான நிகழ்வு நடத்தப்படுவதில்லை.
எனவே திருக்கோவில் சன்னதியில் திருமணத்தை வைத்துக்கொள்வதன் மூலம், மூல நக்ஷத்திர
பாதிப்பு, மருமகள், மாமனார் இடையே வராது. மேலும்
தம்பதியர் தனிக்குடித்தனம் செல்வதாக இருப்பின் இன்னும் நல்லது. மாமனார் மருமகள் இருவரது வாழ்க்கையும் ஒரே இடத்தில்
அமையப்போவதில்லை.. தம்பதியர்களுக்கு தொலைதூர
வாழ்க்கை, அல்லது வெளிநாட்டு வாழ்க்கை அமைந்துவிட்டால் இன்னும் மிக மிக நல்லது. இவ்வகை வாய்ப்பு உள்ளவர்கள், தங்கள் குடும்பத்திற்கு
மூல நக்ஷத்திர பெண்ணை தயங்காமல் தேர்வு செய்யலாம். இதே விதி ஆயில்ய நக்ஷத்திர பெண்ணுக்கும் பொருந்தும். மாமியார், மருமகள் உறவு சம்பிரதாயப்படி, உறுதி செய்யப்படவில்லை
என்றால், ஆயில்யம் மாமியாரை பாதிக்காது.
இதை இன்னும் ஒரு வகையிலும், சாதகமாக சிந்திக்கலாம். பிள்ளையை, சிறுவயதில், பெற்றோர்கள் தத்து கொடுத்திருந்தால்,
அந்த பிள்ளைக்கு பெற்றோர் என்ற உரிமை பெற்றவர்களுக்கு இருக்காது. ஆனால் தத்து முறைப்படி தெய்வத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். எனவே தெய்வம் பிள்ளையின் பெற்றோர் என்ற ஸ்தானத்திற்கு
வந்து விடும். இந்த நிலையில் கன்னிகாதானம்
பெறும் உரிமை பெற்றவர்களுக்கு இல்லை என்பதாலும், பிள்ளையின் பெற்றோர் தெய்வம் என்பதாலும்,
திருமணம், தத்து கொடுக்கப்பட்ட தெய்வ சன்னதியில் நடைபெறவேண்டும். தெய்வமே தத்து பெற்ற பெற்றோர் என்பதால், மூல / ஆயில்ய
நக்ஷத்திர பாதிப்பு தெய்வத்தை ஒன்றும் செய்துவிடமுடியாது. உறவினர்களிடம் தத்து தரப்பட்ட பிள்ளையாக இருப்பின்,
அந்த உறவினர்களே பிள்ளையின் பெற்றோராவர். எனவே
அவர்களும் மூல / ஆயில்ய நக்ஷத்திரப்பெண்ணை கன்னிகாதானமாக தாரை வார்த்து பெற்றுக்கொள்ளக்கூடாது.
மேற்கண்ட வகையில் நாம்
திருமணத்தை அமைத்துக்கொள்வதன் மூலம், ஒரு சில சம்பிரதாயங்கள் குறைந்தாலும், திருக்கோவில்
திருமணம் என்பதால், அது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்துவிடும். திருமண சம்பிரதாயங்களை திருக்கோவிலில் நிறைவேற்றிக்கொண்டு,
உறவினர், நண்பர்கள் சம்பிரதாயங்களை வழக்கம் போல் திருமண மண்டபத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம். எனவே இக்கருத்தை பிள்ளையை பெற்றவர்கள் நன்றாக சிந்தித்து
பார்த்து உண்மையை உணர்ந்து, திருமண சடங்குகளை இனிதே நிறைவேற்றி, இனிய இல்லறத்தை தம்பதியர்களுக்கு
வழங்கி ஆசியளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
குறிப்பு:::::::::::::: இதைபோலவே, விசாகம், கேட்டை நக்ஷத்திரங்களில் பிறந்த
பெண்களுக்காக, மஹாபாரத சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு, அடுத்த பதிவு இடுகிறேன் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
No comments:
Post a Comment