ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். நவரத்தினங்களை பற்றிய பதிவு இது. பகுதி 07.
இந்த பதிவில் ரத்தினம் எந்த விரலில் அணிய வேண்டும்? எந்த உலோகத்தில் இணைக்கப்பட
வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.
மாணிக்கம், புஷ்பராகம்,
பவளம் மற்றும் இவைகளின் வகைகள் அனைத்தும் தங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும். வைரம், நீலம், மரகதம், வைடூரியம், கோமேதகம் மற்றும்
இவைகளின் வகைகள் வெள்ளி, பிளாட்டினம், வெள்ளைத்தங்கம் ஆகியவற்றோடு இணைக்கப்பட வேண்டும். ரத்தினக்கற்களை வைத்து அணிகலன்கள் தயாரிக்கும் போது,
கற்கள் உடலில் படும்படி, அணிகலனில் சிறிது துளை வைத்து தயாரிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் படக்கூடிய ரத்தினகற்கள், கிரகங்களின்
சக்தியை ஈர்த்து நம் உடலுக்கு தரும். மோதிரமாக
விரல்களில் அணியும்போது வலக்கையில் அணியுங்கள்.
இடதுகை வேண்டாம். ரத்தின அணிகலன்களை
தொடர்ந்து விட்டுவிடாமல் அணிய வேண்டும். எக்காரணத்தை
கொண்டும் அடிக்கடி கழற்றி வைப்பது நல்லதல்ல.
ஒரு ரத்தினத்தின் சக்தி நம் உடலுக்கு கிடைக்க நாட்களாகலாம். கழற்றினால் அதன் தொடர்பு உடனடியாக நம்மிடம் இருந்து
விடுபட்டுவிடும்.
ஜோதிட சாஸ்த்திரத்தில்
உடலுறுப்புகளுக்கரிய கிரகங்கள் அடையாளம் சொல்லப்பட்டுள்ளது. அதுபோல் நம் உடலின் உறுப்பாகிய விரல்களுக்கும் கிரகங்களுக்கும்
தொடர்பு உண்டு. கிரகங்களுக்குரிய விரல்களை
தேர்வு செய்து, ரத்தினகற்களை அணியும்போது, அதன் கிரகங்களுக்குரிய விரல்களையும் தேர்வு
செய்து அணிந்தால் சிறந்த பயனைதரும். குருவுக்குரியது
சுட்டுவிரல். எனவே புஷ்பராகத்தை சுட்டுவிரலில்
அணீய வேண்டும். குருவுக்குரிய நட்பு கிரகங்களின்
கற்களையும் இந்த விரலில் அணியலாம். சனிக்குரியது
நடுவிரல். இந்த விரலில் நீலம் அணிய வேண்டும். சனியின் நட்புகிரக கற்களையும் இதே விரலில் அணீயலாம். மோதிரவிரல் சூரியனுக்குரியது. மாணிக்கத்தை இந்த விரலில் அணியவேண்டும். சூரியனின் நட்புகிரக கற்களையும் இந்த விரலில் அணியலாம். சுண்டுவிரல் புதனுக்குரியது. மரகதத்தையும், புதனின் நட்புகிரக கற்களையும் இந்த
விரலில் அணீயலாம்.
இனி ரத்தினங்களை முதன்முதலாக
எந்த நாளில் அணிவது? என்று பார்க்கலாம். சந்திரன்
சுபராக இருக்கும் நாட்களை தேர்வு செய்ய வேண்டும்.
பொதுவாக வளர்பிறை நல்லது என்பாருண்டு.
வளர்பிறை நாட்கள் அனைத்திலும் சந்திரன் சுபராக இருப்பதில்லை. அது போல் தேய்பிறை நாட்கள் அனைத்திலும் பாபராக இருப்பதில்லை. நமது ஜோதிட சாஸ்த்திரம் சந்திரனின் சுபனாட்களை வரையறுத்துள்ளது. வளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி வரை சந்திரன்
சுபராவார். மேலும் இயற்கை சுபர்கள் பார்வை
பெறும் நாட்களில் சந்திரன் சுபராவார். இதில்
அவரவர்களுடைய சந்திராஷ்டம நாட்களை மட்டும் தவிர்த்து விடுங்கள். இப்படி சந்திரன் சுபராக இருக்கும் நாட்களில் ரத்தினக்க்ல்லுக்குரிய
கிரக நாளை தேர்வு செய்ய வேண்டும். அந்த நாளில்
அதே கிரகத்துக்குரிய ஹோரை நேரத்தில் ரத்தினத்தை முதன்முதலாக அணிய வேண்டும். இதில் புதன்கிழமையை தேர்வு செய்வதில் சற்று கவனம்
தேவை. அன்றைய தினம் புதன் பாபராக இருக்ககூடாது. ராகு, கேதுவுக்குரிய ரத்தினங்களை அணிய வேண்டுமென்றால்,
ராகு, கேதுக்குரிய நட்பு கிரக நாளை தேர்வு செய்து,. அதன் ஹோரை நேரத்தில் அணியவேண்டும். இயையெல்;லம் உங்களுக்கு குழப்பத்தை தந்தால் பொதுவாக ஒரு ஜோதிடரை அணுகி, உங்கள் ஜாதகப்படி, உங்களுக்கான
நாளை தேர்வு செய்துகொள்வது இன்னும் சிறப்பு.
இந்த தொடர்பதிவின் முதல்
பகுதியில், பஞ்சபூதங்களுக்கும், நவரத்தினங்களுக்கும் தொடர்பு உண்டு, என்றும் அதற்கான
விளக்கமும் தரப்பட்டது. இந்த தொடர்பு ஜோதிடரீதியாக
ஓரளவும், ஆயுர்வேத வைத்தியரீதியாக பெருமளவும் உள்ளது.. நம் உடலில் உள்ள பஞ்சபூதங்கள், அதன் இயல்பான அளவிலிருந்து
மாற்றம் அடையும் போது, நோய்கள் உண்டாகின்றன.
எனவே அவைகளை குணமாக்க, ரத்தினங்களின் பஸ்பங்களை வைத்தியர்கள் தருகிறனர். இவற்றைபற்றி விரிவாக ஆயுர்வேத சாஸ்த்திர நூல்களில்
பார்க்கலாம். இந்த வைத்தியமுறையில் நோய்கள்
விரைவாக குணமாக, ஜோதிடப்படி ரத்தினங்களையும் அணீய வைக்கிறனர். இப்படி ரத்தினங்களை அணிய வைக்கும் முயற்சி மிக குறைவே. ஜாதகப்படி நோய்ஸ்தானம் 6. 8 12 ஆக அமைகின்றன. இதை கையாள்வது பெரும் சிக்கலை உருவாக்கூடும் என்று
ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆயுர்வேத மருத்துவ
ஜோதிடம் அறிந்தவர்கள், ஜாதகத்தில் பஞ்சபூத தத்துவத்துக்கு முதலிடம் தந்து நுட்பமாக கையாள்கிறனர்.
இம்மாதிரியான ஜோதிட முறை அவர்களுக்கே அதிகம் தேவைப்படும். அதை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு
சிறிய முன்னோட்டம் மட்டும் பார்த்திருக்கிறோம்.
நன்றி. [ [ [ நிறைவு ] ] ]
No comments:
Post a Comment