ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். இது ITP எனும் இரத்த தட்டை
அணுச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட
ஒரு சிறுமியின் ஜாதக ஆய்வு. அவள் ஜாதகம் கீழே
தரப்பட்டுள்ளது. ஆயுள்ஸ்தானத்திற்கு சுப சந்திரன்
பார்வை. ஸ்தானாதிபதி புதன் சப்தமத்தில் சுக்கிரன்
சாரம். சுக்கிரன் பஞ்சமத்தில் நல்ல நிலையில்
உள்ளார். ஷட்பல கணிதப்படி 1. 8. 10 ஆகிய ஸ்தானாதிபதிகள் நல்ல வலுவுடன் உள்ளனர். எனவே ஆயுள் நிறைவாக உள்ளது. இதன் மூலம் இந்த நோய் ஒரு கண்டம் தந்து வருத்தபட
வைக்க வந்துள்ளது என விளங்குகிறது.
தற்போது புதன் திசையில்
சுக்கிர புக்தி தொடங்கியுள்ளது. புதன் பூர்வபுண்ணியாதிபதி,
மற்றும் அஷ்டமாதிபதி. இதில் இவர் சுக்கிரன்
நிலையை பொறுத்து எந்த ஆதிபத்தியத்துக்கு முதலிடம் தருவார் என்று தீர்மானிக்கப்படவேண்டும். இந்த ஜாதகம் ஸ்திர லக்ன ஜாதகம் என்பதால் சுக்கிரன்
பாக்கியாதிபதி, மற்றும் பாதகாதிபதி. பாதகாதிபத்தியம்,
அஷ்டமாதிபத்தியத்தோடும், பூர்வபுண்ணியாதிபத்தியம், பாக்கியாதிபத்தியத்தோடும் இணைந்து
திசை புக்தியை நடத்தும். இவ்விரு வகைகளில்
புதனின் பூர்வபுண்ணியாதித்துவத்தை விட, அஷ்டமாதிபத்தியம்
மேலோங்கியுள்ளது. காரணம் புதனின் அஷ்டமஸ்தானம்
உச்சம் மற்றும் மூலத்திரிகோனம். எனவே இந்த
ஆதிபத்தியம் வலுபெற்றுவிட்டது. எனவே புதன்
எனும் அஷ்டமாதிபதியும், சுக்கிரன் எனும் பாதகாதிபதியும் இணைந்து நோயை தீவிரமாக தந்துள்ளனர். இன்னோருபுறம், இவ்விரு கிரகங்களுக்கும் சுப ஆதிபத்தியத்துவமும்
இருப்பதால் நோயை குணமடையவும் செய்வர். எல்லாம்
கிரக அமைப்பின் விதிப்படி நடக்கிறது. இத்துடன்
தற்போது நடந்துவரும் அஷ்டமசனியின் உச்சமும் இணைந்துகொண்டதால் நோய் ஏற்பட்டுள்ளது.
எனவே புதன், சுக்கிரன்,
சனி ஆகிய கிரகனகளுக்குரிய பரிகார வழிபாடுகளை மேற்கொண்டால் நோய் விரைவில் குணமடையும். இவைகளுடன் நோய் குணமடைய இந்திய மருத்துவத்தை மேற்கொள்ள
வேண்டும். காரணம், ஆங்கில மருத்துவமுறை காரகனான
சூரியன் சத்ருஸ்தானம் அடைந்து, புதன் சாரம் பெற்று, கேதுவுடன் உள்ளார். இந்திய மூலிகை மருத்துவ காரகனான சனி லக்னாதிபதி
மற்றும் விரையாதிபதி. இதில் கும்பம் ஆட்சி
மற்றும், மூலத்திரிகோண்ம். எனவே இவர் லக்னாதிபயாக
பலம் பெற்றுள்ளார். சப்தமத்தில் பகையாகி சுக்கிரன்
சாரம். இவ்விரு கிரகங்களை சீர்தூக்கி பார்த்தால்
சனியால் நன்மை அதிகம். எனவே இந்திய மருத்துவம்
சிறந்தது. சனி பகை என்பதால் குணமாக சற்று காலதாமதமாகும்.
மேற்கண்ட கணிப்புகள், ஒரு
ஜோதிடர் ஒரு ஜாதகத்தை ஆய்வு செய்யும் போது தானாகவே புரிந்துகொள்பவையாகும். இவைகளை வைத்து ஜாதகிக்கு வந்துள்ள நோய் வகையை துல்லியமாக
அறிய இயலாது. ஜாதகரே தெரிவிக்க வேண்டும். இப்போது நோய் என்னவென்று தெரிந்துகொண்டு அடுத்த
கட்டத்துக்கு போகலாம்.
இன்னோய் ஆங்கிலத்தில்
Idiopathic thrombocytophonic purpura எனவும், தமிழில் இரத்த தட்டை அணுச்சிதைவு நோய்
எனவும் சொல்லப்படுகிறது. இன்னோய் அறிய எலும்புமஜ்ஜைதிசுவின்
செயல்பாடு, ரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கை, மண்ணீரலின் நோயெதிர்ப்புத்தன்மை,
தோலில் தெரியக்கூடிய நோயின் வெளிப்பாடு, ஆகியன
கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இவைகளை வைத்து
இன்னோயோடு தொடர்புடைய கிரகங்களை அறியலாம்.
எலும்புமஜ்ஜைதிசு செயல்பட்டுக்கு செவ்வாயும், [ இந்த திசுவில்தான் சிகப்பணுக்கள்
உருவாகின்றன.] ரத்தசிகப்பணுக்களுக்கு சந்திரனும், மண்ணீரலுக்கு குருவும், தோலுக்கு
புதனும் காரகத்துவம் பெறுகிறன. இனி இதன் அடிப்படையில்
ஜாதகத்தை அணுகலாம்.
செவ்வாய் இந்த ஜாதகத்தில்
லக்ன கேந்திரம் பெற்று, சொந்த சாரத்தில் இருக்கிறார். இவரது பார்வை தீய ஸ்தானங்களில் பதியவில்லை. எனவே எலும்புமஜ்ஜை திசுவானது ஆரோக்கியமுடன் சிகப்பணுக்களை
உற்பத்தி செய்கிறது. சந்திரன் ஆறாமதிபதி. மேலும் அஷ்ட்மத்திற்கு பார்வை. எனவே ரத்தம் நீர்த்து, அதாவது சிகப்பணுக்களின் எண்ணிக்கை
குறைகிறது. குரு விரையத்தில் நீசபங்கம், மற்றும்
வக்கிரம். குரு இப்படி தடுமாற்ற நிலையில் இருப்பதால்
மண்ணீரலும் சற்று தடுமாறுகிறது. நோய் முற்றிப்போனால்,
ஆங்கில மருத்துவத்தில் மண்ணீரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவர். மண்ணீரல் முற்றிலும் எதிர்வினையாக செயல்படவில்லை. எனவே நோய் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. எனவே இந்த அறுவை சிகிச்சை தேவைப்படாது. செவ்வாய்க்கும் 6. 8. 12 ஆகிய ஸ்தானகளுக்கும் தொடர்பு
இல்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை அவசியமில்லை.
புதனால் தோலில் நோயின் தாக்கம் அடையாளமாக தெரியக்கூடும். ஆக மொத்தத்தில் இந்த நோய் குணமாககூடியதே என்று புரிகிறது. இதில் சந்திரன், குரு, புதன், ஆகியோருக்கு பரிகார வழிபாடுகள் மேற்கொண்டால் நோயின்
தீவிரம் குறைந்துவிடும்.
ஆக கூட்டி கழித்து பார்க்கும்போது,
புதன், சுக்கிரன், குரு, சந்திரன் சனி ஆகியோருக்கு பரிகார வழிபாடுகள் செய்ய வேண்டியுள்ளது. அதாவது பெருமாள் கோவிலில் பெருமாளுக்கும் தாயாருக்கும்
ஆஞ்சனேயருக்கும், , நவக்கிரக குரு, சிவன்கோவில் ஸ்ரீஅம்பாள் ஆகியோருக்கு அபிஷேக ஆராதனைகள்
செய்து வழிபடுவதன் மூலம் நிவாரணம் அடையலாம்.
மேலும் ஆங்கில மருத்துவத்தை விடுத்து, இந்திய மருத்துவமும் மேற்கொள்ளலாம். சுக்கிர புக்தி வரும் ஜூலை 2017 வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நோய் நிச்சயமாக குணமாகிவிடும். இறைவன் திருவருள் புரிவானாக. துவண்டுவிடாமல், அவன் மீது நம்பிக்கை வைத்து தைரியாமாக
இருங்கள். நாம் அனைவரும் சிறுமிக்காக பிரார்த்தனை
செய்வோம்.
No comments:
Post a Comment