ஓம் படைவீட்டம்மா துணை. பெற்றோர்களுக்கு வணக்கம். " குழந்தை பிறப்பும், பெற்றோர்களும்
", ஒரு ஜோதிட பார்வை. பாரம்பரிய முறை
பதிவு. பொதுவாக ஒரு குடும்பத்தில் குழந்தை
பிறக்கிறது என்றால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும். அந்த குழந்தை பிறந்த பின் பெற்றோஎதிர்ர்கள் வாழ்க்கையில்
முன்னேற்றம் கண்டிருப்பார்கள். சொத்து வாங்கியிருக்கலாம். திடீர் பணவரவு ஏற்பட்டிருக்கலாம். பிரிந்த உறவுகள் சேர்ந்திருக்கலாம். சுபகாரியங்கள் நடந்திருக்கலாம். பெற்றோர்களின் தொழில் அல்லது பணியில் ஒரு நல்ல முன்னேற்றத்துடன்
கூடிய மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். மரணப்படுக்கையில்
இருந்த தாத்தா, பாட்டி கூட, சுகமடைந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரலாம். இப்படி நிறைய சுபங்கள் அந்த குடும்பத்தில் நடந்திருக்கும். நடந்துகொண்டிருக்கும். நடக்கும்.
இதனால் குழந்தை பிறந்த யோகம் என்று அந்த குழந்தையை எல்லோரும் தலையில் வைத்து
கொண்டாடுவர். : .................. சில குடும்பத்தில் மேற்கண்ட நிகழ்வுகளுக்கு நேர்மாறாக
நடந்து துன்பங்களும் துயரங்களும் பிறந்த குழந்தையால் விளைந்திருக்கலாம். இப்படிப்பட்ட குழந்தைகளிடன் குடும்பத்திலுள்ள அனைவரும்
பாசக்குறைவாக நடந்துகொள்வர். இதனால் பெற்றோரின்
வெறுப்புக்கு ஆளான குழந்தைகளும் உண்டு. ஆக
ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தை பிறந்த நேரம் பெற்றோர்களுக்கும் அந்த குடும்பத்துக்கும்
ஒரு திருப்பத்தை தருகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது?
என்பதை ஜோதிடரீதியாக பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம். பிறக்கப்போகும் குழந்தை, அதிர்ஷ்டகரமாக இருக்க வேண்டும்
என்று திட்டமிட்டு, இப்படிப்பட்ட குழந்தைதான் வேண்டும் என்று நாம் பெற்றுக்கொள்ளமுடியாது. அது இறைவனால் அருளப்படுவது. எதுவாயினும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவத்தோடு
இந்த பதிவை அணுக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் பெறும் குழந்தையால் நமக்கு கிடைக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும், போன
பிறவியில் நாம் செய்த புண்ணிய பாவங்களே. இதனால்தான்
ஜோதிட சாஸ்த்திரம், புத்திர பாக்கியத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தை அடையாளம் காட்டுகிறது.
அடிமைத்தொழில் புரிந்துவரும்
ஒரு கடும் உழைப்பாளி. நடுத்தர குடும்பத்தை
விட தாழ்ந்த நிலையில் குடும்பத்தை நடத்திக்கொண்டிருப்பவர். இவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. 5 ஆம் அதிபதி லக்னத்தில் இருக்க, லக்னாதிபதி லாபத்தில்
இருக்க, இருவரும் கெடாமல் சுபகரமாய் இருக்கும் நிலையில் உள்ள ஜாதக அமைப்பு குழந்தைக்கு
அமைகிறது. இரண்டுமே சுபாவ சுபகிரகங்கள் எனக்கொள்வோம். அவைகளின் பார்வை முறையே 7 லும், 5 லும் பதியும். இதன் பலனாக குழந்தைக்கு திடீர் பனவரவு, செய்யும்
தொழில், அல்லது பணியில் அதிக லாபம் ஆகியன பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டும். கிரகங்கள் இதை தவறாமல் குழந்தைக்கு கொடுத்தாக வேண்டும். குழந்தைக்கு பணம் என்றால் என்ன? என்று தெரியாது. இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும் என்று ஆசைப்படப்போவதுமில்லை. ஆனால் வறுமை வந்தால் மட்டும், அதன் வலியை அனுபவித்து
வேதனைப்படும். அந்த வேதனைக்குரிய காரணமும்
அதற்கு தெரியாது. அதுபோல் தொழில், பணி, வருமானம்
இதையும் குழந்தை அறியாது. ஆனால் கிரகங்கள்
செல்வ செழிப்பை தந்தாக வேண்டும். தந்தையோ அடிமை
தொழில் மற்றும் நடுத்தர நிலையை விட தாழ்ந்த பொருளாதாரம் கொண்டவர். குழந்தையால் தொழில், பணி செய்து நல்ல லாபத்தை அடைந்து,
திடீர் பணவரவை செய்து கொள்ள முடியாது, என்பதால் அந்த யோகத்தை, கிரகங்கள் தந்தைக்கு
தந்து விடும். அடிமைதொழில் புறிந்த தந்தை,
விறுவிறுவென முன்னேரி சுயதொழில் புரிந்து, நல்ல வருமானமும், பெருத்த பணவரவையும் சந்திப்பார். செல்லக்குழந்தையை பெற்றோர்கள் சீராட்டி பாராடி வளர்ப்பர். குழந்தையும் நல்ல குதூகலத்துடன், எவ்வித பஞ்சமுமின்றி
வளரும்.
குழந்தையின் சுபயோக அமைப்பை
விட பெற்றோரின் அவயோக அமைப்பு அதிக வலுவுடன் இருந்தால், பெற்றோரால் முன்னேற முடியாது. இந்த சூழ்னிலையில், நல்ல செல்வாக்குடன் இருக்கும்
குடும்பத்திற்கு, குழந்தையை கிரகங்கள் மாற்றிவிடும். யோக காலம் முடியும் வரை அந்த குழந்தை, செல்வசெழிப்புடன்
வாழக்கூடிய தாய்மாமன், அத்தை அல்லது தாத்தா, பாட்டி போன்ற உறவினர் குடும்பத்தில் வாழ்ந்து
வரும். குழந்தையின் யோக ஜாதக அமைப்பு, பெற்றோரின்
ஜாதக அமைப்பு ஆகிய இரண்டில் எது வலுவானது? என்று ஒரு ஜோதிடர் மிக சரியாக தீர்மானித்துவிடுவார். [ இதற்கான விரிவான விளக்கத்தை அடுத்த பதிவில் நாம்
பார்ப்போம். ].
இதுவே நேர்மாறாக அமையக்கூடிய
சூழ்னிலை கொண்ட குடும்பங்களும் உண்டு. குழந்தையின்
அவயோக அமைப்பு, அதை வறுமையில் வாட்டி எடுக்க வேண்டிய விதியிருந்தால், பெற்றோரின் பொருளாதார
வரத்துகளை எல்லாம் முடக்கிப்போட்டுவிடும்.
பெற்றோரின் யோகத்தை விட குழந்தையின் அவயோகம் வலுவுடன் இருந்தால் இவ்வாறு நடக்கும். இத்தகைய சூழ்னிலையில், குழந்தையை பெற்றோர்கள் பிரிந்திருக்க
வேண்டும் என்று ஜோதிடர்களே ஆலோசனை சொல்வதுண்டு.
இது பெற்றோரின் நலன் கருதி சொல்லப்படுகிறது. பெற்றோரின் மனசாட்சி உறுத்தினல், என்ன நடந்தாலும்
அவர்கள் குழந்தையை பிரிவதில்லை. பெற்றோர்கள்
குழந்தைக்காக செய்யும் எத்தனையோ வகை தியாகங்களில் இதுவும் ஒன்று. குழந்தையின் அவயோகத்தை விட பெற்றோர்களின் யோகம்
வலுவாக இருந்தால், குழந்தை நோய்வாய்ப்படும்.
ஆனால் பெற்றோர்கள் செல்வசெழிப்புடன் இருப்பதால், செலவு செய்து மருத்துவம் செய்வார்கள். பரிகார வழிபாடுகளையும் செய்வார்கள். ஆனால் மனத்துயர் என்று ஒன்று இருக்குமல்லவா! அதிலிருந்து மீள முடியாது. குழந்தையும், தனக்கிருக்கும் அவயோகத்தின் காரணமாக,
நோயின் துன்பத்தை தாங்கிக்கொண்டாக வேண்டும்.
பெற்றோர், குழந்தை இருவருக்குமே
நடப்பில் அவயோகமாக இருந்தால், ஜோதிடர்கள் தத்து கொடுக்க சொல்லி பரிந்துரைப்பார்கள். முக்கியமாக பெற்றோ ஸ்தானங்கள் குழந்தையின் ஜாதகத்தில்
பாதிக்கப்பட்டிருந்தால், அவசியம் தத்து கொடுத்தாக வேண்டும். அதுவே இருவருக்கும் நல்லது. வாழ்க்கையில் திருமணம் ஒரு திருப்புமுனையென்றால்,
குழந்தை பிறப்பு அதைவிட இன்னொரு திருப்புமுனையாக அமைகிறது. நன்றி.
வணக்கம். [ ............... தொடரும் ................. ]
No comments:
Post a Comment