ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். " சுக்கிரனும் வக்ராஸ்தமனமும்
", பாரம்பரிய முறையிலான பதிவு. சுக்கிரனின் வக்ராஸ்தமனம் புதனுக்கு அடிக்கடி நிகழ்வது
போல் சுக்கிரனுக்கு அடிக்கடி நிகழாத ஒரு அபூர்வ
நிகழ்வு. ஜோதிடத்திற்கும் இதற்கும் நெருங்கிய
தொடர்பு உண்டு. எனவே இதை பற்றி இந்த பதிவில்
சிந்திப்போம். சூரியனை மையமாக கொண்டு கிரகங்கள்
சுற்றி வருகிறன. இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களில்
புதன், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் பூமிக்கும் சூரியனுக்கு இடையே அடிக்கடி வரும். பூமியை மையமாக கொண்டு சந்திரன் சுற்றுவதால் அவ்வப்போது
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும். மற்ற
செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதில்லை. ராகு, கேது ஆகியவை நிழல் கிரகங்கள்.
வக்கிரம். ............................. பூமியிலிருந்து பார்க்கும்போது, ஒரு கிரகம், சூரியனை
சுற்றிவருகிற வேகம் குறைந்து, பின்னோக்கி நகர்வது போல தோற்றம் அளிப்பதையே வக்கிரம்
என்று சொல்கிறோம். சூரியனை சுற்றி வரும் எந்த
கிரகமும், தன் வேகத்தை மாற்றிக்கொள்வதில்லை.
சுற்றுப்பாதைகளின் தூரங்கள் ஒன்றுக்கொன்று சற்று விலகுவதும், நெருங்குவதுமாக
அமைந்துள்ளன. இப்படி விலகி செல்லும் நிலையில்
உள்ள பாதையில் ஒரு கிரகம் பயணிக்கும்போது, வேகம் குறைந்து பின்னோக்கி செல்வது போல்
நமக்கு தோன்றுகிறது. இந்த வக்கிரனிலை ஜோதிட
சாஸ்த்திரப்படி, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டுமே
உண்டு. ஆனால் " சூரிய சித்தாந்தம்
", என்னும் வானவியல் சாஸ்த்திரம் சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கும்
வக்கிரனிலை உண்டு என்கிறது. இவைகளின் வக்கிர
காலம் கணிப்பது மிகவும் கடினம் என்பதாலும், நிறைய வித்தியாசங்கள் வரும் என்பதாலும்,
வக்கிரனிலை மிக குறுகிய காலமே நிலைக்கும் என்பதாலும் ஜோதிட சாஸ்த்திரம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்ற கிரகங்களை விட பூமிக்கு மிகவும் அருகாமையில்
வரக்கூடிய கிரகம் சுக்கிரன். மேலும் இதன் வேகம்
பூமியை விட அதிகம் என்பதால், இதன் வக்கிர காலம் கணிப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது
என்று பஞ்சாங்க நிபுணர்கள் சொல்கிறனர். பூமி
சூரியனை சுற்றி வரும் வேகம் நொடிக்கு கிட்டத்தட்ட 29.78 கிமி. சுக்கிரன் சூரியனை சுற்றி வரும் வேகம் நொடிக்கு
கிட்டத்தட்ட 35.02 கிமி. பூமிக்கு அருகில்
வந்து, பூமியை விட நொடிக்கு கிட்டத்தட்ட 5.24 கிமி. வேகமாக முந்திக்கொண்டு ஓடும் சுக்கிரன்,
பின்னோக்கி செல்வது போல் தோற்றமளிக்கும் வக்கிர நிலைக்கு உட்படுவது அபூர்வமே. எனவே சுக்கிரன் அஸ்தமனம் அடைந்த ஜெனன ஜாதகங்களை
அடிக்கடி பார்க்கமுடிகிற நம்மால், சுக்கிரன் வக்கிரமடைந்த ஜாதகங்களை மிக குறைவாகவே
பார்க்க முடிகிறது..
அஸ்தமனம். ................... பூமியிலிருந்து பார்க்கும்போது, சூரியனோடு நெருங்கி
இணையும் கிரகங்கள், தங்கள் ஒளிச்சக்தியை, சூரியனிடம் இழந்துவிடுகிறன. அதாவது சூரியனின் மிகபிரகாசமான ஒளிவெள்ளத்தில்,
மற்ற கிரகங்களின் ஒளி பூமிக்கு புலப்படாமல் மங்கிப்போய்விடுகிறது. இதையே அஸ்தமனம் என்கிறோம். இதை அஸ்தங்கதம் என்றும் சொல்வார்கள். செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள், சூரியனை சுற்றி
வரும்போது, சூரியனுக்கு பின்னால் செல்லும் நிலை ஏற்படும். அப்போது அவை அஸ்தங்கதம் அடைகின்றன. புதன் மற்றும் சுக்கிரன், பூமிக்கும் சூரியனுக்கும்
இடையில் சுற்றி வருவதால், சூரியனுக்கு முன்புறம் வரும்போதும், சூரியனுக்கு பின்புறம்
செல்லும்போதும் அஸ்தங்கதம் அடைகின்றன. புதன்
அடிக்கடி வக்கிரனிலையில், அஸ்தங்கதம் அடைவதுண்டு.
அதுபோல் சுக்கிரனும் அபூர்வமாக வக்கிர நிலையில் அஸ்தங்கதம் அடையும். இப்படி இருனிலையும் ஒருசேர அடைவதையே வக்கிராஸ்தமனம்
என்கிறோம். சுக்கிரன் அடிக்கடி அஸ்தங்கதம்
அடையும். ஆனால் வக்கிரம் அடைவது மிக குறைவு. அதிலும் இந்த இரு நிலைகளும் ஒர் சேர ஏற்படுவது மிகமிக
அபூர்வம். எனவே சுக்கிர வக்கிராஸ்தமன ஜெனன
ஜாதகத்தை சிலர் பார்த்திருக்கவே முடியாது.
இந்த பதிவுடன் அத்தகைய அபூர்வ ஜாதகம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
புதன் வக்கிராஸ்தமனம் அடையும்
போது, தன் ஸ்தானாதிபத்திய பலனை சூரியனி ஸ்தானாதிபத்தியத்திற்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளக்கூடும். ஆனால் தான் தரும் தன் சுய காரகத்துவ பலனை குறைத்துக்
கொள்வதில்லை. அதுபோல் சுக்கிரன் வக்கிராஸ்தமனம்
அடையும்போது, தன் ஸ்தானாதிபத்திய பலனை சூரியனின் ஸ்தானாதிபத்தியத்திறு தக்கவாறு மாற்றிக்கொள்ளக்கூடும். ஆனால் தன் சுய காரகத்துவ பலன் தருவதில் குறைவு ஏதும்
இருக்காது. புதனின் வக்கிராஸ்தமன ஜாதகர் புதன்
காரகத்துவமான கலைகளில் அதிதீவிர அறிவுவளர்ச்சி பெற்றிருப்பார். ஆனால் அதையெல்லாம் ஏறுக்குமாறாகவே பயன்படுத்துவார். அதுபோல் சுக்கிரன் வக்கிராஸ்தமனம் பெற்ற ஜாதகர்
சுக்கிரன் காரக்த்துவமான செல்வமும், காம உணர்வையும் அதிதீவிரமாக பெற்றிருப்பார். அவைகளையெல்லாம் ஏறுக்குமாறாகவே பயன்படுத்துவார்
என்பது துரதிர்ஷ்டம். அதனால்தானோ என்னவோ, இத்தகையோர்கள்
அதிகமாக பிறக்ககூடாது என்பதற்காக, சுக்கிரனின் வக்கிராஸ்தமன நிலையை அடிக்கடி நிகழாதபடி
செய்திருக்கிறான் இறைவன். நன்றி. வணக்கம்.
.
No comments:
Post a Comment