ஓம் படைவீட்டம்மா துணை. வணக்கம்.
............ எளிய வழிமுறையில் ரஜ்ஜுப்பொருத்தம். ................... ஜோதிட ஆர்வலர்களுக்கான பதிவு. .......................... பாரம்பரிய முறை. .............. திரு அவர்கள், ரஜ்ஜுபொருத்தத்தில் ஆரோகணம், அவரோகணம்
பற்றி விளக்கம் தாருங்கள் என கேட்டிருந்தார்.
அவருக்காகவும் இந்த பதிவு இடப்படுகிறது.
முதலில் ரஜ்ஜு பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை என்பதற்கான விதி முறையை பார்க்கலாம்.
பொருத்தம் பார்க்கும் இரு
ஜாதக நக்ஷத்திரங்களின் ராசியதிபதிகள், ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜு பொருத்தம் பார்க்காமலேயே
அப்பொருத்தம் உண்டு எனக்கொள்ளலாம். அதுபோல்.
இவ்விரு ஜாதக நக்ஷத்திரங்களின் ராசியதிபதிகள், இருவராக அமைந்து, அவர்கள் நட்புடன் இருந்தாலும்
ரஜ்ஜு பொருத்தம் பார்க்காமலேயே உண்டு என கொள்ள வேண்டும்.. மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகியவை, விவாஹதசவித
பொருத்த சாஸ்த்திரப்படி, மஹா நக்ஷத்திரங்கள் என்பதால், இந்த நக்ஷத்திரங்களில் ஒன்று
ஒரு ஜாதகருக்கு இருந்தாலும், ரஜ்ஜு பொருத்தம்
பார்க்கவேண்டியதில்லை. அப்பொருத்தம் உண்டு
என கொள்ள வேண்டும்..
இனி அடுத்த விதிமுறை. ....................... பொருத்தம் பார்க்கப்படும் இரு ஜாதகங்களின் நக்ஷத்திரங்கள்
ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் ரஜ்ஜுபொருத்தம் இல்லை.
ஆனால் ஒரே ரஜ்ஜுவில் இருக்கும் இருவர் நக்ஷத்திரங்களில் ஒன்று ஆரோகணத்திலும்,
இன்னொன்று அவரோகணத்திலும் இருந்தால் ரஜ்ஜுப்பொருத்தம் உண்டு. { முக்கிய குறிப்பு: .................. இரு ஜாதகங்களின் ராசிகள் ஒன்றுகொன்று சப்தமமாக இருந்தால்,
ரஜ்ஜுப்பொருத்தம் தானாகவே அமைந்துவிடும்.
}
இனி உதாரணங்களுடன் பார்க்கலாம். இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். இடப்பக்கத்திலிருந்து, வலப்பக்கமாக வரிசையாக நக்ஷத்திரங்களின்
பெயர்கள் உள்ளன. கடைசியில் ரஜ்ஜுவின் பெயர்
உள்ளது. அது போல் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து
கீழாகவும், முறையான நக்ஷத்திர வரிசை அமைக்கப்பட்டிருக்கிறது. எது கீழிருந்த் மேல், எது மேலிருந்து கீழ் என்பதை
அறிய, அருகிலேயே அம்புக்குறிகள் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் அடையாளமாக
இடப்பட்டிருக்கிறன. கீழிருந்து மேலாக செல்லும்
வரிசை ஆரோகணம் எனப்படும். மேலிருந்து கீழாக
வரும் வரிசை அவரோகணம் எனப்படும்.
பெண்ணின் நக்ஷத்திரம் பரணி
எனவும், ஆணின் நக்ஷத்திரம் பூரம் எனவும் கொள்வோம். பெண்ணின் ராசியதிபதி செவ்வாய். ஆணின் ராசியதிபதி சூரியன். இருவரும் நட்பு எனவே ரஜ்ஜுப்பொருத்தம் உண்டு. தனித்தமுறையில் ரஜ்ஜுப்பொருத்தம் பார்த்தால், இவ்விரு நக்ஷத்திரங்களுக்கு
ரஜ்ஜு பொருத்தம் இல்லை. 1. இரு நக்ஷத்திரங்களும் கீழிருந்த மேலாக செல்லும்
ஆரோகணத்தில் உள்ளன. 2. இவ்விரு நக்ஷத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவான தொடை ரஜ்ஜுவில்
உள்ளன. இப்படி ரஜ்ஜு சேராத காரணங்கள் இருந்தாலும்,
ராசியதிகள் நட்பு என்பதால் ரஜ்ஜுபொருத்தம் பார்க்காமல் உண்டு என கொள்ள சொல்கிறது சாஸ்த்திரம்.
இரு ஜாதகங்களின் நக்ஷத்திரங்களின்
ராசியதிபதிகள் ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜு பொருத்தம் உண்டு என கொள்ள வேண்டும். இவை ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும், ராசியதிபதிகள் ஒருவரே
என்பதால் ரஜ்ஜு பொருத்தம் உண்டு..
இனி பெண்ணின் கிருத்திகை
1 ஆம் பாதத்தோடு, ஆணின் உத்திராடம் 2 ஆம் பாதத்துக்கு ரஜ்ஜுப்பொருத்தம் பார்ப்போம். செவ்வாய் பெண்ணுக்கும், சனி ஆணுக்கும் ராசியதிபதிகள். இருவரிடையே நட்பு இல்லை. அடுத்து நக்ஷத்திராதிபதி இருஜாதகங்களிலும் சூரியனாகிய
ஒருவரே ஆவார். ஆகையால் அடுத்து பார்த்தால்,
இரு நக்ஷத்திரங்களும் ஆரோகணத்தில் உள்ளன. மேலும்
இவ்விரு நக்ஷத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவான உதரரஜ்ஜுவை சேர்ந்தவை. இப்படி எந்த வகையில் பார்த்தாலும் ரஜ்ஜுபொருத்தம்
இல்லாமல் போவதால் இவ்விரண்டுக்கும் ரஜ்ஜுபொருத்தம் இல்லவே இல்லை என்று முடிவு செய்யலாம்.
சுருக்கமானக சொன்னால். ......................... முதலில் இரு ஜாதகங்களின் ராசியதிபதிகளை கவனியுங்கள். இருவரும் நட்பாகவோ, அல்லது ஒரே கிரகமாகவோ அமையவில்லை
என்றால், இருவர் நக்ஷத்திரங்களும் ஒரே ரஜ்ஜுவில் இருக்க்றதா? எனப்பாருங்கள். இருக்ககூடாது.
ஒருவேளை இருந்தால் அடுத்து ஆரோகணம் அவரோகணம் கவனியுங்கள். இரு ஜாதக நக்ஷத்திரங்களும், ஒரு சேர ஆரோகணத்திலோ
அல்லது அவரோகணத்திலோ இருந்தால், அவ்விரு ஜாதகங்களிடையே ரஜ்ஜு பொருத்தம் இல்லவே இல்லை
என்ற முடிவுக்கு வந்துவிடலாம். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment