ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். ................... ஜாதகம் சரியானதா? தவறானதா? ..... கணிப்பது எவ்வாறு? ....... ஜோதிடர்களுக்கான பதிவு. ......
பாரம்பரிய முறை. ...... மேலும் ஜாதகர்களும் இந்த க்ட்டுரையை பொறுமையுடன்
படிக்க வேண்டும். அப்போதுதான் சாஸ்த்திரப்படி,
ஒரு ஜாதகம் கணித்து எழுதுவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளன என அவர்களால் உணர்ந்துகொள்ள
முடியும். கணிணிகள் ஜாதகத்தை சாஸ்த்திரப்படி
கணிப்பதில்லை. ஜோதிடம் பார்க்க நம்மிடம் வரும்
ஜாதகம், எழுதப்படும் போது தவறாக எழுதப்பட்டிருக்கலாம். அல்லது பெற்றோர்கள் தவறான தேதி, நேரம் தெர்வித்து,
ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருந்தாலும், அது தவறான ஜாதகமாகும். எனவே எழுதப்பட்ட ஜாதகத்தை அப்படியே நம்பி நாம் பலன்
சொல்லும்போது, அந்த பலன்கள் தவறிப்போக வாய்ப்பிருக்கிறன. இதை தவிர்க்க ஜாதகத்தை பரிசோதிப்பது அவசியமாகிறது. பரிசோதிப்பதற்கான வழிமுறைகள் சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு. தவறாக எழுதப்பட்ட ஒரு ஜாதகத்தின் கையெழுத்து பிரதியும்
இந்த பதிவுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஜாதகத்தில்
பெற்றோரின் பெயர்கள் மட்டும் அழிக்கப்பட்டிருக்கிறன. இந்த ஜாதகம் எவ்வாறு தவறு? என்று ஆராய்வோம்.
இந்த ஜாதகத்தில் அடித்தல்
திருத்தலுடன் மூன்று விதமான ஆங்கில தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் எது உண்மை? கணிணியில் சரிபார்க்க வேண்டுமென்றால் எந்த தேதியை
தரவிடுவது? எனவே தமிழ் தேதிக்கு சரியான ஆங்கில
தேதியை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. தமிழ்தேதி:
.......... அக்ஷய வருஷம் ஆனி மாதம் 30 ஆம்
தேதி, திங்கட்கிழமை மாலை மணி 4.30 க்கு கும்பகோணத்தில் ஜனனம். இதன்படி பார்த்தால் சரியான ஆங்கில தேதி
14.07.1986 ஆகும். எனவே ஜாதகத்தில் குறிக்கப்பட்டுள்ள
ஆங்கில தேதிகள் அனைத்தும் தவறு. சரி, தேதி,
மாதம், கிழமை பார்த்தாகிவிட்டது. இனி பிறந்த
நேரம் சரிபார்க்க வேண்டும். பார்க்கலாம். ..................
பிறந்த நேரம் சரிபார்க்க
"ஜாதக அலங்காரம்" ஒரு சூத்திரத்தை சொல்கிறது. .................... உதயாதி நாழிகையை 12 ஆல் வகுத்து ஈவை தள்ளிவிட்டு,
மீதியை மேஷம் முதல் எண்ணிவர வருகின்ற ராசி எதுவோ அதுவே லக்னமாக அமையும். அல்லது அதன் திரிகோணங்கள் லக்னமாக அமையும். அல்லது எண்ணி வருகின்ற ராசி எதுவோ அதன் ஏழாமிடம்
அல்லது அதன் திரிகோணங்கள் லக்னமாக அமையும்.
இதன்படி அமையவில்லை என்றால் ஜாதகத்தில் கணிக்கப்பட்டுள்ள பிறந்த நேரம் தவறாகும். இனி இந்த சூத்திரப்படி உதாரண ஜாதகத்தை கணிக்கலாம்.
பிறந்த நாளன்று சூரிய உதயம்,
அஸ்ட்ரோவிஷன் திருக்கணித மென்பொருளின்படி காலை மணி 5.57. பிறந்த நேரம் மாலை மணி 4.30 என்பதால் சூரிய உதயாதி
நாழிகை 26.23 ஆகும். ஆனால் ஜாதகத்தில்,
25.30 என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜாதகத்தில்
கணித பிழை உள்ளது. பெற்றோர்கள் நேரம் தெரிவிக்கும்போது
நாழிகையில் தெரிவிப்பதில்லை. மணியில் தெரிவிக்கிறனர். எனவே நாம் மணியையே முதன்மையாக கொள்ளலாம். ஆகவே சூரிய உதயாதி நாழிகை 26.23 எனக்கொள்வோம். இதை 12 ஆல் வகுக்க ஈவு போக மீதி 2.23 வரும் இதை
முழுமையாக்கினால் 3 என ஆகும். ஆகவே மேஷம் முதல்
எண்ணிவர லக்னம் மிதுனம் அல்லது அதன் திரிகோணங்களான துலாம், கும்பம் அல்லது மிதுனத்தின்
ஏழாமிடமாகிய தனுசு, அதன் திரிகோணங்களாகிய மேஷம், சிம்மம் ஆகியனவற்றில் ஒன்றாக அமைய
வேண்டும். ஆனால் கணித்துப் பார்த்தால் விருச்சிகம்
லக்னமாக அமைகிறது. எனவே பிறந்த நேரம் தவறாக
இருக்கலாம். எனவே அவசரப்பட்டு முடிவெடுக்காமல்
மேலும் ஆராய்வோம்.
லக்னம் லக்னசந்தியில் அமைந்திருப்பதை
பார்க்கலாம். லக்னம் விருச்சிகத்தின் கடைசி
பகுதியான 28.41 பாகையில், கேட்டை 4 ஆம் பாதத்தில் உள்ளது. எனவே இதையும் சரி செய்தால் நமக்கு சரியான லக்னம்
கிடைத்துவிடும். சூத்திரப்படி ஒருவேளை இது
தனுசு லக்னமாகவும் இருக்கலாம். எனவே இதை கணித்துப்பார்க்க
நமக்கு ஸ்த்ரி / புருஷ காலம் உதவுகிறது. {
இந்த ஸ்த்ரி / புருஷ காலம், ஜாதகம் கணிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜோதிட பலன் சொல்வதற்கல்ல. ]. திங்கட்கிழமை உதயாதி நாழிகை 26.15 முதல் 27.30 வரை
புருஷகாலம் அமைகிறது. எனவே நாம் லக்னத்தை தனுசுக்கு
நகர்த்தலாம். பிறந்த நேரத்துடன் 7 நிமிஷங்களை
கூட்டினால் லக்னம் தனுசுக்குள் வந்துவிடும்.
இப்போது மீண்டும் பிறந்த நேர சோதனை செய்தாக வேண்டும். பிறந்த நேரம் மாலை மணி 4.37 படி உதயாதி நாழிகை
26.41 இதை 12 ஆல் வகுக்க ஈவு போக மீதி
2.41 இதை முழுமையாக்கினால் 3 வரும். மேஷம் முதல் எண்ணிவர 3 ஆவது ராசி மிதுனம். அதன் ஏழாமிடம் தனுசு என்பதால் பிறந்த நேரம் மாலை
மணி 4.37 என்றும், லக்னம் தனுசு என்றும் உறுதியாகிறது. எனவே ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ள விருச்சிக லக்னம்
தவறு. இதன்படி அக்ஷய வருஷ ஆனி 30 ஆம் தேதி
திங்கட்கிழமைக்கான ஜென்ம நக்ஷத்திரம் ஹஸ்தம் 4 ஆம் பாதமாகும். இப்போது நாம் கணித்த ஜாதகத்தில் இன்னொரு சிக்கல்
இருப்பதையும் கவனிக்க வேண்டும். அதுவே
" நக்ஷத்திரசந்தி ", எனப்படும்.
தனுசுலக்னத்தில் புருஷகாலம் முடிவதற்குள் சித்திரை 1 ஆம் பாதம் பிறந்துவிடுகிறது. எனவே இதையும் சரி செய்ய வேண்டும்.
சூத்திரப்படி தனுசின் இறுதி
நாழிகை 27.00 ஆகும். அப்போதுதான் மீதி 3 கிடைக்கும். எனவே உதயாதி நாழிகையின் தொடக்கம் 26.41 முதல்
27.00 க்குள் தனுசு லக்னமும் புருஷகாலமும் இணைந்து அமைகிறது. ஹஸ்தம் 26.58 வரை உள்ளது. பெரும்பான்மை நாழிகை ஹஸ்தத்திற்கே கிடைப்பதால்,
நக்ஷத்திர சந்தி இருந்தாலும் ஹஸ்தம் 4 ஆம் பாதம் சரியானதாகும். இப்போது நாம் முடிவுக்கு வந்து விடலாம். ஜாதகம் கையால் எழுதி கணித்த ஜோதிடர் அதை "
குட்டிச்சுவர் ", ஆக்கியிருக்கிறார்.
ஆங்கிலதேதி, பிறந்த நேரம், லக்னம், நக்ஷத்திரம், ராசி மற்றும் கட்டங்களில் கிரகங்களின்
இருப்பு, ஆகியன எல்லாமே தவறாக இருக்கிறது.
இந்த ஜாதகத்தை கொண்டு இத்தனை நாட்கள் வரை பலன் பார்த்திருக்கிறார்கள். எதுவும் சரியாக வரவில்லை என்பது பெற்றோரின் வாக்குமூலம். தவறான ஜாதகத்தை கொண்டு பலன் பார்த்தால், தவறாகத்தானே
இருக்கும். சரியான ஜாதக தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
பிறந்த நாள்:
........... 14.07.1986. அக்ஷய வருஷம் ஆனி மாதம் 30 ஆம் தேதி. திங்கட்கிழமை.
பிறந்த நேரம்: ................. மாலை
மணி 4.37. ராசி கன்னி. நக்ஷத்திரம் ஹஸ்தம் 4 ஆம் பாதம். லக்னம் தனுசு.
பிறந்த ஊர்: ........... கும்பகோணம்.
இதன்படி ஜாதகம் கணித்தெழுதி பலன் சொன்னால் மிக சரியாக அமையும். அமைந்தது.
நன்றி. வணக்கம்.