ஓம் படைவீட்டம்மா துணை. அனைவருக்கும் வணக்கம். தோஷங்களும் யோகமாகலாம்.
சாபங்களும் வரமாகலாம். ........ ஜோதிட சூட்சும செய்தி................ பாரம்பரிய முறை............................. என் குருனாதர் எனக்கு உபதேசித்தது என் நினைவுக்கு
வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
சாபங்களும் வரமாகலாம்...................................... ராமாயணத்தில், தரசரதன் வழக்கப்படி காட்டுக்கு வேட்டையாட
சென்றான். வேட்டையில் தவறுதலாக ஒருவண் மீது
அம்பை எய்துவிட்டான். அவனுடைய பழுத்த முதிய
பெற்றோர்கள், தன் மகன் பிரிவால் வாடி வருந்தி உயிர் நீத்தனர். உயிர் விடும் தறுவாயில், " நாங்கள் எப்படி
மகனை பிரிந்து தவித்து உயிர் விடுகிறோமோ அதுபோல், நீயும் உயிர் பிரியும் தறுவாயில்
மகனை பிரிந்து தவிப்பாய் ", என்று சாபமிட்டுவிட்டனர். ஒரு புறம் இந்த சாபத்திற்கு வருந்தினாலும், இன்னொரு
புறம் மகிழ்ச்சியடைந்தான் தசரதன். பல ஆண்டுகளாக
புத்ரபாக்கியம் இன்றி வருந்திவந்த தசரதன், இந்த சாபத்தின்படி, உயிர் பிரியும் நேரத்தில்
பிள்ளைகளை பிரிய வேண்டும் என்றால், பிள்ளைகள் பிறந்தால்தானே அவர்களை பிரிய முடியும்,
எனவே நிச்சயமாக பிள்ளைகள் பிறக்கும், என்றெண்ணி, மகிழ்ச்சியடைந்தான். முதிய பெற்றோர்கள் இட்ட சாபம் ஒருவகையில் தசரதனுக்கு,
வரமாகி புத்ரபாக்கியத்தை தந்துவிட்டது. உடனே
அயோத்தி திரும்பிய தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து, ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னரை
பெற்றான். இப்படி சாபமே வரமாக மாறும் நிகழ்வு
தசரதன் வாழ்க்கையில் மட்டுமல்ல. நம் வாழ்க்கையிலும்
அபூர்வமாக நடப்பதுண்டு. இனி அது எப்படி என்று
ஜோதிட ரீதியாக பார்க்கலாம்.
தோஷங்களும் யோகமாகலாம்..................................... என் குருனாதருக்கு சேவகம் செய்து வாழ்ந்துவந்த காலத்தில்
அவரை சந்திக்க ஒரு ஜாதகர் வந்தார். அவரிடத்தில்
" உங்கள் ஜாதகப்படி உங்கள் குழந்தை உங்களுக்கு விரோதியாகவே வாழும், " என்று
அவரை ஆறுதல் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், குருனாதர் வருத்தமாக சொன்னார். அதற்கு வருத்தப்பட வேண்டிய ஜாதகரோ, அளவிலா ஆனந்தம்
அடைந்து, என் குருனாதர் திருவடியில் வீழ்ந்து வணங்கினார். அவருக்கு பல ஆண்டுகளாக புத்ரபாக்கியம் இல்லாமல்
தவித்து வந்திருக்கிறார். விரோதியாக இருந்தாலும்,
குருனாதர் வாக்குப்படி பேர் சொல்ல பிள்ளை பிறக்கும் என்பது அவருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. ஏற்கனவே அவர் சந்தித்த பல ஜோதிடர்கள், அவருக்கு
புத்ரபாக்கியமே கிடைக்காது என்று கூறியிருக்கிறனர்.. மனைவியின் பொருந்தாத ஜாதகத்தை, அதற்கு காரணமாக காட்டியிருக்கிறனர். அத்துடன் மனவிக்கு புத்ரபாக்கியமும் இல்லை என்றும்
விவரித்துள்ளனர். அவையெல்லாம் சரியே. அவருக்கு அமையும் மனைவி பொருந்தாதவளாகஃ இருப்பால்
என்பதை ஜாதகம் நன்றாகவே காட்டிக்கொடுக்கிறது.
ஜாதகர் பொருத்தம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அதற்குண்டான கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இருப்பதை
காணலாம். இனி ஜாதகத்தை விரிவாக ஆராய்வோம்.
களத்திரத்தில், ராகுவுக்கு
குருபார்வை இருந்தாலும், நீசமாக இருப்பதால், இவருடைய மனைவிக்கு, கருச்சிதைவு இருமுறை
ஏற்பட்டிருக்கிறது. சுபகரமான உச்சசந்திரன்,
உச்சகுரு பார்வை, சுக்கிரனுடன் இணைந்ததால் காதல் வசப்பட்டிருக்கிறார். களத்திரஸ்தானாதிபதி, செவ்வாய் லாபத்தில் அமர்ந்து,
" இருதார தோஷத்தை ", உருவாக்குகிறார்.
அதாவது ஒரு மனைவி இருக்கும் போதே இன்னொரு மனைவியுடன் வாழும் நிலை. இந்த தோஷமே அவருக்கு புத்ரபாக்கிய யோகத்திற்கு வழி
வகுத்துவிட்டது. தோஷம் யோகமானது...... [ அதாவது சாபம் வரமானது ] முதல் மனைவி மூலம், குழந்தை இல்லாத நிலையில் இவர்
இரண்டாம் மனைவி மூலம் குழந்தை பெறவேண்டும் என்பது ஜாதக அமைப்பு. புத்ரஸ்தானாதிபதி புதன் 6 ஆமிடத்தில் செவ்வாய் சாரத்தில்
இருக்கிறார். செவ்வாய் களத்திர ஸ்தானாதிபதியாகி,
லாபத்தில் இருக்கிறார். புதன் விரோதியாக வாழ
இருக்கும் குழந்தையை செவ்வாய் மூலம் தரும்.
செவ்வாய் குழந்தையை, தன் இருதார தோஷந்த்தின் மூலம், இன்னொரு மனைவியை தந்து,
அவள் மூலம் குழந்தையை தரும். காரணம் செவ்வாய்
புதன் சாரம். இந்த கணக்கீடுகளை கவனித்த என்
குருனாதர் ஜாதகருக்கு பிள்ளைவரத்தை தன் அருள்வாக்கால் தந்துவிட்டார். குரு இளைய மனைவி ஸ்தானத்தை பார்வையிடுவதால், வரும்
பெண் நல்லவளாக, எல்லோருக்கும் பிடித்த வண்ணம் இருப்பாள் என்பதால், ஜாதகரை என் குருனாதர்
இரண்டாம் திருமணம் செய்துகொள்ள சொல்லி அறிவுருத்தினார்.
இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்படுதல்
வேண்டும். முதல் திருமணம் காதல் திருமணம் என்பதால்,
பொருத்தம் பார்க்கப்படவில்லை. ஒருவேளை பொருத்தம்
பார்க்கப்பட்டிருந்தால், இருதார தோஷ நிவர்த்தி நடந்திருக்கும். இதனால், வாழ்க்கையில் அவருக்கு இரண்டாம் தாரமே இல்லாமல்
போயிருக்கும். இந்த தோஷம் நிலுவையில் இருந்த
காரணத்தால், அதுவே புத்ரபாக்கியத்திற்கு வழி வகுத்திருக்கிறது. புத்ரபாக்கியம் தடையின்றி கிடைக்கும் பெண்ணாக பார்த்து
திருமணம் செய்துகொண்டால், ஜாதகருக்கு நிச்சயம் குழந்தை உண்டு என்பதே என் குருனாதரின்
கணிப்பு.
இதிலிருந்து நான் கற்ற
பாடம்....................... ஒரு ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும் அதுகூட அபூர்வமாக சில
நேரங்களில் வாழ்க்கையில் அளவிலா மகிழ்ச்சியை தரும் யோகத்திற்கு காரணமாக அமைந்துவிடலாம். எனவே தோஷம் என்றவுடன் உடனே பரிகாரத்தில் இறங்கிவிடாமல்,
இன்னும் சற்று கவனமாக ஆராய்தலே நன்று. நன்றி. வணக்கம்.