அவைடோருக்கு வணக்கம். கடந்த 24.02.2015 அன்று பெ;ருந்துறையில், திரு
Astro Senthil Kumar அவர்களால் நிகழ்த்தப்பெற்ற " ஜோதிட முழக்கம் ", நிகழ்ச்சியில்,,
' தேவாரமும் ஜோதிடமும் ', என்னும் தலைப்பில் நான் உரையாற்றிய உரையின் தொகுப்பு இது. கடைசி பகுதி.
ஏற்கனவே சொல்லப்பட்ட மூன்று
தேவாரங்களிலிருந்து, கிடைக்கும் ஜோதிட செய்திகளை தொகுத்தோமானால், ஒரு முழுமையான ஜோதிட
சாஸ்த்திர விதி ஒன்று கிடைக்கும். முதல் தேவாரப்படி
கெட்ட கிரகங்களின் ஆளுமை பெற்ற நாட்கள்..................ஞாயிறு, திங்கள், [ சந்திரன்
பாப கிரகமாக இருக்கும்போது மட்டும் ] செவ்வாய், புதன் [ புதன் கிரகம் பாப கிரகங்களுடன்
சேர்ந்திருக்கும் போது மட்டும் ] சனி, மற்றும் இந்த நாட்களில் ஏற்படும் ராகுகாலம்,
யமகண்டம் ஆகியவை. பிரயாணத்திற்கு ஆகாத நாட்களாக கொள்ள வேண்டும். இரண்டாம் தேவாரம், இந்த நாட்களில் பிரயாணத்திற்கு
ஆகாத நாட்களை சற்று துல்லியப்படுத்தி தருகிறது.
அதாவது மேற்கண்ட நாட்களோடு, திருவாதிரை, ஆயில்யம், மகம் விசாகம் கேட்டை ஆகிய
நக்ஷத்திரங்கள் இணையும் நாட்களை பிரயாணத்திற்கு ஆகாத நாட்களாக கொள்ள வேண்டும். மூன்றாவதாக சொல்லப்பட்ட ஆறாம் தேவாரம், இந்த நாட்களை
இன்னும் துல்லியப்படுத்துகிறது. அதாவது, மேற்கண்ட
நக்ஷத்திரங்கள் இணைந்த நாட்களில், பாலவம், கரசை, கௌலவம், நாகவம், பவம் ஆகிய கரணங்கள்
கொண்ட நாட்களாக அமைந்துவிட்டால், அவசியம் பிரயாணம் கொள்ளவே கூடாது என்ற ஒரு விதியை
தேவார வழிப்படி நாம் வகுத்துக்கொள்ளலாம்.
. அதிலும், குறைந்த ஆயுள் கொண்டவர், பயணம் மேற்கொள்ளும்
போது, மேற்கண்ட தினங்களில், கரசை, நாகவம் கரணமாக இருப்பின் மரணம் நிச்சய்ம் என்பதும்
தெரிந்துகொள்கிறோம்.
இப்படிப்பட்ட சிக்கலான
நாட்களில் பயணம் மேற்கொள்ளும் போது பஞ்சாக்ஷரத்தை துணையாக கொண்டால், மேற்கண்ட, கிரகங்கள்,
நக்ஷத்திரங்கள், கரணங்கள் ஒன்றும் செய்யாது.
எல்லாம் நல்லவைகளாக மாறிவிடும் என்று, தன் மேல் ஆணையிட்டு உறுதிபட கூறுகிறார்
ஸ்ரீதிருஞானசம்பந்தர்.
எனக்கும் பஞ்சாக்ஷரம் தெரியும்
என்பது போல் உச்சரித்தால் மட்டும் போதாது, இறையடியார்களாக ஆக வேண்டும் என்பதே இந்த
தேவாரத்தின் கருப்பொருளாகும். அடியாராக ஆவதற்கான
முதற்படியே நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பதாகும்.
இதன்வழி நடந்து நாமும் ஸ்ரீசிவபெருமானின் அருட்கடாக்ஷத்திற்கு ஆளாக வேண்டும்
என்பதும் என் வேண்டுகோள்.
இப்படிப்பட்ட தெய்வாம்சம்
பொருந்திய நாயன்மார்களின் அருள்மொழிகளை சொல்வதற்கு
ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி தந்த அருமை நண்பர் திரு Astro Senthil Kumar அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சொற்பொழிவில் தவறுகள் இருப்பின் அது என்னை சேரும். நல்ல கருத்துக்கள் இருப்பின் அவை என் குருனாதர்
திருவடிகளை சேரும். நல்ல தமிழ் பேச அருளாசி
வழங்கிய லண்டன் சிவாச்சாரியார் பெருமகனார் திரு Ramanaathan paramaeswara அவர்கள் திருவடிகளுக்கும்
என் நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களை தூவி காணிக்கையாக்குகிறேன். கிட்டதட்ட தற்போது 10, 000 பேர் காணவும், கேட்கவும்,
நல்லதொரு வாய்ப்பினை உருவாக்கி தந்த பெருந்துறை தாய் தொலைகாட்சி நிறுவனத்தாருக்கும்.,
நிகழ்ச்சி விளம்பரதாரர் குளோபல் நிறுவனத்தாருக்கும், இங்கே எதிரில் அமர்ந்து பொறுமையுடன்
கேட்டுக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கு என் வணக்கங்களையும் நன்றியையும் மீண்டும்
தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இந்த தொகுப்புக்கு ஆதரவு
தந்து தங்கள் கருத்துரையால் விமர்சித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
No comments:
Post a Comment