ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். நவரத்தினங்களை பற்றிய பதிவு இது. பகுதி. 1. இந்த
பதிவின் நோக்கம் ரத்தினங்களுக்கும் ஜோதிடத்திற்கும் இடையே உள்ள தொடர்பு மட்டுமே விவரிக்கப்பதாகும்.. எனவே வணிகம் சம்பந்தமான விபரங்கள் இதில் இடம் பெறவில்லை.
மனிதனுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு. மனித உடல் இந்த பிரபஞ்சத்திலுள்ள நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு எனும் ஐம்பூதங்களால்
ஆனது. நம் உடலில் நீர் உள்ளது, நிலத்திலுள்ள
தாதுப்பொருட்கள் நம் உடலில் உள்ளன. மூச்சுக்காற்றாக
காற்று இருக்கிறது. உடல் எனும் கூட்டில் உள்ள
இடைவெளியானது ஆகாயம். இந்த ஆகாயம் எனும் வெட்டவெளி இல்லையேல் உடலுக்கு உருவம் இருக்காது. உடலில் நிலவும் வெப்பமே நெருப்பின் அம்சமாகும். இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் மனிதன் பிணம். ஐம்பூதங்களாலான இந்த உடல் இயங்குவதற்கு உயிர் எனும்
சக்தியை இறைவன் தந்திருக்கிறான். இந்த இயக்கத்தை
கட்டுப்படுத்துவது, இந்த பிரபஞ்சத்திலுள்ள நவக்கிரங்களின் சக்தி எனப்படும் கிரககதிர்வீச்சு
அலைகளாகும்.
இந்த ஐம்பூதங்கள், மற்றும் நவக்கிரகங்களின் கதிர்
வீச்சுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் நமக்கு
வாழ்க்கையில் உடலுக்கும், உள்ளத்துக்கும் இன்பதுன்பங்கள்
விளைகின்றன. இந்த ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து,
அவற்றை சீர்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளை விவரிப்பதே ஜோதிடம் எனும் மாபெரும் ஞானக்கலையாகும். சீர்படுத்தும் வழிமுறைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று
நவரத்தினங்களை பயன்படுத்துதலாகும். இந்த நவரத்தினங்கள்,
மனித உடலைப்போல் ஐம்பூதங்களால் ஆனவை.. நவக்கிரங்களிலிருந்து
வரும் கதிர்வீச்சுகளை ஈர்த்து பெருக்கித்தரும் சக்தி படைத்தவை. எனவே நம் ஞானிகள் இவற்றை பற்றிய விபரங்களை நமக்கு
அறிவுருத்தியிருக்கிறார்கள்.. அவற்றை முறையாக
பின்பற்றுவதன் மூலம் நாம் பலவகைகளில் நலமும், நன்மையும் பெற முடிகிறது. இவை மெய்ஞான விஷயம் மட்டுமல்ல.. இந்த விஷயங்களை விஞ்ஞானமும் ஒப்புகொண்டுள்ளது. இனி மனிதஉடல், வாழ்க்கை, ஜோதிடம், நவரத்தினங்கள்
ஆகியவற்றின் இடையே ஒன்றுகொன்று கொண்டுள்ள தொடர்புகள் பற்றி பார்ப்போம்.
ஐம்பூதங்களுக்குரிய ரத்தினங்களாவன:...............1. நீருக்குரியது வைரம். 2. நிலத்துக்குரியது..........மரகதம். 3. காற்றுக்குரியது..................இந்திரனீலம். [ நீலம் என்ற ரத்தின வகைகளில் ஒன்று.., இந்திரனீலம். 4. ஆகாயத்துக்குரியது......................ஐவரிமுத்து. ஐவரி என்பது முத்தின் நிறத்தை குறிக்கும்.. 5. நெருப்புக்குரியது...................பத்மராகம்
எனப்படும் மாணிக்கம்.
முக்கியகுறிப்பு:.............முதன்மையான
ரத்தினவகைகள் ஒன்பது. இவை நவக்கிரகங்களுக்குரியவை. இந்த ஒன்பது ரத்தினங்களை சேர்ந்த மற்ற வகைகள்
13. மொத்தம் 22. இந்த 22 வகை ரத்தினங்களையும் ஸ்ரீவராகிமிகிரர் தன்னுடைய
பிருகத் சம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளார்..
நவக்கிரகங்களுக்குரிய முதன்மையான ஒன்பது வகை ரத்தினங்களாவன.......................1. சூரியனுக்குரிய மாணிக்கம். 2. சந்திரனுக்குரிய
முத்து. 3. செவ்வாய்க்குரிய பவளம். 4. புதனுக்குரிய
மரகதம்.. 5. குருவுக்குரிய புஷ்பராகம். 6. சுக்கிரனுக்குரிய
வைரம். 7. சனிக்குரிய நீலம். 8. ராகுவுக்குரிய
கோமேதகம், 9. கேதுவுக்குரிய வைடூரியம் ஆகியவை. இனி இந்த நவரத்தினங்களுக்குரிய பிரிவுகளை பார்க்கலாம்.
மாணிக்கம் என்பது பத்மராகம்,
ருதிரம் என்று 2 வகையாக உள்ளது. மரகதத்தில்
கற்கேதாரம் என்று இன்னொரு வகை உள்ளது. புஷ்பராகம்
மேலும் பிரம்மமணி, ஜோதிரசம், சாஸ்யகம் என்ற மூன்று வகையுடன் சேர்ந்து நான்காக உள்ளது. நீலத்தில் இந்திரனீலம் என்றொரு வகை உண்டு. கோமேதகத்தில் சங்கம் என்று ஒரு வகை உண்டு. வைடூரியத்தில், ராஜமணி, ஸ்படிகம், விமலகம், புலகம்
சசிகாந்தம், சௌகந்திகம் என்று மேலும் ஆறு வகைகள் உள்ளன. இவைகளோடு, முத்து, பவளம், வைரம் ஆகியன சேர்த்து
மொத்தம் இருபத்திரண்டு வகைகளாகும். இவையனைத்தும்
ஜோதிட சாஸ்த்திரத்தோடு தொடர்புடையவை என ஸ்ரீவராகிமிகிரர் கூறுகிறார்.. [ [ [ தொடரும்.................... ] ] ]
No comments:
Post a Comment