ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். " கிரகங்களின் இரட்டை வேஷம் ", பற்றிய பதிவு இது. [ பாரம்பரிய முறை ]. சூரிய சந்திரர்களை தவிர மற்ற எல்லா கிரகங்களுக்கும்
தலா இரண்டு வீடுகள் உள்ளன. ராகு கேதுவை விட்டு விடுங்கள். கிரகங்களுக்கு, இவ்விரண்டு வீடுகளில் ஒரே நேரத்தில் ஒன்று சுப ஸ்தானமாகவும், இன்னொன்று அசுப ஸ்தானமாகவும் அமைந்து விடுவதுண்டு. உதாரணத்திற்கு,, கடக லக்னத்துக்கு குருவுக்கு இரண்டு
வீடுகளில் ஒன்றான தனுசு சத்ரு ஸ்தானம் என்ற அசுபமும், இன்னொரு வீடான மீனம் பாக்ய ஸ்தானம்
என்ற சுபகாவும் அமையும். இதேபோல் சிம்ம லக்னத்துக்கு
தனுசு, பூர்வபுண்ணிய ஸ்தானம் என்ற சுபமாகவும், மீனம் அஷ்டமம் என்ற அசுபமாகவும் அமைந்து
விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குரு அந்தந்த
லக்னங்களுக்கு என்னவாக செயல்படுவார்? இதே போன்ற
நிலை இரண்டு வீடுகள் கொண்ட மற்ற கிரகங்களுக்கும் ஏற்படுவதுண்டு. அப்போது அவைகள் என்ன ஸ்தானாதிபதியாக செயல்படும்?
குருவுக்கு மீனத்தை விட தனுசில் பலம் அதிகம். மீனம் ஆட்சி வீடு. அது போல் தனுசு ஆட்சி வீடு என்றாலும், மூலத்திரிகோண
வீடு என்ற இன்னொரு சிறப்பும் சேர்ந்துவிடுகிறது.
எனவே அவர் கடக லக்னத்துக்கு சத்ருஸ்தானாதிபத்தியத்துக்கு முதலிடமும், சிம்ம
லக்னத்துக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபத்தியத்துக்கு முதலிடமும் தந்து செயல்படுவார். அது போல் தசா புக்தி காலங்களில் குரு அசுப ஸ்தானாதிபளோடு
இணையும் போது அசுப ஸ்தானாதிபதியாகவும், சுப ஸ்தானாதிபதிகளோடு இணையும் போது சுப ல்தானாதிபதியாகவும்
செயல் படுவார்.
அது போல், ஒரு கிரகம் நல்லவராகவும், கெட்டவராகவும் வரும் போது
அந்த கிரகம் எந்த மாதிரி குணாதிசயத்துடன் செயல்படும்? உதாரண்த்திற்கு, ரிஷபலக்னத்திற்கு சனி பாக்யாதிபதியாகவும்ம்,
பாதகாதிபதியாகவும் செயல்பட வேண்டும் என்பது ஜோதிட விதி. சனி தசை நடக்கும்போது புதன் புக்தியில் சனி பாக்யாதிபதியாக
செயல்படுவார். காரணம் புதன் பூர்வ புண்ணியம்,
துவிதியம் என்ற இரண்டு சுப ஸ்தானங்களுக்கு அதிபதி. இப்படி சுப ஸ்தானாதிபதிகளுடன் இணையும் போது சனி
பாதகாதிபதி. இக்காலத்தில் குடும்பம் தழைத்து
செழித்தோங்கும். அத்துடன் நெடுனாட்களாக எதிர்பார்த்து
காத்து இருக்கும் புத்திர பாக்கியமும் நிச்சயமாக கிடைக்கும்.
இதுவே. சனி தன்னுடைய தசைக்காலத்தில். புக்தினாதனாகிய
சந்திரனுடன் இணையும் போது பாதகாதிபதியாக செயல்படுவார். காரணம் சந்திரன் திரிதிய ஸ்தானம் எனப்படும் அசுப
ஸ்தானத்துக்கு அதிபதி. இப்படி அசுபஸ்தான அதிபதியுடன்
சேரும் சனி கெடுதலை செய்வார். இக்காலகட்டத்தில்
ஜாதகர், மனோ தைரியம் மிகமிக பலஹீனமடைந்து புலம்பும் நிலைக்கு ஆளாஅகிவிடுவார். கிட்டத்தட்ட சித்தபிரமை பிடிக்கும் நிலை எனலாம். ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கும்.
இப்படி இரட்டை வேஷம் போல்டும் கிரகாங்கள் எல்லா
ஸ்திர லக்னங்களுக்கும் இவ்வாறாகவே செயல் படுகிறன.
சிம்ம லக்னத்துக்கு செவ்வாயும், விருச்சிக லக்னத்துக்கு சந்திரனும், கும்ப லக்னத்துக்கு
சுக்கிரனும் இப்படி இரட்டை வேஷம் போட தவறுவதில்ல.
நன்றி.
Very good sir, keep posting
ReplyDelete