ஓம் நமசிவாய.
அனைவருக்கும் வணக்கம். தன் பிள்ளைகளை
மேற்கல்வி பயில வைக்க திட்டமிடும் பெற்றோர்களுக்கான பதிவு இது. [ பாரம்பரிய முறை ]. மேல் நிலை கல்வி பயில தயாராக இருக்கும் பிள்ளைகளின்
பெற்றோர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளை ஜோதிடரீதியாக கீழே தொகுத்திருக்க்கிறேன்.
1. தன் பிள்ளை
தேர்வில் வெற்றி பெற்றபின் எந்த வகை மேற்கல்வியில் ஈடுபடுத்தலாம்?
2. தான்
பயில வைக்க விரும்பும் கல்வியை பிள்ளை ஏற்றுக்கொள்ளுமா? அந்த கல்வி வெற்றிகரமாக அமையுமா?
3. அல்லது
பிள்ளை விரும்பும் கல்வியை பயில வைத்தால் வெற்றி கிடைக்குமா?
4. அல்லது
வேறு எந்த வகை கல்வி பொருத்தமாக இருக்கும்?
5. பயில
வைக்கும் கல்வி வாழ்க்கைக்கு உதவுமா?
6. கல்விக்கடன்
எளிதாக கிடைக்குமா?
7. பிற்காலத்தில்
கடன் அடைய வழி என்ன? வேலை கிடைக்குமா?
8. மகளுக்கு
திருமணமா? அல்லது கல்வியா? நிதியை எதற்கு ஒதுக்குவது?
9. தொழிலுக்கேற்ற
கல்வியா? அல்ல்து கல்விக்கேற்ற தொழிலா? எது அமையும்?
10. கல்லூரி எவ்வாறு அமையும்? உள்ளூரா? வெளியூரா?
11. உறவினர் வீட்டில் தங்க வைப்பதா? அல்லது விடுதியிலா?
12. இவ்வளவு சிக்கல் ஏன்? வீட்டிலிருந்தே படிக்கும்
வகையில் தொலைதூர கல்வி கிடைக்குமா?
இவ்வளவு குழப்பங்களிலிருந்து தெளிவும், நிம்மதியும்
பெற எல்லோரும் இறைவன் சன்னதியை நாடுவர். பொதுவாக
கல்விகென்று சில சிறப்பு வழிபாடுகளும், சன்னதிகளும் உள்ளன. அங்கு சென்று வழிபடும் போது நமக்கு தெளிவு பிறந்து
விடை கிடைக்கிறது.
1. ஸ்ரீ
வித்யா கணபதி. என்.ஐ.டி. திருச்சி.
2. ஸ்ரீ
சரஸ்வதி. கூத்தனூர். மயிலாடுதுறை
3. ஸ்ரீ
ஹயக்ரீவர். திருவந்திபுரம். கடலூர்.
ஆகிய சன்னதிகளுக்கு சென்று வழிபட்டு வருவது நனமையை
தரும். மேற்கண்ட சன்னதிகள் சிறப்புத்தன்மை வாய்ந்தவை. இது போன்ற சன்னதிகள் எங்கிருந்தாலும் வணங்கலாம். நமக்கு நாமே மருத்துவம் செய்து கொள்வதை விட ஒரு
மருத்துவரை அணுகி நிவாரணம் பெறுவதை போல, ஒரு நல்ல , அனுபவமுள்ள ஜோதிடரை அணுகி, சற்று
நுணுக்கமாக ஜாதக ரீதியாக கல்வி நிலை பற்றி ஆராய்ந்து, அதற்கேற்ற சிறப்பு வழிபாடுகளையும்,
திட்டமிடுதலையும் வைத்துக்கொண்டால், நமது கல்வித்தேர்வு சிறப்பாக அமையும். ஜோதிடரை சந்திக்கும் போது தான் மட்டும் தனியாக சென்று
சந்திக்காமல், சம்பந்தப்பட்ட பிள்ளையையும் அழைத்து செல்வது மிகவும் அவசியமாகும். அப்போது தான் கலந்தாய்வு சிறப்பாக அமையும்.
நம் முன்னோர்கள், ஒவ்வொவொரு கிரகத்துக்கும் ஏகப்பட்ட
கல்விப்பிரிவுகளை காரகத்துவமாக தந்துள்ளனர்.
எனவே ஒரு ஜாதகர் இன்ன பிரிவு கல்வியைத்தான் பயில்வார் என்று எந்த ஜோதிடராலும்
உறுதியாக சொல்ல இயலாது. பிள்ளை விரும்பும்
கல்வி ஜாதகத்தோடு ஒத்துப்போகிறதா? என பார்க்கலாம். அல்லது ஜாதகப்படி அமையக்கூடிய கல்வியை அறிவுருத்தலாம். அதில் தடைகள் ஏற்படுமாயின் அதற்குரிய நிவாரணங்களை
சொல்லலாம். கல்வி பயிலும் போது இடையே தற்காலிக
தடைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
1. உடன்
பழகுபவர்களால் ஏற்படும் பகைமையால் தடை.
2. திடீர்
நோய்வாய்ப்படுதலால் ஏற்படும் தடை.
3. பொறுப்பற்ற
காதலாலேற்படும் தடை
4. தூக்கமின்மை,
நினைவாற்றல் குறைவு ஆகியவற்றால் ஏற்படும் தடை.
5. அக்கரையின்மை
மற்று சோம்பேறித்தனத்தால் ஏற்படும் தடை.
6. திடீர்
மாற்றத்தால் ஏற்படும் தீய பழக்கவழக்கங்களால் ஏற்படும் தடை.
இத்தடைகளை நீக்கிக்கொள்ள ஜோதிடரீதியாக, தடைகளை
ஏற்படுத்தும் கிரகங்களுக்குரிய பரிகார வழிபாடுகளோடு நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை
கையாண்டு, நல்ல முறையில் திட்டமிட்டு, கல்வியில் வாழ்க்கை சிறப்படையும் வகையிலான இலக்கை
எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்வோமாக.
No comments:
Post a Comment