Monday, 10 February 2014

தானாகவே திருமண பொருத்தம் பார்த்துக்கொள்பவர்களுக்கான் பதிவு



தானாகவே திருமண பொருத்தம் பார்த்துக்கொள்பவர்களுக்கான் பதிவு இது.

தற்காலத்தில் விவாஹ அட்டவணை ஒன்றை வைத்துக்கொண்டு 10ல் 8 .கே. என்று முடித்துவிடுகிறனர். மறுமணம், விவாகரத்து என்பதே அறியாத நாட்டில் அவைகள் பெருக இந்த தவறான அணுகுமுறையே காரணம். முறைபடி, முழுமையாக பொருத்தம் பார்க்க ஒரு திறமையான, அனுபவசாலியான ஜோதிடரால் மட்டுமே முடியும். இதிலும் மலிவான, போலியான நபர்களும் உள்ளார்கள். அவர்களை கண்டறிந்து ஒதுக்கவேண்டியது நம் கடமை.

பார்க்க வேண்டிய முறைகள்:

1. தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய ஐந்து பொருத்தங்களும் அவசியம் இருக்கவேண்டும். இதில் ஒன்று குறைந்தாலும், தள்ளுபடி. இவைகளுக்கு மேல் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் கூட விதி விலக்குகள் ஆராயப்படவேண்டும்.

2. தோஷ நிர்ணயம்.

செவ்வாய் தோஷம்.
சர்ப்ப தோஷம்
புனர்பூ தோஷம்
மாங்கல்ய தோஷம்
ஷஷ்டாஷ்டக தோஷம்
துவி துவாதச தோஷம்
ஆகியவை சரி பார்க்கபடவேண்டும்.

3. ஜாதக கட்டங்கள் பற்றி:

குடும்ப ஸ்தானம்
புத்ர பாக்ய ஸ்தானம்
களத்திர ஸ்தானம்
ஆயுள் ஸ்தானம்
ஆகியவைகளையும் ஆராய வேண்டும்.

4. இவற்றை தாண்டி தேர்வாகும் ஜாதகங்கள் சரியாக எழுதப்பட்டுள்ளதா? என பார்க்க வேண்டும். [ இதில் லக்ன, ராசி, நக்ஷத்திர சந்திகளும் அடங்கும் ] சரியாக இல்லாத ஜாதகங்களை ஒதுக்கவேண்டும்.

5. இதன்பின் விவாஹ பிராப்தி காலம் வந்து விட்டதா? என பார்க்க வேண்டும். இதை தசா சந்தி என்பர். அதே நேரம் கோச்சரமும் அவசியம்.

இவ்வளவு விஷயங்கள் பொருத்தம் பார்ப்பதில் உள்ளது. எனவே ஒரு நல்ல, திறமையான, அனுபவமுள்ள ஜோதிடரை அணுகி, தகுந்த சன்மானம் அளித்து [ பொருத்தம் தானே! அதற்கு ஏன் இவ்வளவு? என்று நினைப்பவர்கள் உள்ளனர் ] சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்துகொண்டு, வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

4 comments:

  1. எதுக்கு இந்த மாதிரி அரைகுறை ஜோதிட வேலை ? பேசாம போட்டோ எடுக்க போகலாம். Dr.kanakaraj .cbe-31

    ReplyDelete
  2. அருமையாக சொன்னீர்கள்.என் வாழ்க்கை சிறந்த உதாரணம்.ஒரு அய்யங்கார் ஒய்வு பெற்ற ஆசிரியர் எனக்கு மச்சம் எந்த இடத்தில இருக்கிறது என்று சரியாக சொன்னவர்,அவரிடம் மட்டும் பொருத்தம் பார்த்து செய்த திருமணம் பல இன்னல்களை சந்தித்து நான் தற்கொலைக்கு முயன்று என் பிள்ளைகள் என்னை விட்டு,என் தாய்,தந்தையை விட்டு பிரிந்து நச்சுபாம்பின் வளர்ப்பில் வளர்கின்றனர்.என் தந்தை மிக கொடூரமாக நொந்து,மனம் வெதும்பி என் மனைவியின் துரோகத்தால் தன் இன்னுயிரை இழந்தார்.

    ReplyDelete
  3. மேலும் இந்த பொருத்தம் பார்ப்பது இந்து மதத்தில் கட்டாயம் ஆக்கப்படவேண்டும்.சரி இல்லாத திருமணம் செல்லாத திருமணம் என்று கடந்த 2௦௦5 வரை நடைபெற்ற திருமணங்களுக்கும்,இனி நடைபெறும் திருமணங்களுக்கு கட்டாயம் பொருத்தம் பார்க்கப்படவேண்டும் என்றும் சட்டம் இயற்றி விவாகரத்து வழக்குகளில் சேர்க்கப்படவேண்டும்.குடும்ப நல நீதிமன்றங்கள் இதை அவசியம் பார்க்கவேண்டும்.ஆண் தேவ கணம்,பெண் ராட்சச கணம்,ஆண் ஆடு,பெண் புலி,பெண்ணிற்கு நாக தோசம்,செவ்வாய் தோசம்,மாங்கல்ய தோசம்,குடும்ப ஸ்தானத்தில் கேது என்று உள்ள பெண்ணை எனக்கு தந்திரமாக திருமணம் செய்துவைத்து இப்போ நான் கம்மனாட்டியாக சுமார் 7வருடங்கள் வாழ்கிறேன்.சுய இன்பம்தான் வாழ்க்கை என்று ஆகிவிடும் நிலைக்கு சட்டமும்,சமூகமும் தள்ளுகிறது.என்ன கொடுமையான வாழ்க்கை.அனுபவித்தவனுக்குதான் தெரியும் பொருந்தாத பெண் எவ்வளவு கொடியவள் என்று.கூற்றுவன் நரகத்தில் செய்யும் செயலை இந்த பூமியில் மனைவியானவள் ஆட்டி படைத்து கொலை செய்கிறாள்.மேலாக நரகமே தேவலை என்பது போன்ற நிலை.இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பெரிதும் துணை நிற்கின்றன.ஆண்களை மிக மோசமாக நடத்தும் நீதித்துறைக்கு ஜோதிடர்கள் பாடம் புகட்டவேண்டும்.

    ReplyDelete
  4. வந்தபின் காப்பதை விட வரும் முன் காப்பது நல்லது.இன்று corporate மருத்துவர்கள்,வக்கீல்கள் மிகமோசமான சூழலை ஏற்படுத்திக்கொண்டு இருகின்றனர்.அதிலும் விவாகரத்து வழக்கு பணம் கொழிக்கும் தொழிலாக ஆகிவிட்டது.அய்யா போன்றவர்கள் ஜோதிடத்தை கட்டாயம் திருமணத்திற்கு மேற்கூறிய பொருத்தம் பார்பதற்கு சட்டம் ஆக்கப்படவேண்டும் என்று குரல் கொடுக்கவேண்டும்.இன்று தெருவுக்கு,தெரு போனை காதில்வைத்துகொண்டு கள்ள உறவு வைத்துகொண்டு,கணவனை மிரட்டி பணம் பறித்து கொண்டு,பிள்ளைகளை தறுதலையாக வளர்க்கும் அருவருப்பை கண்டிப்பாக மாற்றியே தீரவேண்டும்.பிள்ளைகள் தகப்பன் இல்லாமல் வளரவே கூடாது.சட்டத்தை விட ஜோதிடம் மேலானது என்ற நிலை அடையவேண்டும்.வக்கீல்களிடம் சிக்கி,சின்னாபின்னமாகி வாழ்வது வாழ்க்கை அல்ல.வக்கீலுக்கு fees என்ன மானம் தானே என்ற நிலையை எல்லோரும் நன்கு உணர வேண்டும்.

    ReplyDelete