ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். ஜோதிட மருத்துவம் பற்றி வாசகர்களுக்கான பதிவு இது.
" ஜோதிடம் தெரியாத மருத்துவர் ஒரு மருத்துவரே
அல்ல," என்று ஆங்கில மருத்துவ உலகின் தந்தை என்று போற்றப்படும், மருத்துவமேதை
" ஹிப்போகிரேட்ஸ்" கூறியிருப்பதை முதலில் அனைவருக்கும் நினைவு படுத்துகிறேன். இதை ஆங்கில மருத்துவர்கள் நடைமுறை படுத்துகிறார்களோ
இல்லையோ, நம் சித்த மருத்துவர்களில் சிலர் நடைமுறை படுத்துகிறனர். அதாவது, வரும் நோயாளியிடம் முதலில் ஜாதகம் கேட்டு
வாங்கி................
1. நோய் எப்போது வந்தது?.................2.
எப்போது போகும்?.....................3. எந்த கிரகத்தால் வந்தது? ஏனென்றால் அதற்கான பரிகார வழிபாடு சொல்ல.....................மேலும்
எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிய.................4. எவ்வகையான மருத்துவம்
மேற்கொள்ளலாம்?
................என்றெல்லாம் ஆரய்ந்துவிட்டு
பின்பு நோயாளியை பரிசோதிப்பர். இதற்கு உதாரணமாக
விளங்குபவர். பரம்பரை சித்த வைத்திய மேதை. திரு.
சக்தி சுப்பிரமணியம் அவர்கள். ஆக மேற்கூறிய
செய்திகளை கொண்டு ஜோதிடத்துக்கும் மருத்துவம் மற்றும் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு
உண்டு என்று புரிந்துகொள்ளலாம்.
மருத்துவ வழி முறைகள் பல உள்ளன. சில நோய்கள் எந்த வழிமுறைக்கும் அடங்காமல் பாடாய்படுத்தும். உதாரணத்துக்கு " செய்வினை தோஷத்தால் உருவாகும்
நோய்கள்,". பாதகாதிபதியும், ரோகாதிபதியும்
ஒன்று சேர்ந்து, அவர்கள் தசாபுக்தி நடைமுறைக்கு வரும்போது செய்வினை தோஷ நோய் உருவாகிறது. உதாரணத்திற்கு குருவும் சுக்கிரனும் அவ்வாறு அமைந்து,
அவர்கள் தசாபுக்தி நடைமுறைக்கு வந்தால், மிகக்கடுமையாக ஜீரணமண்டல உறுப்புகள் பாதிப்படையும். அத்துடன் சிறுனீரக பாதிப்பும் இருக்கும். இதன் காரணமாக வாந்தி, மலப்போக்கு ஆகியன அளவுக்கு
அதிகமாகி, பாதிக்கப்பட்டவர் கடோத்கஜனாக இருந்தாலும் காராசேவ் போல் ஆகிவிடுவார். லட்சக்கணக்கில் செலவு செய்து பலவகையான உச்சகட்ட
மருத்துவம் பார்த்தாலும் குணமாகாது. குரு,
சுக்கிரன் தசாபுக்திக்காலமான, 2 வருஷம் 8 மாதங்கள் வரை இது இருந்தே தீரும். இப்படிப்பட்ட சூழ்னிலையில் மென்மேலும் மருத்துவசெலவை
செய்துகொண்டே வருவதை விட ஜோதிட துணை கொண்டு நோய் வந்த காரணமறிந்து, தகுந்த பரிகாரவழிபாடு
செய்து தோஷ நிவர்த்தி பெறுவதோடு, நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
ஆகவே நோயுற்ற நேரத்தில் மருத்துவரை அணுகுங்கள். அதோடு ஜோதிடத்தையும் அணுகுங்கள். ஜோதிட ரீதியாக வழிபாடு செய்வதன் மூலம்.................1.
நல்ல மருத்துவர் கிடைப்பார்....................2. மருத்துவத்தை உடல் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளும்..................3. சிக்கலான சிகிச்சையும் [ அறுவை ] எளிமையாக முடியும். அல்லது அவ்வித சிகிச்சை இல்லாமலே குணமாகும்..................4. மருத்துவத்தால் கண்டுபிடிக்க இயலாத தோஷ நோயகள் குணமாக
வழி கிடைக்கும். இவையெல்லாம் என் அனுபவத்தில்
சந்தித்த நிகழ்வுகள். எனவே மருத்துவத்தோடு,
ஜோதிடத்தையும் இணைத்துக்கொண்டு இறைவன் அருளால், வழிகாட்டிய சித்தர்கள் ஆசியுடன், நோய்
நீங்கி பூரண நலம் பெறுவோம். நன்றி.