ஓம் படைவீட்டம்மா துணை. அனைவருக்கும் வணக்கம். " இப்படியும் ஜாதகமா? ", :
....... தொடர் பதிவு எண் 2. பெற்ற தாயால் சித்ரவதை அனுபவித்துக்கொண்டு இருக்கும்
பிள்ளைகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். : ......... பாரம்பரிய முறை. இந்த பதிவோடு ஒரு ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண் ஜாதகருக்கு இப்போது 58 ஆவது வயது நடப்பு. அப்படியானால், இவரது தாயின் வயதை யூகத்தால் அறிந்து
கொள்ளலாம். எப்படியும் ஒரு 82 இருக்கலாம். இனி ஜாதகரோடு ஜாதகத்தை வைத்துக்கொண்டு கலந்துரையாடியபோது
கிடைத்த மற்றும் திரட்டப்பட்ட தகவல்களை முதலில் பார்ப்போம்;. :
.....................
ஜாதகருக்கு குரு திசையில்
சுக்கிர புக்தி நடக்கும்போது,, இவருடைய தாயாரால், இவருக்கு கடுமையான " செய்வினை
தோஷம் ", உருவாக்கப்பட்டுள்ளது. குரு
திசையில் சுக்கிரபுக்திக்காலம் . : ..... கடந்த
2005 ல் தொடங்கி 2 வருஷம் 8 மாத காலம். இந்த
செய்வினை அதோடு முடிந்து விடவில்லை. இன்றும்
தொடர்கிறது. : ................ ஜாதகர் தன்
குடும்பத்தோடு இணைந்து நிம்மதியாக இருக்கக்கூடாது, நிதிப்புழக்கமின்றி எப்போதும் பஞ்சத்தில்
வாடவேண்டும். கண் பார்வை மங்கிப்போகவேண்டும். பேசும் பேச்சால், பாதகமே விளைய வேண்டும். செய்யும் தொழில் அடியோடு ஒழிய வேண்டும், ஆகிய இத்தனை
தீய நோக்கங்களோடு செய்வினை புரியப்பட்டுள்ளது.
இத்தனையும் இன்றும் கூட ஜாதகர் அனுபவித்து வருகிறார். தொடர்ந்து 12 வருஷ காலம் தோஷம் பற்றி தொடருமாறு,
ஒரு செப்புத்தகட்டில் மந்திரிக்கப்பட்டு, இவரது வீட்டில் புதைக்கப்பட்டுள்ளது. அந்த வீடு தந்தைக்குரிய பூர்வீக சொத்து. அதில் ஜாதகர் வாழ்ந்து வருகிறார். ஜோதிடம், மந்திர தந்திரம், தெய்வம் ஆகியவற்றில்
ஜாதகருக்கு நம்பிக்கை இல்லாததால், காலம் கடத்தி வந்திருக்கிறார். சிலரது வற்புறுத்தலால், பிற்காலத்தில் இந்த தோஷத்திற்கு,
மாந்திரிக பரிகாரம் செய்து, செய்து அலுத்துப்போய், தற்போது, தானே மாந்திரிகஜோதிடத்தில்
இறங்கிவிட்டார். இத்தனை ஆண்டுகாலமாக, நடப்பதெல்லாம்
நண்பர்கள் செய்த துரோகம் என்று நம்பிக்கொண்டிருந்த இவருக்கு, சமீபத்தில் தாயாரின் துரோகம்
என்பது தெரிய வந்திருக்கிறது.
இனி மேற்கண்ட தகவல்களை
ஜாதக ரீதியாக அணுகளாம். : .................. கடக லக்னத்துக்கு பாதகாதிபதி சுக்கிரன். சத்ருஸ்தானாதிபதி குரு. இவ்விருவரும் இணைந்து திசை புக்தி நடத்தும் போது,
செய்வினை தோஷம் பீடிக்கும். இவ்விருவரின் திசைபுக்திக்காலமான
2 வருஷம் 8 மாதங்கள் வரை தோஷம் செயல்பட வேண்டும்.
பின் தானாக விட்டுவிடும். கோசரத்தில்
கேதுவின் நிலையை பொறுத்து, தோஷம் ஓரிரு வருஷங்கள் நீடிக்க வாய்ப்புண்டு. பாதகாதிபதியை சனி பார்த்தால் தோஷம் நீண்டகாலம் நீடிக்கும். அத்துடன் செவ்வாய் பார்த்தால் நிச்சயம் 12 ஆண்டுகாலம்
தோஷம் விடாமல் தொடரும். இந்த ஜாதகத்தில் செவ்வாய்,
சனி இருவர் பார்வையும், பாதகாதிபதி மீது பதிகிறது. பாதகாதிபதியை பார்க்கும் சனிக்கு கேந்திரத்தில்
மாந்தி இருப்பின், செய்வினை செப்புத்தகட்டின் மூலம்,, வீட்டில் புதைக்கப்பட்டு தோஷம்
செயல்படுத்தப்படும். மேற்கண்ட ஜாதகத்தில் ரிஷபத்தில்
மாந்தி உள்ளது. இந்த ஜாதகத்தில் குறிக்கப்படவில்லை. செய்வினை எவ்வாறெல்லாம் பாதிக்க வேண்டும் என்று
செய்யப்பட்டது? என்பதை பாதகாதிபதியும், யாரால் செய்யப்பட்டது? என்பதை சத்ருஸ்தானாதிபதியும்
காட்டிக்கொடுத்துவிடுவர். பாதகாதிபதி இருப்பது,
2 ஆமிடம். இது குடும்பம், நிதி, வாக்கு, கண்
ஆகியவற்றை காரகத்துவமாக கொண்டது. எனவே ஜாதகருக்கு
இவைகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. பாதகாதிபதி
கேது சாரம் என்பதால், கேதுவின் இருப்பிடமான 10 ஆமிடம் எனப்படும் தொழிலையும் சிதைத்து
விட்டது. சத்ரு ஸ்தானாதிபதி இருப்பிடம்
4. இது தாயையும், நண்பர்களையும் காரகத்துவமாக
கொண்டது. எனவே, ஜாதகர் இயல்பாகவே நண்பர்கள்
மீது சந்தேகப்பட்டு, அவர்களையும் இதன் காரணமாக பகைத்துக்கொண்டிருக்கிறார். செய்வினை முடியும் காலத்தை நெருங்குகின்ற இந்த நேரத்தில்,
தோஷம் தாயாரால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. தாயாரே வாக்குமூலம் தந்திருப்பதாக கேள்வி. குரு ராகுவின் சாரம். ராகுவும் 4 ல் இருப்பு. எனவே சந்தேகமில்லாமல் தாயார்தான் விரோதி என்று ஊர்ஜிதமாகிறது. பாக்கிய ஸ்தானம் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு,
ஜோதிடம், மந்திர தந்திரம், தெய்வம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருக்காது. காலம் செல்ல செல்ல இவற்றை நம்ப தொடங்கியிருக்கிறார். கேது 10 ல் இருந்தால் அவர்களுக்கு மாந்திரிகம்
எளிதாக வந்துவிடும். எனவே இப்போது இவர் மாந்திரிக
ஜோதிடத்தில் இறங்கியிருக்கிறார். விதவைக்கிழவிகளை
கண்டாலே முகம் சிவந்து மூர்க்கனாகி விடுகிறார்.
சத்ருஸ்தானாதிபதி குரு, 4 ல் ராகு சாரத்தில் இருக்க, ராகுவும் அதே 4 ல் இருப்பதால்,
நண்பர்களை பகைத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி. 4 ஆம் அதிபதி, சுக்கிரன் பாதகாதிபதியாக
செயல்பட்டதால் அதுவும் நடந்திருக்கிறது.
தனக்கு ஏற்படும் துன்ப,
துயரங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா? என்ற ஏக்கத்துடனே, ஒவ்வொரு ஜாதகரும் ஜோதிடர்களை
நாடி வருகிறனர். துன்பங்கள், துயரங்கள் ஏற்பட
காரணம் என்ன? என்று ஜோதிடர் கண்டுபிடிப்பதோடு, அது தீரும் தீர்வையும் தருவது ஜோதிடரின்
கடமையாகும். எனக்கு தெரிந்த தீர்வை ஜாதகருக்கு
கொடுத்திருக்கிறேன். அதை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன். நண்பர்களே!
எனக்கு ஜோதிடம் நன்றாக தெரிகிறது என்பதை நிரூபிப்பதற்காகவோ, அல்லது ஜாதகத்தின்
மூலம் எல்லாம் கண்டுபிடித்துவிடலாம் என்பதற்காகவோ இந்த பதிவை பதிவிடவில்லை. குரூரத்தாய் ஒருத்தியின் செயல்பாடு என்னென்ன விளைவுகளை
தரும்? என்பதை வெளியுலத்திற்கு சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.
உள்ளே உயிர் வளர்த்து
உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளியெடுக்கும் போதெல்லாம்
அன்பையே சேர்த்தெடுத்து,
தொல்லை தனக்கென்றும்
சுகமெல்லாம் உனக்கென்றும்
சொல்லாமல் சொல்லிவிடும்
தேவதையின் கோவிலது.
பண்பு தெரியாத மிருகம்
பிறந்தாலும்
பால் தரும் கருணையது
பிறர் பசித்த முகம் பார்த்து
பதறும் நிலை பார்த்து
பழம் தரும் சோலையது
இருக்கும் பிடி சோறு,
தனக்கென எண்ணாமல்
கொடுக்கின்ற கைகள் அது
தினம் துடிக்கும் இளங்கன்றை
தோளில் இடம் தந்து
அணைக்கின்ற தெய்வமது.
அது நேர்மை, அது வாய்மை
அது தூய்மை, அதன் பேர்
தாய்மை.. : .................. கண்ணதாசன் வரிகளோடு,
ஜாதகரையும் நினைத்து பார்த்தேன். கண்ணீர் கணிணித்
திரையை மறைக்கிறது. மீண்டும் சந்திப்போம். நன்றி.
வணக்கம்.
.......................... தொடரும்
........................