M
ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். பெயர் சூட்டும் பெற்றோர்க்கான பதிவு இது. பாகம்
/ 2.. பாகம் 1 தொடர்ச்சி.............பெயர்
சூட்டுவதில் ந்யுமராலஜி எப்படி ஆதிக்கம் பெற்ற்தோ! அது போல் தற்போது ப்ரோனாலஜி மெதுவாக
ஆதிக்கம் பெற்று வருகிறது. ப்ரொனாலஜி என்றால்
தமிழில் ' ஒலி உச்சரிப்பு இயல் ', என்று பொருளாகும். ஒரு மொழியில் உள்ள சொல்லை சிதைக்காமல் உச்சரிப்பதும்,
அந்த சொல்லின் பொருள் மாறாமல் உச்சரிப்பதுமே ப்ரொனாலஜி என்னும் ஒலி உச்சரிப்பு இயல்
ஆகும். அதாவது, பஞ்சாக்ஷரம் என்ற சொல்லை பஞ்சு
என்று சுருக்கினால் அது முழுமையாக இல்லாமல் சிதைந்து விடுகிறது. இது ப்ரொனாலஜிபடி தவறாகும். அதுபோல் பஞ்சாச்சரம் என்பது தவறாகும். மன்னார்சாமி என்பதை மண்ணார்சாமி என்று உச்சரித்தாலும்
தவறாகும். மன்னார்சாமி என்பது திருமாலில் பெயராகும். ஆனால் மண்ணார்சாமி என்று உச்சரிக்கும்போது, ' மண்
' என்ற பொருள்படும்படி உச்சரிப்பதால் பொருள் மாறிவிடுகிறது. அடிக்க மன்னார்சாமி என்பதை மண்ணார்சாமி என்பதால்
மண்ணார்சாமி வாழ்க்கை மண்ணாகிவிடும் என்பதை நம்பவேண்டியிருக்கிறது.
நம்மை சுற்றி எப்போதும் ' ததாஸ்து தேவதைகள்
', உலவிக்கொண்டிருப்பதாக சாஸ்த்திரங்கள் சொல்கிறன. ததாஸ்து என்றால் ' அப்படியே ஆகட்டும் ', என்று பொருள். எனவே எப்போதும் நாம் நல்லவைகளையே சொல்ல வேண்டும்
என்று நம் முன்னோர்கள் அறிவுருத்தியிருக்கிறார்கள். துன்பம் வந்தால் இறைவன் பெயரை சொல்ல வேண்டும். அன்றி ' ஐயோ ', என்றல் ஆகாது. ஐயோ என்பது யமனின் மனைவி பெயர். இறைவனை அழைத்தால் இறைவன் வருவான். ஐயோ என்றால் யமனின் மனைவிதான் வருவாள். ஆகையால் மன்னார்சாமியை அழைக்க வேண்டுமே தவிர மண்ணார்சாமியை
அழைக்கக்கூடாது. இதைத்தான் ப்ரொனாலஜி வலியுருத்துகிறது. இனி ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பாரம்பரியம், ந்யுமராலஜி,
ப்ரொனாலஜிபடி மூன்றுக்கும் எதிராக அமையாமல் பெயர் சூட்டிப்பார்க்கலாம். நண்பர் திரு தனவேல் என்பவருக்கு கடந்த
12.06.2014 அன்று அதிகாலை 03.18 மணிக்கு கும்பகோணத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு பெயர் சூட்டுவோம். ஜாதகம் கணித்துகொடுத்துள்ளேன்.
முதலில் நற்பலன் தராத கிரகங்க்களை ஒதுக்கலாம். ஆகவே 6.8.12 ஆகிய ஸ்தானாதிபதிகளை ஒதுக்கலாம். முறையே புதன், செவ்வாய், குரு. செவ்வய் லக்னாதிபதி என்றாலும் ஆறில் பகையாகி விட்டார். இனி 6.8.12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் கிரகங்களை
ஒதுக்கலாம். 6.12, , கிரகங்கள் எதுவும் இல்லை. 8ல் இருக்கும் சந்திரனை ஒதுக்கலாம். வக்கிரம் பெற்றதால் சனியையும், பகை பெற்றதால் கேதுவையும்,
கேந்திராதிபத்திய தோஷம் பெற்றதால் சுக்கிரனையும் ஒதுக்கலாம். மீதம் இருப்பது ராகு,
மற்றும் சூரியன் மட்டுமே. இவர்க்ளில் சூரியன்
பூர்வ புண்ணியாதிபதியாகி, இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஆகவே இந்த ஜாதகத்தில் முழுக்க முழுக்க யோக பலன்
தரக்கூடியவர் சூரியன் என்றாகிறது. எனவே பாரம்பரிய
முறைபடி சூரியனை தேர்வு அத்துடன் ஜென்ம நக்ஷத்திரமான அனுஷம் 2ம் பாதத்துக்குரிய ஒலியாகிய
' நி ' ஒலிக்குமாறும், ந்யுமராலஜி முறைபடி
சூரியனின் எண்ணான 1 வரும்படி, ப்ரொனாலஜி முறைபடி ஒரு தெய்வீகமான பெயரை சூட்டலாம்.
' நித்ய ஸ்ரீ '. இது மஹாலக்ஷ்மியை நினைவூட்டும் பெயராக அமைகிறது. நித்தி என்றோ, நித்யா என்றோ இப்பெயரை சுருக்காமல்,
ப்ரொனாலஜிபடி முழுமையாக அழைக்க வேண்டும் என்று இக்குழந்தையின் பெற்றோர் அறிவுருத்தப்பட
வேண்டும். ந்யுமரலஜிபடி இப்பெயரின் கூட்டுத்தொகை
1 வரும். [ D. Nithya Sri = 4 592871
199. இவைகளை கூட்டினால் 55 வரும் இவற்றை கூட்டினால் 10 வரும். அவற்றை கூட்டினால் 1 வரும். ந்யுமராலஜிபடி தந்தையின் முதலெழுத்து சேர்க்கப்படுள்ளது.
] .நித்ய என்றால் தினசரி என்று பொருள். ஸ்ரீ என்பது மஹாலக்ஷ்மியை குறிக்கும். தினமும் மஹலக்ஷ்மி போல் விளங்குபவள் என்ற பொருள்படும்
படி அருமையான பெயரை இப்போது நாம் சூட்டியிருக்கிறோம். இக்குழந்தை பதினாறு பேறு பெற்று பல்லாண்டு காலம்
வாழ்க என வாழ்த்தி, இவ்வாறே பாரம்பரிய முறைபடியும், ந்யுமராலஜி முறைபடியும், ப்ரொனாலஜி
முறைபடியும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டீ மகிழ்வோமாக. நன்றி.
.